1985ம் ஆண்டின் ஒரு மாலைப் பொழுது அது கலிபோனியாவின் சேண்டியோ கோவைச் சேர்ந்த 20 வயதுப் பெண்ணான 'கேத்ரின் டூய்க்கர்' தன் வழமையான புத்தக வாசிப்பில் ஈடுபட்டிருந்தாள். புத்தகத்தின் தலைப்பு ‘Word of Wisdom’ என்றிருந்தது. சான்றோர், சிந்தனையாளர்கள், மதவாதிகள் போன்றோரின் சிந்தனை சொற்களின் தொகுப்பு அது. அவள் வாசித்துக் கொண்டிருந்த தலைப்பு இறையருள் குறித்தும் அதன் நெருக்கம் பற்றியதுமாகும். ஓரிடத்தில கேத்ரினின் வாசிப்பு தடைப்பட்டு நின்றது.
'உம்மை அநாதையாகக்கண்டு, அதிலிருந்து நாம் விடுவிக்கவில்லையா? வழி அறியாதிருந்த உம்மை நாம் நேர் வழியில் செலுத்த வில்லையா?' அடுத்த வசனம் 'நாம் அவருடைய பிடரி நரம்பை விட அவருக்கு நெருக்கமாகவுள்ளோம்.'
இவ்விரு வசனங்களையும் பார்த்த கேத்ரின் திகைத்து நின்றாள். இந்த கூற்றுக்கள் யாரும் ஞானியுடைய கூற்றாக இருக்கலாம் என எண்ணினாள். அந்த வசனங்களின் கீழ் அடைப்புக்குறிக்குள் இருந்த சொல்லை எழுத்துக்கூட்டி வாசித்தாள்.
gfg - A.L. Q.U.R.A.N -
குர்ஆன் என்பது முஸ்லிம்களின் வேத நூல் அல்லவா? அவர்கள் மிகவும் மோசமானவர்கள் என்றல்லவா நினைத்திருந்தேன். அப்படியானால் உண்மைதான் என்ன? இவ்வாறு சிந்தித்த கேத்ரின் இந்த வசனங்களை மீண்டும் மீண்டும் படிக்கத் தொடங்கினாள்.
அடுத்து நிகழ்ந்ததோ அற்புதம்! அவளது கண்கள் குளமாயின! அவளையும் அறியாமல் அழுகையில் எல்லையை அடைந்தாள்! கண்ணீர் அவளின் கண்களில் இருந்து வழிந்து கொண்டே இருந்தது. எம்மை படைத்து அருள் புரிந்த இறைவன் மாதாக்கோயிலில் இல்லையா? எமக்கு மிகவும் அருகாமையில்தானா இருக்கின்றான். எவ்வளவு ஆதரவும் ஆர்வமூட்டும் வசனங்கள்.
அடுத்து என்ன? முஸ்லிம்களின் வேத நூலாகிய குர்ஆனைத்தேடி நூலகத்திற்குச் சென்றாள். குர்ஆன் பிரதியைப் பெற்றவுடன் தாம் பார்த்த வசனங்கள் இவ்வேதத்தில் உள்ளது உண்மைதானா என்று தேடினாள். ஆம் உண்மைதான் என்று அறிந்து கொண்டாள். இவ்வசனத்திற்கான வரலாற்றுப் பின்னனியை படித்த போது கேத்ரினின் கண் கண்ணீரினால் நிறைந்திருந்தன.
இஸ்லாம் மார்க்கத்தை நிலை நிறுத்திய இறுதி இறை தூதரின் வாழ்வு இவ்வளவு சோகமானதா? பின்னர், பண்பாடுஇ ஒழுக்கம் என்பவற்றின் மனிதப் புனிதராக வாழ்ந்த இவரின் நேரிய பாட்டையன்றோ பின்பற்ற வேண்டும். இவ்வாறே கேத்ரின் சிந்தித்துக் கொண்டிருந்தாள்.
இயல்பாகவே அதிகமான புத்தகங்களை வாசிக்கும் கேத்ரின் இஸ்லாம் சம்பந்தப்பட்ட நூல்களைத் தேர்தெடுத்து வாசிக்கத் தொடங்கினாள். 'சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது' என்பதற்கு ஏற்ப அவள் உண்மையைப் புரிந்து கொண்டாள். ஒரு வருட முயற்சிக்குப் பின் 1986ம் ஆண்டு இஸ்லாத்தை ஏற்றாள். 20 வயதான இப்பென் தன் பெயரை சகீனா என்று மாற்றிக் கொண்டாள்.
குர்ஆனிய வசனங்கள் என்னை சிந்தனைக்கு ஆழ்த்தியது போல், உணர்வுகளைத் தூண்டியது போல் வேறு எந்த வசனங்களும் என்னை சிந்திக்க வைக்கவி;;ல்லை. இப்போதும் அந்தக் குர்ஆனிய வசனங்களைப் பார்க்கும் போது என்னோடு பேசுவது போல் உள்ளது.
அந்த வசனங்கள் தான் என்னை உண்மையான மார்க்கத்திற்கு இட்டுச் சென்றது. என்னி;ல் இருந்த பழைய சித்தாந்தங்கள் பழைய சிந்தனைகளை தூக்கி எறி;ந்து விட்டு இவ்அண்டத்தை படைத்த ஆண்டவனின் மார்க்கம் இஸ்லாம் தான் என்பதை புரிந்து கொண்டேன்;; என்று உற்சாகத்துடன் கூறினார் சகீனா.
இவரது ஆறு ஆண்டு முயற்சிக்கு பிறகுசகீனாவின் அன்னையும் தந்தையும் (1992இல்) இஸ்லாத்தைத் தழுவினர். 1996 முதல் சவூதி அரேபியாவில் தன் கணவருடன் சகீனா வாழ்ந்துவருகிறார் இவரது கணவர் லெபனான் நாட்டை சேர்ந்த கட்டடக் கலைஞர் இவர் 1996ல் ஹஜ்ஜுக்கும் சென்றார்.
'அது ஒர் அற்புதக் காட்சிதான்' என்று பெருமிதத்தோடு கூறித் தொடங்கினார், ஹஜ்ஜுக் கடமையும் அதனை மக்கள் ஒன்றாக ஒரிடத்தில் கூடி நிறைவேற்றுவதும், அனைத்துலக இஸ்லாமிய சகோதரத்துவத்தை உறுதிப்படுத்துவதாகும். நோக்கம் ஒன்றேஇ உள்ளத்தின் உந்து சக்தி ஒன்றே இவ்வணக்கம் எம்மை படைத்தவனை ஞாபகப்படுத்தும் மிகவும் உயர்வான வணக்கமாகும்.
உண்மையின் பக்கம் அழைப்பு விடுப்பதை விட்டுஇ தேசியவாதமோ இனப்பாகுபாடோ எதுவுமே இஸ்லாத்தை தடுத்திட முடியாது. அதனால்தான் எனது பூர்வீக மதத்தின் இனவாதம்இ நிறப்பாகுபாடு என்பவற்றிலிருந்து விடுபட்டு உண்மையான சகோதரத்துவத்தைக் காட்டும் இஸ்லாத்தின் பக்கம் வந்து சேர்ந்தேன். இது என் வாழ்வின் அரிய அருட்கொடை என்றால் மிகையாகாது.மகா கடல் போன்ற மக்கள் கூட்டத்தில் ஒருத்தியாக நானும் இருப்பேன் என்று எனது இருபதாவது வயதுக்கு முன் நான் கனவு கூட கண்டதில்லை. இது என் மரணம் வரை நினைவாகும்.
அல்லாஹ், ஒருவரை நேர்வழிப்படுத்த நினைத்து விட்டால் அது ஒரு சிறிய விடயத்தின் மூலமாகவும் நிறைவேற்றி விடுவான். அந்த வகையில் 20 வயது கேத்ரினா என்ற சகீனாவிற்கு அல்-ளுஹா என்ற அத்தியாயத்தின் வசனங்கள் மூலம் நேர்வழிப்படுத்தியுள்ளான்.
ஆனால் இம்முஸ்லிம்கள் குர்ஆனை ஓதுகிறார்கள் அதில் எத்தனை பேர் அர்த்தம் புரிந்து ஓதுகிறார்கள் என்றால் அது மிகக் குறைவாகும். எனவே நாம் குர்ஆனை அர்த்தம் புரிந்து தெளிவாக ஓதுவதன் மூலம் நாம் முழுமையான இஸ்லாமிய மார்க்கத்தில் நுழைவோம்.
நன்றி : நூருல் மனார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக