அல்குர்ஆன் மற்றும் விஞ்ஞான ஒளியில் இறைகோட்பாடு


       இன்றைய நவீன காலத்தில் இத்தலைப்பபானது மிகவும் பொருத்தமானது என நான் கருதுகின்றேன். ஏனெனில் இன்று விஞ்ஞானத்தின் வளர்ச்சியின் காரணமாக பலர் இறை கோட்பாட்டை மறுத்து நாஸ்திகக் கொள்கையின் பால் செல்கின்றார்கள். இன்னும் பலர் தாம் பின்பற்றும் சமயங்களின் அடிப்படையில் இறைகோட்பாட்டை நம்புகின்றனர். இவ்விறை கோட்பாட்டை ஆராயாமல் பின்பற்றுவதனால் நவீன விஞ்ஞானத்துடன் இவ்விறை கோட்பாடு முரண்படுகின்ற போது அவன் அவ்விறை கோட்பாட்டை நிராகரித்து 'இறைவனே இல்லை' எனும் நாஸ்திக சிந்தனையின் பால் கவரப்படுகின்றான். உதாரணமாக சூரியன், சந்திரன், ஐம்பூதங்கள், மரம், சிலை ஏன் மனிதர்களைக் கூட இறைவன் என நம்புகின்றனர். அவற்றில் எந்தவித தனித்தன்மையும் இல்லை என நிரூபிக்கப்படுகின்ற போது அவர்கள் இவற்;றை எல்லாம் புறக்கணித்து விடுகின்றனர். இதன் தொடர்ச்சியாக இறைகோட்;பாட்டையும் புறக்கணித்து விடுகின்றனர். இவ்வாறான மக்;கள் சூரியன், சந்திரன்; போன்றவற்றை கடவுளாக ஏற்காமல் விடுகின்ற விடயத்தில் சரியான கருதுகோளினை எடுக்கின்றனர். ஆனால் அது தொடராக இறைகோட்;பாட்டையே நிராகரிப்பது  சரியான கருதுகோள் அல்ல.

   
 எனவே இவ்வாறான மக்களுக்கு விஞ்ஞான ரீதியில் இறைகோட்பாட்டை விளங்கிக் கொள்ளும் போது நிச்சயமாக அவர்கள் இறைவன் இருக்;கிறான் எனும் உண்மையான இறைகோட்பாட்டை விளங்கிக் கொள்வார்கள். முதலில் இறைவன் இருக்கிறானா? இல்லையா? எனும் வாதத்திற்கு முன்பாக இறைவன் என்னும் பதத்திற்குரிய முழுமையான வரைவிலக்கணம் தெரிந்திருக்க வேண்டும்.

     யாராவது இறைவனை நம்பும் ஒருவரிடத்தில் இறைவனை பற்றி கேட்;டால் அவர் கூறுவார் இறைவன் என்பவன் இவ்வுலகையும் அதிலுள்ள அனைத்தையும் படைத்து யாவற்றினதும் செயல்கள், நடத்தைகள், இயக்கங்கள் பற்றி நன்கு தெரிந்தவன், தீர்க்கமான அறிவுடையவன் என்றெல்லொம் கூறுவார். சுருக்கமாக கூறினால் 'படைத்து பரிபாலிப்பவன் எனக்கூறுவர்;'

     எனவே இறைவனை விஞ்ஞானரீதியில் விளங்க முயற்சிப்போம். உங்களிடத்தில் ஒருவர் ஒரு இயந்திரத்தை தருகிறார் நீங்கள் அவ்வியந்நிரம் பற்றி அறிந்திருக்கவில்லை. இவ்வியந்திரம் பற்றி யாரால் முழுமையாக கூறமுடியும் என்று கேட்டால் அதற்கு உங்களது பதில் ';இவ்வியந்திரத்தை உற்பத்தி செய்தவர்'என்று அமையும். அப்போது நடைமுறை  விஞ்ஞானத்துடன்; சில விடயங்ககiளை ஒப்பிட்டு நோக்குவோம்.
       

01. விண்ணியல் : 
   இந்த பிரபஞ்சம் எவ்வாறு உருவாகியது ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள் அதனை பெரும் வெடிப்பு கொள்கை மூலம் விளக்குகின்றனர். அதாவது முதலில் நட்சத்திரக்கூட்டம் இருந்து பின்னர் அதில் பெரும் விரிசல் ஏற்பட்டது. எனவே அதிலிருந்தே இவ்வுலகமும் சூரியனும் நட்சத்திரமும் உருவாகியது என விளக்குகிறது அக்கொள்கை. இக்கோட்பாடானது விஞ்ஞானிகளால் 1970இன் ஆரம்பக் கட்டத்திலேயே உறுதிப்படுத்தப்பட்டது. 1400 வருடங்களுக்கு முன்னர் இது பற்றி கூறப்பட்டுள்ளது.       (ஸூரதுல் அன்பியா-21)

விண்ணியல் சம்பந்தமாக இன்னும் பல புதிய விஞ்ஞான உண்மைத் தகவல்கள் இப்புத்தகத்துடன் ஒத்துப் போகின்றது. எனவே இத்தகவல்களை இப்புத்தகத்தில் யார் சொல்லியிருப்பார்.

02. இயல்பியல் ஃ இரசாயனவியல் :
   அணு சம்பந்தமாக 23 நூற்றாண்டுக்கு முன்னர் கிரேக்க விஞ்ஞானிகள் மேலும் பிரிக்க முடியாத துணிக்கை என கூறினர். ஆனால் நவீன விஞ்ஞானிகள் அணுவை மேலும் உப துணிக்கைகளாக பிரிக்க முடியும் எனக் கண்டு பிடித்துள்ளனர்.இது நான் படிக்கும் புத்தகத்தில் 2 இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. (ஸூரதுஸ் ஸபாஹ்-34, 3)

'வானங்களிலோ பூமியிலோ (உள்ளவற்றில்) அணுவளவும் அதை விட்டு மறையாது, இன்னும் அதை விடச் சிறியதோ பெரியதோ (ஒவ்வொன்றும் லவ்ஹூல் மஹ்பூள் என்னும்) தெளிவான ஏற்பாட்டில் இல்லாமல் இல்லை'
இதில் அணுவை விடச் சிறியது ஒன்று உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.
ஆகவே இவ்விஞ்ஞான உண்மை சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடிக்கப்பட்டது. ஆகவே இவ்விடயம் குறித்து 1400 வருடங்களுக்கு முன்னரே இப்புத்தகத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. இது பற்றி யார் குறிப்பிட்டிருப்பார்கள்?

03.நீரியல்:
  நாங்கள் நீர்ச் சுழற்சி பற்றி அறிந்திருக்கின்றோம். நீர் ஆவியாகி மேலே சென்று மேகங்களாக மாறி அவை இணைந்து ஒடுங்கி மழையாகப் பொழிகிறது. என நாம் பள்ளிப் புத்தகங்களில் படித்திருக்கின்றோம். இது முதன் முதலில் 1980 இல் பேனாட் பாலசி எனும் விஞ்ஞானியால் முன் மொழியப்பட்டு உறுதி செய்யப்பட்டது. அதற்கு முன்னர் தவறான கொள்கையே காணப்பட்டது. (ஸூரதுர் ரூம்-30, 48)
'கடவுள் எத்தகையவன் என்றால் அவன் காற்றுக்களை அனுப்பி வைக்கிறான். பின்னர் மேகங்களை அவை ஓட்டுகின்றன. பின்னர் நாடியவாறு மேகங்களை வானத்தில் பரத்துகிறான். பின்னர் அதன் மத்தியில் இருந்து மழை வருவதை நீர் கண்;பீர்.'
இவ் விடயம் நான் படிக்கும் புத்தகத்தில் 1400 வருடங்களுக்கு முன்னரே பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பற்றி யார்  இப்புத்தகத்தில் குறிப்பிட்டு இருக்க முடியும்.

04.கடலியல்:
  சமீபத்தில் கடலியல் விஞ்ஞானிகள் கடலில் சில இடங்களில் அதாவது இரு கடல்கள் சந்திக்கும் இடங்களில் இரண்டும் ஒன்றுடன் ஒன்று கலக்காத வண்;ணம் திரை ஒன்று உள்ளது எனக் கண்டு பிடித்துள்ளனர். இது பற்றி நான் படிக்கும் புத்தகத்தில் (ஸூரதுர் ரஹ்மான்-20,55,79) வசனங்களில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

'இரு கடல்களை அவை இரண்டும் சந்திக்க அவனே (الله) விட்டு விட்டான். ஆயினும் அவை இரண்டுக்கிடையில் திரை உண்டு. அவை இரண்டும் மீறி விடாது.' இவ் விடயம் பற்றி இதில் யார் குறிப்பிட்டு இருக்க முடியும்.

05.உயிரியல்:
  அனைத்து உயிரினங்களும் தண்ணீரால் உருவானது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதாவது ஒவ்வொரு உயிரியினதும் மூலக்கூறு என்பது உயிர் அணுவாகும். இவ்வுயிர் அணுவில் Cyto plasm உள்ளது. இது 80% நீரினைக் கொண்டுள்ளது. எனவும் இன்றைய விஞ்ஞானம் கூறுகின்றது. நான் படிக்கும் புத்தகத்தில் 1400 வருடங்களுக்கு முன்பாக (ஸூரதுல் அன்பியா-21,30)வது வசனங்களில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 'உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து உருவாக்கினோம்.' ஆகவே இது பற்றி முதலில் யார் குறிப்பிட்டிருக்க முடியும்.
  மேலும் கருவியல் சம்பந்தமாகவும் அப்புத்தகத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. (ஸூரதுல் அலக்-1,2,96) வசனங்களில் 'நாம் மனிதனை அட்டைப் பூச்சி போல் ஒட்டிக் கொண்டிருக்கும் இரத்தக் கட்டியிலிருந்து படைத்தோம்.' எனக் கூறப்பட்டுள்ளது.   1970 - 1980 காலப் பகுதியில் வாழ்ந்த தலை சிறந்த உடலியல் நிபுணர் Dr. கீத்மோர். மேற்கூறப்பட்ட விடயம் சம்பந்தமாக கருவியல் நிபுணர் டாக்டர் கீத்மோரிடம் வினவப்பட்டது. அவர் இது சம்பந்தமாக விடயங்களை ஆராய்ந்து இதிலுள்ள பெரும்பாலான விடயங்கள் உண்மை என்றும் சில விடயங்கள் உண்மை என்றோ பொய் என்றோ கூற முடியாது உள்ளது எனவும் கூறினார்.

  அவர் மேலும் கூறும் போது இது சம்பந்தமாக 30 வருடங்களுக்கு முன்னர் கேட்டிருந்தால் இது பற்றி நான் எதுவும் கூறியிருக்க மாட்டேன் என்றார். ஆகவே அவர் மூலம் கடந்த நூற்றாண்டில் உறுதிப்படுத்தப்பட்ட இவ்வுண்மை 1400 வருடங்களுக்கு முன்னர் நான் படிக்கும் புத்தகத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. இவ்வாறு நவீன விஞ்ஞானத்துடன் ஒன்றித்து போகக்கூடிய பல விடயங்களை இப்புத்தகத்தில் யார் குறிப்பிட்டு இருப்பார் என்று உங்களிடம் கேட்டால் நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்? அப்புத்தகத்தை உருவாக்கியவர் என்று தானே கூறுவீர்கள்.

   ஆம், அப்புத்தகம் வேறு ஒன்றுமில்லை இந்த உலக மக்களுக்கு நேர்வழி காட்டியாக வந்த அல்குர்ஆன் ஆகும். இதனை இறக்கி அருளியவன் சங்கைக்குரிய الله ஆவான். இக்குர்ஆன் ஆகிய இறுதி வேதத்தை பற்றி அல்லாஹூ தஆலா கூறும் போது இதை அவனே இறக்கி வைத்தான் என்றும் இது நேர் வழிகாட்டி என்றும் கூறுகிறான்.

   மேலும் இவ்வேதத்தில் இறைக்கோட்பாட்டின் 4 சிறப்பியல்புகள் ஸூரதுல் இஹ்லாஸ்-(1-4) வசனங்களில் விளக்கப்பட்டுள்ளது. இது இறையியலின் உறைகள் ஆகும். இச்சிறப்பியல்புகள் 4 உம் வருமாறு:

1) அவன் அல்லாஹ் ஏகன். 
2) அவன் தேவைகள் அற்றவன்.
3) அவன் பெறவுமில்லை, பெறப்படவுமில்லை.
4) அவனுக்கு நிகராக ஒப்பாக எவருமில்லை.


   ஆகவே இவ்இறையியலின் உரைகளினால் கடவுள் என்று பலராலும் நம்பப்படும் ஒவ்வொன்றையும் நாம் உரசிப் பார்க்கும் போது பொய்யான கடவுள்களை அறிந்து கொள்ள முடியும். ஆகவே இந்நான்கு நிபந்தனைகளிலும் வெற்றி பெறக் கூடிய வல்ல இறைவன் யார்? சொல்லுங்கள்......          
                                       
                                       لا إله الا الله محمد الرسول الله

நன்றி : நூருல் மனார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
YASS இணைய வலயமைப்பு © 2012 | Designed by Canvas Art, in collaboration with Business Listings , Radio stations and Corporate Office Headquarters