பெண்ணே புது அத்தியாயம் படை...


               
சில்லறை காசுக்காகவும்
    சிகப்பு தோலுக்காகவும்
அலையும் ஆடவன் மீது
   சீறிப் பாய இன்னும் ஏன் தாமதம்?


பெண்ணிணம் அடிமையினமா....?
     அடிமைத்துவம் அழிந்தது
அண்ணலின் வருகையால்
    உன் உரிமைக்காகப்
போராட இன்னும் ஏன் தாமதம்


பாலை வனம் பறந்து
    நேசித்த உறவையும்
நேசிக்கும் உறவையும்
    பிரிந்து பணம் படைக்கிறாய்
அவன் பருவ பசிக்கு...


நீ  பகடைக்  காயாவதை
     பகுத்தறிவால்  பகுத்தறிய
இன்னும்  ஏன்  தாமதம்...?


 பெண்ணே...
 நீ காசு கொடுத்து
தாயாவதா...?
 பூப்  போன்றவள்...
புதுமைகள் புரிதலில் பெண்ணினம்
 துளிர்க்கும் என்றால்
இன்னும் ஏன் தாமதம்...?


அல்லாஹ்
உனக்களிக்க சொன்ன
உரிமைகளை கேட்க
இன்னும் ஏன் தாமதம்?
உன் உரிமை
மஹர் அதைக் கேள்!
ஆடவர் மகர் தந்து
மணக் கட்டும்?
புது அத்தியாயம் பிறக்கட்டும்...

நன்றி : நூருல் மனார்    


1 கருத்துகள்:

 
YASS இணைய வலயமைப்பு © 2012 | Designed by Canvas Art, in collaboration with Business Listings , Radio stations and Corporate Office Headquarters