கனவாகிப் போகும்-எம்
உரிமைகள் உயிர்
பெறுவது எப்போ?
சிந்தியுங்கள்...
சமூகமும் இஸ்லாமும்
வலுப்பெற
எம் ஊடகத்தினை
நிலை நாட்டுங்கள்...
பிற ஊடகங்களின்
புறக்கணிப்புக்களால்
காயமடையும் எம்
சமூகத்திற்கு
முகவரி கொடுங்கள்...
சமூக சீர்கேடுகளால்
கழன்று போகும்
ஒழுக்க விழுமியங்களால்
எத்தனை அவலங்கள்...
வறுமையும் கொடிய வியாதியும்
அங்கீகாரங்களை
தணிக்கை செய்வதற்காய்
உயிரூட்டுங்கள்...
இஸ்லாமிய இராச்சியங்களின்
சோகங்களை விசாரிப்பதற்காய்
எமக்கான உரிமைகளை
விஸ்தரியுங்கள்...
இயற்கை அனர்த்தங்களை
இஸ்லாமிய பார்வையில்
ஊடுறுவதற்கு
உதவ வாருங்கள்...
இஸ்லாமிய நாடுகளில்
பொருளாதார சுரண்டல்களை
நசுக்குவதற்கான முயற்சிகளில்
அம்பை விடுங்கள்...
நன்றி : நூருல் மனார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக