(நபியே) மது பானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். நீர் கூறும்: அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களும் உண்டு. ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனை விட பெரியது.
சூதாட்டம் இரு வகைப்படும் ஒன்று நண்பர்களோடு சேர்ந்து சூதாடுவது. மற்றொன்று மனம் ஒரு வித வெறித்தன்மையை தூண்டிக் கொண்டிருப்பது.
சூதாட்டக்காரர்கள் தங்களின் வருமானம், சேமிப்பு ஆகியவற்றை இழப்பதோடு தீயவனாகவும் காட்சியளிப்பார்கள். இருந்தாலும் எப்போதவது ஒரு நாள் சூதாட்டத்தில் ஜெயிப்போம் என்ற நம்பிக்கை அவருக்குள்ளே எரிந்து கொண்டிருக்கும். இவர்களுக்கு எதிர்புணர்ச்சி, சிறு பிள்ளைதனம், சட்டதிட்டங்களையும் சம்பிரதாயங்களையும் உடைத் தெரியும் மனப் போக்கு, பொறுப்பற்ற தன்மை ஆகியவை காணப்படும். வெளிபார்வைக்கு இவர்கள் நட்புடனும் அன்பானவர்கள் போலவும் காட்டிக் கொள்வார்கள்.
சுயலாபம், ஆதாயம் கருதியே பழகும் இவர்கள் கேட்கும் போது பணம் கொடுத்து உதவாதவர்களை கைவிட்டுவிடவும் அவர்கள் மீது அபாண்டமான பழிகளைச் சுமத்தவும் அஞ்சமாட்டார்கள். ஒரே நாளில் சூதாட்டத்தை இழந்தவற்றை எல்லாம் மீட்டு லட்சாதிபதி ஆவேன் என்று உறுதியாகக் கூறுவார்கள். தோற்பதால் கவலைப்பட மாட்டார்கள்.
தோற்பதில் ஒரு தனி இன்பத்ததை பெறுவதால் இவர்கள் தனக்குத்தானே துன்பத்தை வளர்த்துக் கொண்டு இன்பம் பெறுவார்கள். இதனை 'தன் வதைச் சுகம்' நோய் உள்ளவர்கள் என்று உளவியலாளர்கள் குறிப்பிடுகி;ன்றனர்.
சூதாட்டகாரர்கள் குழந்தை பருவத்தில் அன்பிற்காக ஏங்கியவர்களாகவும், புறக்கணிக்கப்பட்டவர்களாகவும், உதவிகளை பெற முடியாதவர்களாகவும் இருப்பதை இவர்களின் வாழ்க்கை வரலாறு மூலம் அறியலாம். வளர,வளர இவர்கள் மற்றவரின் நலம் பற்றிய அக்கறை சிறிதும் இல்லாதவர்களாக மாறி வருகின்றனர்.
சூதாட்டம் பற்றி மன நோய் பிரிவு அட்டவணையில் (DSMIII) 'அவதியுறும் நோய்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது புரிகிறதா? சூதாட்டத்தை பற்றி குர்ஆன் எச்சரித்திருப்பது? (லாட்டரி சீட்டு பித்து பிடித்து அலைபவர்க்ள அதிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள இறைதியானத்தை மேற் கொள்வதன் மூலம் விடுதலை அடைந்து நிரந்தரமாக குணமடைய முடியும்.)
சூதாட்டத்தில் பல இரசாயன தீமைகளும் நடை பெறுகின்றது. சூதாட்டத்தில் காய்களைக் குலுக்கிப்போடும் போதும் அல்லது சீட்டுக்களை எடுத்துப் போடும் பொழுது ஒவ்வொரு முறையும் சூதாடுபவரின் உடம்பில் 'அட்ரீனலின்' என்ற ஹோர்மோன் சுரந்து இரத்த நாளங்களில் கலக்கிறது. சூதாட்டத்தில் வெற்றி பெற வேண்டும். என்றும் வற்றாத ஆசையை 'என்டார்ஃபின்கள்' சுரந்து தூண்டுகின்றது. இறுதியில் சூதாட்டத்தில் தோல்வியை தழுவுகிறவர்களுக்கு 'செரட்டோனின்' அளவு மூளையில் குறைந்து போகிறது. இதனால் சூதாடிகள் மேலும் மனத்தளர்ச்சி நோய்க்கு ஆளாகிறார்கள்.
சூதாட்டம் மூளை, நுரையீரல், இதயம், குடல் போன்ற அனைத்து உள் உறுப்புக்கள் சார்ந்த முறையிலான போதை அடிமைத்தனமாகும். இது சூதாடுபவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது என்பதுதான் இதில் ஒரு மீட்புக் காரணி.
மனிதனுக்கு ஒரு சிக்கல் குறித்து தனது இயலாமையை ஒப்புக் கொள்ளும் போது தான் மது மற்றும் போதை அடிமைத்தனத்திலிருந்து மீட்சி கிடைக்கும் திருப்பு முனைவருகிறது. இப்படிப்பட்ட நேர்மை உணர்வு ஆண்ம விழிப்புணர்வால் தான் வர முடியும். இது ஒரு முறை நடந்து விட்டால் அதுவே மீட்சி திட்டத்தின் முற்றுப்புள்ளியாக விளங்கும் உண்மையான இறை தியானம் (திக்ரு) ஆகும்.
மனிதர்களுக்கு திருக் குர்ஆன் இதைத்தான் போதிக்கிறது. மது மற்றும் போதை அடிமை தனத்திலிருந்து மனித குலத்தை காக்க மது ஒழிக்கிறது மிருகமும் தொடாத மதுவை மனிதன் குடிப்பதை திருக் குர்ஆன் தடை செய்திருப்பது அறிவியல் ரீதியான காரணமாக இன்று போற்றப்படுகின்றது.
நன்றி : நூருல் மனார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக