ஐரோப்பா இடைக்காலத்தில் அறியாமை எனும் இருளை விட்டு வெளிவரக் காரணமாக இருந்ததற்கு முஸ்லிம்களின் கலை, முஸ்லிம்களின் விஞ்ஞானம், முஸ்லிம்களின் இலக்கியம் ஆகியவற்றிற்கு அது (ஐரோப்பா) பெருமளவில் நன்றிக் கடன் பட்டிருக்கிறது.
ஏனென்றால், 8-12ம் நூற்றாண்டு காலப்பகுதியானது 'ஐரோப்பா அறியாமை எனும் இருட்டில் தத்தளித்துக் கொண்டிருந்த காலப்பகுதியாகும்' என இன்றும் வரலாறு கூறுகின்றது.
இக்காலப்பகுதியில் முஸ்லீம்களின் கண்டுபிடிப்புக்கள் அசாத்தியமானவைகளாகும். இந்த நான்கு நூற்றாண்டுகளிலும் வரலாறு சான்று பகரும் அளவுக்கு முஸ்லீம்கள் வளர்ச்சியடைந்திருந்தார்கள் என்பதற்கு இஸ்லாம் மார்க்கமும், அவர்களது வேதமும்தான் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

1 அல்ராஜி (ரேஜஸ்) 844-946 மருத்துவம்
2 இப்னுசீனா (அவிசென்னா) 980-1037 மருத்துவம்
3 அல்ஸஹ்ராவி (அல்புகேஸிஸ்) 936 அறுவைசிகிச்சை
4 இப்னு {ஹஜ்ர் (அவன்ஜோர்) அறுவை சிகிச்சை
5 முஹம்மது சகரிய்யா யாஸீன் மருத்துவம்
6 அலி இப்னு அப்பான் மருத்துவம்
(அலி இப்னு அப்பான் எனும் மருத்துவ மேதை அக்காலத்திலேயே 20 பாகங்களைக் கொண்ட ஒரு மருத்துவ நூலை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்).
உதாரணமாக 'கிதாபுத்திப்பி' (மருத்துவம் பற்றியது) என்ற அத்தியாயத்தைக் குறிப்பிடலாம்.
இப்னு ஸீனாவின் 'அல்கானூன்' எனும் மருத்துவ நூல் ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் 17ஆம் நூற்றாண்டு வரை மருத்துவத்துறைக்கான பிரதான மூலதார நூலாக விளங்கியது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக