YASS மிஹ்ரஜான்

அஸ்ஸலாமு அலைக்கும்.
..
சமூக சேவைகளுக்கான இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் 

YASS மிஹ்ரஜான்

நிகழ்வு நாளை காத்தான்குடி கடற்கரையில் அன்வர் பள்ளிவாயல் 

முன்பாக 

இடம்பெற உள்ளது. அனைத்து சகோதரர்களையும் குடும்பத்தினருடன் 

கலந்து 

கொண்டு போட்டிகளில் பரிசுகளை அள்ளிச் செல்லுமாறு அன்புடன் 

அழைக்கிறோம்.

0 கருத்துகள்

YASS 2nd Ladies Bayan (27.05.2012)

YASS அமைப்பின் ஏற்பாட்டில் பெண்களுக்கான உளவியல் விழிப்புணர்வு சொற்பொழிவு
நிகழ்வு இன்று 27.05.2012 ஞாயிற்றுக் கிழமை மெத்தைப்பள்ளி வீதி யில்
அமைந்துள்ள சமூக சேவைகளுக்கான இளைஞர் அமைப்பின் காரியாலயத்தில் அமைப்பின்
செயலாளர் AGM. மின்ஹாஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில்
'உளவியல் நோக்கில் பெண்களும் குழந்தை வளர்ப்பும்' எனும் தலைப்பில் ALM. றிஸ்வி
BA Dip. in Counseling அவர்கள் சொற்பொழிவாற்றினார்கள். இரண்டாவது வாரமாக
இடம்பெற்ற பெண்களுக்கான பயான் நிகழ்வில் பெருந்தொகையான சகோதரிகள் கலந்து
கொண்டனர். இந்த பயான் நிகழ்வு பிரதி வாரமும் புதன் கிழமைகளில் இடம்பெறுகின்றமை
குறிப்பிடத்தக்கது. 

0 கருத்துகள்

அஸ்ஸலாமு அலைக்கும். எமது YASS அமைப்பின் இணைய வானொலிக்கு உங்கள் அனைவரயும் அன்புடன் அழைக்கின்றோம்...
நீங்களும் எமது YASS FM  ஐ செவிமடுக்க இந்த இணைய முகவரிக்கு வாருங்கள்...

      www.yassfm.listen2myradio.com

0 கருத்துகள்

YASS அமைப்பின் முதலாவது பெண்கள் பயான் நிகழ்ச்சி

YASS அமைப்பின் ஏற்பாட்டில் எமது சகோதரிகளிடத்தில் மார்க்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் எமது பிரச்சாரப் பிரிவினால் வராந்த பயான் நிகழ்வு ஒன்று காத்தான்குடி-03, மெத்தைப்பள்ளி வீதியில் அமைந்துள்ள YASS அலுவலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

எமது சமூக சேவைகளுக்கான இளைஞர் அமைப்பின் (YASS) தலைவர் MJM. மாஜித் அவர்களின் தலைமையில் இன்று (16.05.2012) அஸர் தொழுகையை தொடர்ந்து ஆரம்பமான இந்நிகழ்வில் மெத்தைப்பள்ளிவாயல் பேஷ்-இமாம் மௌலவி அல்ஹாஜ் AGM. அமீன் (பலாஹி) அவர்களால் 'இன்றைய உலகில் பெண்களின் பங்களிப்பு' எனும் தலைப்பில் சிறப்பு பயான் நிகழ்த்தப்பட்டது.

இந்நிகழ்வில் பெருந்தொகையான சகோதரிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு வாராந்தம் தொடர்ந்து நடைபெற இருப்பதுடன் அல்குர்ஆன் விளக்க வகுப்புகளையும், கேள்வி பதில், போட்டி நிகழ்ச்சிகளையும் நடாத்துவதற்கு எமது அமைப்பு ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளது.

1 கருத்துகள்

வாழ்க்கை ஒரு சோதனையா? சாதனை புரிவோம்!

இன்றைக்கு நம்மில் பலருக்கு பல பிரச்னைகள். வீடில்லா சுமை, திருமணமாகாத பிரச்னை, நோய், தொழிலில் முன்னேற்றமின்னை, வேலை இல்லை, மனைவி சரியில்லை, கணவன் சரியில்லை, பிள்ளைகள் சரியில்லை என்பது போன்ற பல பிரச்னைகள். இவையெல்லாம் வாழ்க்கையின் பெரும் பிரச்னைகளல்ல. எப்படி?..! என்ற உங்கள் கேள்வி எனக்குக் கேட்கிறது. பொறுங்கள்.
இந்தப் பிரச்னைக்கு மட்டுமல்ல, வாழ்வின் எந்தப் பிரச்னைக்கும் முகம் கொடுப்பது நாம் எமது வாழ்வை எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதில் தங்கியுள்ளது. அதனை ஒரு சோதனையாக நாம் கருதினால் எல்லாமே சோதனையாகத் தான் தெரியும். அன்றி சாதனை செய்வதற்கு அல்லாஹுத்தஆலா தந்த ஒரு சந்தர்ப்பம் என்று கருதினால் அதுவும் அப்படியே ஆகும். ஏனெனில் அல்லாஹ் அல்குர்ஆனில் எமக்கு வாக்களித்திருக்கின்றான்.
மனிதனுக்கு (இவ்வாழ்வில்) முயற்சித்தவையேயன்றி வேறில்லை (53:39).
சோதனைகளைச் சாதனையாக்குவது எப்படி? அடிப்படையில் நாம் சில விஷயங்களை கவனத்திலெடுக்க வேண்டும்.
முதலாவதாக,
அல்லாஹ் நம்மால் தாங்க முடியாத கஷ்டங்களைத் தருவதில்லை. இது அல்குர்ஆனில் அல்லாஹ் எமக்களித்திருக்கும் வாக்குறுதி. அவன் வாக்குறுதி மீறுபவனல்ல.
அல்லாஹ் ஒரு நப்ஸுக்கு அதன் சக்திக்கு மீறி நிர்ப்பந்திப்பதில்லை. (அல் பகறா : 286).
எனில், இதை இன்னொரு விதமாகக் கூறப் போனால் எந்தக் கஷ்டத்தையும் அல்லாஹ் தரும் போது அதைத் தாங்கக் கூடிய சமாளிக்கக் கூடிய சக்தியையும் எமக்குத் தந்தே இருப்பான். அந்தத் திறனை நாம் உணர்ந்து கொண்டு, தெரிந்து கொண்டு செயல்படுவதில் தான் எமது திறமை சோதிக்கப்படுகிறது. இது முதலாவது காரணம்.
இரண்டாவதாக,
எந்தக் கஷ்டமுமே, அல்லாஹ் அறியாமல், அவன் அனுமதியின்றி எமக்கு நேர்வதில்லை. எமக்கு நிகழும் நன்மைகள் யாவும் அவனிடமிருந்தே வருபவை. தீமைகள் யாவும் எமது கைகள் சம்பாதித்தவை. எனில் எமது சக்தியை மீறி நடக்கக் கூடியவை யாவும் அவனிடமிருந்தே வருகின்றன. அதாவது, அவற்றில் எதுவுமே தீயதாக இருக்க முடியாது. எந்தப் பெரிய கஷ்டத்திலும் ஒரு லநவ மறைந்திருக்கும். எந்தச் சோதனையிலும் அல்லாஹ்வின் ரஹ்மத் ஒளிந்திருக்கும். அதைக் கண்டு கொண்டு அதன் பலாபலன்களைப் பெற்றுக் கொள்வது தான் இவ்வுலக ரகசியம். இன்னொரு விதமாகச் சொல்லப் போனால் எமக்கு வரும் கஷ்டங்கள் யாவும் அல்லாஹ் எனும் அளவற்ற அருளாளனான பரீட்சகர் எமக்களிக்கும் ஒரு பரீட்சை. அவை யாவற்றையும் எப்படியும் மேற்கொண்டு வெற்றி கொள்ளலாம். ஏனெனில் அல்லாஹ் எம்மை எப்போதும் கண்காணித்தவனாக, அக்கஷ்டங்கள் எங்களை மீறி விடாமல் எமது மனப்பாங்கிற்கேற்ற வழிவகைகளை அமைத்துக் கொடுப்பவனாக என்றும் எப்போதும் எம்முடனேயே இருக்கின்றான் என்ற அந்த மனப்பான்மையை நாம் உறுதிப்படுத்திக் கொள்ள முடியுமாயின் இவ்வாழ்வின் சோதனைகள் யாவுமே ஒரு தற்காலிகப் பரீட்சையாக வெற்றிக்கு வித்திடும் படிக்கற்களாக எமக்குத் தோற்றும்.
மூன்றவதாக,
முக்கியமாக, இந்த வாழ்வு மறுவுலக வாழ்வின் படிக்கல் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இவ்வுலக வாழ்வு மறுவுலக வாழ்வுடன் ஒப்பிடும் போது ஒரு ஈயின் ஒரு இறக்கைக்குக் கூட சமானமானதல்ல. எனவே பெரிதாகத் தெரியும் எதுவுமே உண்மையில் பெரிய விஷயங்களல்ல. எமது வாழ்வின் அதாவது ஈருலக வாழ்வின் முழப் பரிமாணத்தையும் கணக்கிடும்போது இவையெல்லாம் பெரிய விஷயங்கள் அல்ல என்பது எமக்கு நினைவிலிருக்க வேண்டும். இளம் வயதில் பெரிதாகத் தெரிபவை பின்னால் தூசாய்ப் போகும். இன்று கவலைக்குரியவை நாளைக்கு சிரிப்பாய் மாறும். இதற்கெல்லாம் உறுதுணையாய், அல்லாஹ் எமக்கு மறதி, தூக்கம், மனமுதிர்ச்சி இப்படியான நிஃமத்துக்களை தந்துள்ளான். இவை யாவற்றினதும் பாதிப்புகள் பலாபலன்களையெல்லாம் அன்றே சிந்தித்து, உணர்ந்து கொண்டால் இவ்வாழ்க்கையின் எந்தப் பிரச்னைகளையும் எதிர் கொண்டு வெற்றி கொள்வது கஷ்டமாகத் தெரியாது.
இவையெல்லாம் சாதாரண மனிதனுக்கெட்டாத பெரும் தத்துவங்களாகத் தெரியலாம். இவற்றை யதார்த்தத்திற்குக் கொண்டு வருவது எப்படி? மிக இலகு!
அடிப்படையில் இந்த மாற்றத்தை உங்கள் உள்மனம் வேண்ட வேண்டும். அதற்கான துஆக்கள் பலவற்றை எம்பெருமானார் (ஸல்) அவர்கள் சொல்லித் தந்திருக்கின்றார்கள். மிகச் சுலபமான ஓரிரு துஆக்களைக் குறிப்பிடுகிறேன்.
சூரா பாத்திஹாவில் வரும்,
இய்யாக்க நஃபுது வ இய்யாக்க நஸ்தஈன்
நேர்வழியில் சீராக நடத்தி வைப்பாயாக, என்ற வசனங்களை ஓதும் ஒவ்வொரு முறையும் மானசீகமாக அல்லாஹ்விடம் இறைஞ்சுங்கள்.
சூரா அத்தலாக்கின் 2-3 வசனங்களை
வமய் யத்தகில்லாஹ யஞ்அல்லஹு மக்ரஜா
அதன் கருத்தை மனதில் கொண்டு அல்லாஹ்வின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு ஓதி வாருங்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் அல்லாஹும்ம இன்தக அஹ்தஸபு முஸிப்னீ ஃபஅஜ்ஸனீ ஃபீஹா வப்தல்னீ ஃபீஹா ஐஹரா
நாம் அல்லாஹ்விடம் இருந்தே வந்திருக்கிறோம். அவனிடமே மீளவிருக்கிறோம். யா அல்லாஹ்! இந்தப் பிரச்னையை நாம் உன்னிடம் சாட்டுகிறேன். இதற்குக் கூலியும் தந்து இதையே நல்லதாக மாற்றியும் வைப்பாயாக!
இவற்றை ஓதும் அதே வேளையில் குர்ஆனை உங்கள் உற்ற துணையாக்கிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் குர்ஆனின் ஒரு பக்கமாவது கட்டாயம்ஓதுவது என்று பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். அதே சமயம் குர்ஆன் மொழிபெயர்ப்பையும் வாசிப்பதைத் தவறாது அன்றாடப் பழக்கத்தில் கொண்டு வாருங்கள். குர்ஆன் விளக்கம் கொண்ட புத்தகங்களை வாங்கியோ தெரிந்தவர்களிடம் இரவலாகப் பெற்றுக் கொண்டோ வாசித்து வாருங்கள்.
அல்லாஹ்வுக்குமிகவும் விருப்பமான இந்த விசயங்களைச் செய்து கொண்டு வர ஷைத்தான் உங்களை விட்டு வைக்க மாட்டான். தனிhயகச் செய்ய முயன்றால் மனசு ஊசலாட்டம் காட்டும். எனில் இயன்றவரை இன்னும் சிலரைச் சேர்த்துக் கொள்ளுங்கள். வீட்டாரையோ தோழிகளையோ அல்லது அண்டை அயலாரையோ சேர்த்துக் கொள்ளுங்கள். ஒருவருமே இல்லாவிட்டால் பேனா நண்பர்களையாவது சேர்த்துக் கொண்டு ஒருவருக்கொருவர் ஊக்கமும் எச்சரிக்கையும் செய்து கொள்ளுங்கள்.
மிக முக்கியமாக தொலைக்காட்சி பார்ப்பதைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். செய்தி, படிப்பினை போன்ற விஷயங்களுக்கல்லாமல் வெறுமனே சினிமா, பாடல்கள் இவையெல்லாம் தொகை;காட்சியில் ஒளிபரப்புகிறார்கள். எமக்கும் வேலையில்லைதானே என்று இந்தக் குட்டிச் சாத்தானின் முன் அமர்வதை நிறுத்திக் கொள்ளவும். இப்லீஸ் முதன் முதலாக அல்லாஹ்வுக்கு மாறு செய்து, அவனுக்கு முன்விட்ட சவால் என்ன? ஆதமின் மக்களுக்கு அழகானதை அசிங்கமாகவும் தோன்றச் செய்வேன் என்பது தானே! அந்தச் சங்கல்பத்தை அவன் செயல்படுத்தும் மிக இலகுவான சாதனம் இந்த தொலைக்காட்சி.
குடும்பம், வெட்கம், மானம், இறைபக்தி இவற்றையெல்லாம் அவசியமற்றவையாக்கி கண்டவனோடு ஓடிப்போவதையும், குடும்பத்தை எதிர்த்து மாற்றானோடு காதல் கொண்டு வெற்றி கொள்வதையும் நியாயப்படத்தி, இது தான் வாழ்க்கை என்ற மாயத் தோற்றத்தை உருவாக்கும் பயங்கர சாதனம் இந்த தொலைக்காட்சி. சங்கீதமும், ஆண்-பெண் கவர்ச்சியும், கீழ்த்தர பாலின உணர்வுகளும் அன்றாட வாழ்வின் சர்வசாதரண நிகழ்வுகள். எனவே நாமும் அவற்றில் ஈடுபட்டாக வேண்டும் எனும் போதையை ஊட்டும் ஒரு சாத்தானின் கைங்கரியம்.
என் வாழ்வில் நான் வெற்றி பெற வேண்டுமானால் என் மனதை நான் முதலில் வெற்றி கொள்ள வேண்டும் என உணர்ந்த ஒவ்வொருவரும் முதன் முதலில் செய்ய வேண்டியது, நம் வீட்டுக்குள் சுகமாக வீற்றிருக்கும் இந்தச் சாத்தானுக்கு அடிபணிவதில்லை என்ற கங்கணத்தை மனதில் கொண்டு அதை அமுல்படுத்துவதுதான், வீட்டில் வேலையற்றிருக்கும் பெண்களின் மனதை வழிகெடுக்கும் பெரிய தஜ்ஜால் இந்த தொலைக்காட்சி. யார் வாழ்வில் வெற்றி பெற விரும்புகிறீர்களோ, முதலில் இப்படியான விஷயங்களில் மனதைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி பெறுவது அவசியம்.
வீட்டில் மற்ற எல்லோரும் பார்க்கிறார்களே நான் எப்படிப் பார்க்காமல் இருப்பது? என மனது ஊசலாடும். இத்தகைய ஊசலாட்டங்களை எடுத்துக் கொண்டு வெற்றி பெறுவதில் தான் வாழ்க்கையின் ரகசியமே இருக்கிறது. இதில் நீங்கள் முயன்று முன்னேறினால் தானாகவே ஒரு தன்னம்பிக்கையும் உள்மனச் சந்தோசமும் உண்டாகும். முயற்சித்துப் பாருங்கள். எதிர்பாராத ஒரு திருப்தியும் வெற்றி மனப்பாங்கும் கிடைக்கும்.
அடுத்ததாக இவ்வளவு நாளும் வீணாக தொலைக்காட்சிக்கு முன் கழித்த அந்த நேரத்தை எப்படி நல்ல முறையில் பயன்படுத்தலாம் என எண்ணிப் பாருங்கள். இதோ சில யோசனைகள்.
எப்போதும் புதிய கலைகளைக் கற்றுக் கொள்ள முயலுங்கள். ஒரு மனிதன் விசேடமாக பெண் என்றுமே புதிய விசயங்களைக் கற்றுக் கொள்வதை நிறுத்தக் கூடாது. சில சமயங்களில் இதைக் கற்றுக் கொண்டு என்ன பயன்? என நினைக்கத் தோன்றும். ஆனால் எந்தக் கல்வியும் வீண் போவதில்லை. என்றோ எங்கோ ஏதோ ஒரு விதத்தில் அவை கை கொடுக்கும்.
உங்களுக்குத் தஜ்வீத் முறைப்படி குர்ஆன் ஓதத் தெரியுமா? தெரியா விட்டால் யாரிடமாவது ஓதக் கற்றுக் கொள்ளுங்கள். இது இலகுவில் ஒதே நாளில் கூட கற்றுக் கொள்ளக் கூடியது. ஆயினும் ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய வாஜிபான சுன்னத்தாகும்.
அரபு மொழி - ஊரில், வசதியில்லா விட்டால் தபால் மூலம் கற்றுக் கொடுக்கும் சில நிறுவனங்கள் உள்ளன. செலவும் மிகக் குறைவு. அல்லாஹ்வின் கலாமான குர்ஆனை விளங்கிக் கொள்ள வேண்டும் என்ற நிய்யத்தை வைத்துக் கொண்டு தொடங்குங்கள். நீங்கள் எதிர்பாராத விதத்தில், அதிசயமான முறையில் உதவிகளும் வசதிகளும் உங்களுக்குக் கிடைக்கும்.
மற்றும் பெண்களுக்குத் தேவையான தையல், சமையல், பின்னல் இவற்றை நண்பிகள் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொடுத்தோ முதியவர்களிடமிருந்தோ கற்றுக் கொள்ளலாம். இவையெல்லாம் தொழிற்பயிற்சிப் பள்ளிக்குப் போய்த்தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்றில்லை. அப்படி ஒரு வசதி இருந்தால் போகலாம். அப்படியான பயிற்சிப் பள்ளிகள் இல்லைஎனில், அல்லது வசதி இல்லா விட்டால் அண்டை அயலார், தாய் மற்றும் பெற்றோரிடம் கேட்டுப் பாருங்கள். அங்கெல்லாம் எப்படிப்பட்ட திறமைகள் ஒளிந்திருக்கின்றன என்ற உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும்.
பத்தரிக்கைகள், சஞ்சிகைகளுக்கு இப்படியான கருத்துக்கள் அல்லது கவிதைகள் எழுதிப் பாருங்கள். போட்டிகளில் கலந்து கொள்ளுங்ள் (கலந்து கொள்ளும் போட்டிகள் ஹலாலானதா? என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்) வெற்றியைப் பற்றி கவலைப்பாடாதீர்கள். பங்கு  கொண்டோம் என்பதில் சந்தோஷப்படுங்கள். உங்கள் திறமை உங்களையே ஆச்சரியத்தில் வீழ்த்தக் கூடும்.
நீங்கள் ஆங்கிலம், சிங்களம் தெரியாதவராக இருப்பின் அவற்றைக் கற்றுக் கொள்ள முயலுங்கள். ஒரு வழமையான வகுப்பாக இல்லா விட்டாலும் இம் மொழிகளைப் பேசத் தெரிந்த யாராவது இருப்பின் அவர்களுடம் பேசியாவது பழகிக் கொண்டு வாருங்கள்.
அன்றாடப் பத்திரிக்கைகளை வாங்கிப் படியுங்கள். சினிமா, பாட்டு, நாடகம் இவற்றை விட்டு ஊர், உலக நடப்புகளைத் தெரிந்து கொள்ளுங்கள். உங்களால் உதவி செய்ய முடியா விட்டாலும் மற்ற முஸ்லிம்களுக்காகவாவது செய்யலாம்.
இவையெல்லாம் கூட்டாகச் செய்ய முடியுமானால் ஒருவருக்கொருவர் ஊக்கமும் அறிவுரையும் கொடுத்துக் கொள்ளலாம். மனக் கவலைகளுக்கு நேரமும் இராது. கடைசியாக சில சமூக சேவைகளில் ஈடுபடலாம்.

உங்கள் கணினியை தொலைவில் உள்ள நண்பரிடம் பகிர்வது எப்படி?

நாம் கோப்புகளை இது வரை பகிர்ந்து வந்தோம். இதற்கு நமக்கு இந்த இணையதளங்கள் உதவின.

4shared.com
rapidshare.com
megaupload.com
mediafire.com

(இது போன்று மேலும் பல உள்ளன).

ஆனால் TeamViewer

* Remote Support
* Presentation
File transfer
* Vpn

இவை எல்லாவற்றையும் நமக்கு மிக எளிதாக அளிக்கிறது.

மேலும் இதை

இதை நமக்கு தேவையான பயன்பாடுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.

High Security வழங்கிறது.நம் கணினி மற்றும் இனைய இணைப்பை பொருத்து வேகம் இருக்கும்.

www.teamviewer.com இங்கு சென்று இதன் இலவச பதிப்பை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் கணினியை மற்ற கணினி உடன் இணைக்கும் பொழுது. உங்கள்teamviewer Id மற்றும் Password-ய் தெரியப்படுத்தி இணைத்து கொள்ளலாம்.

Teamviewer Install செய்த பின்பு Open செய்து 1நிமிடம் காத்திருந்தால் பண்ணினால் Id மற்றும் Password கிடைக்கும்.

(Id மற்றும் Password உதாரணத்திற்கு படத்தினை பார்க்கவும் )

0 கருத்துகள்

இணைய இணைப்பு இல்லாமல் ஜிமெயிலை பயன்படுத்துவதற்கு...

கூகுளின் ஜிமெயிலை அனைவரும் உபயோகிக்கிறோம் நாளுக்கு நாள் புது புது வசதிகளை அறிமுகபடுத்துவதால் அனைவரும் ஜிமெயிலை பயன்படுத்துகிறோம்.

அதில் ஏதாவது ஒரு நேரத்தில் நமக்கு ஏதேனும் முக்கியமான மின்னஞ்சல் வந்துள்ளதா என சோதிக்க வேண்டும் அல்லது யாருக்கேனும் முக்கிமாக ஒரு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் சரியாக அந்த நேரம் பார்த்து நம்முடைய கணணியில் இணைய இணைப்பு துண்டிக்கபட்டிருக்கும் அல்லது நாம் வேறு எங்காவது வெளியில் இருப்போம் மடிக்கணணியில் இணைய இணைப்பு இருக்காது. அது போன்ற சமயங்களில் நமக்கு உதவி செய்யவே கூகுள் ஒரு அருமையான வசதியை வெளியிட்டுள்ளது.

ஓப்லைனில் நம்முடைய ஜிமெயிலுக்கு வந்துள்ள மின்னஞ்சலை பார்க்கலாம் மற்றும் நாம் மற்றவர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பலாம் மற்றும் ஓன்லைனில் செய்யும் அனைத்து வேலைகளையும் நாம் இன்டர்நெட் கனெக்சன் இல்லாமலே செய்யலாம்.

இதற்கு நீங்கள் கூகுள் குரோம் உலவியை பயன்படுத்த வேண்டும். அடுத்து இந்த லிங்கில் Offline Google Mail சென்று நீட்சியை உங்கள் உலவியில் இன்ஸ்டால் செய்யுங்கள்.

இந்த நீட்சியை உங்கள் உலவியில் இணைத்தவுடன் ஒரு புதிய டேப்(tab) உருவாகும் அல்லது நீங்களே ஒரு New tab உருவாக்குங்கள்.

இப்பொழுது புதிய டேபில் நீங்கள் தற்பொழுது இணைத்த Offline Google Mail ஐகானும் இருக்கும் அதில் கிளிக் செய்யுங்கள்.

உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் Allow Offline Mail என்பதை தேர்வு செய்யவும்.

இந்த விண்டோவில் கீழே பகுதியில் உங்களின் மின்னஞ்சல் ஐடி காட்டும் அதில் எந்த ஐடிக்கு நீங்கள் ஓப்லைனில் பார்க்க வேண்டுமோ அதை தேர்வு செய்து கொண்டு Continue பட்டனை அழுத்துங்கள்.

அவ்வளவு தான் Continue அழுத்தியவுடன் உங்களின் மின்னஞ்சல் திறக்கும் அந்த ஐடிக்கு வந்த அனைத்து  மின்னஞ்சல்களும் காட்டும்.

இதில் உங்கள் இன்பாக்ஸில் உள்ள அனைத்து மின்னஞ்சல்களும் காட்டும். அந்த மின்னஞ்சலுக்கு நீங்கள் Reply போடலாம், அல்லது அந்த மின்னஞ்சலை அப்படியே Forward செய்யலாம் அல்லது புதியதாக நீங்களே ஒரு மின்னஞ்சலை Compose பட்டனை அழுத்தி அனுப்பலாம் மற்றும் ஏதாவது ஒரு பைலை attachment செய்து அனுப்பும் வசதியும் உள்ளது அனைத்தும் இணைய இணைப்பு இல்லாமலே.

மேலும் ஓன்லைனில் உள்ள Move, Label, Mute, Report Spam,Print, Mark as Read போன்ற இதர முக்கியமான வசதிகளும் நீங்கள் ஓப்லைனில் பயன்படுத்தி கொள்ளுங்கள். மேலும் Menu பட்டனை அழுத்தினால் இன்னும் பல வசதிகள் உள்ளது. இதன் மூலம் Chat History கூட பார்த்து கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு. இவ்வாறு ஒட்டுமொத்த வசதிகளையும் நாம் இணைய இணைப்பு இல்லாமேலே பயன்படுத்தி கொள்ளலாம்.

 நன்றி :தகவல் தொழில்நுட்ப செய்திகள்  Post

0 கருத்துகள்

கணினி எவ்வளவு மின் சக்தி பயன்படுத்துகிறது என்று தெரிய வேண்டுமா?

 உங்கள் கம்யூட்டர் செயல்பாட்டில் எவ்வளவு மின் சக்தி பயன்படுத்தப்படுகிறது என்று ஒரு கண் வைத்திருங்கள். இதற்கான தேர்ட் பார்ட்டி புரோகிராம்கள் நிறைய இலவசமாகக் கிடைக்கின்றன. அதில் ஒன்று co2saver என்ற மென்பொருள் கீழே உள்ள முகவரியில் உள்ள தளத்திலிருந்து டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம். இது மொத்தத்தில் நீங்கள் எவ்வளவு மின் சக்தியினைப் பயன்படுத்துகிறீர்கள், அதிகம் எங்கே செலவாகிறது என்று காட்டி, நம்மைக் குறைவாகப் பயன்படுத்தத்தூண்டும்.

Write By :Pradeep
http://tamilitnews.com/

0 கருத்துகள்

மென்பொருள் இல்லாமல் YouTube வீடீயோக்களை தறவிறக்கம் செய்ய

நாம் இனையத்தில் வீடியோக்களை பார்க்க அதிகமாக பயன்படுத்தும் தளம்YouTubeதளம்.அதில் வீடீயோவை பார்ப்போம் அந்த வீடியோ நமக்கு பிடித்தால் அதை கணிணியில் தறவிறக்கி வைத்தால் நல்லாஇருக்கும் என்று நினைப்போம்.ஆனால் அங்கு Download Link இருக்காது.அதற்காக நாம் ஒரு மென்பொருளை நிறுவி Download பன்னுவோம்.அந்த மென்பொருள் சில நேரம்Download பன்ன முடியாது என்று Error காட்டும்.சரி இனி இந்த வீடீயோவை Download பண்ண முடியாது என்று விட்டுவிடுவோம்.ஆனால் இந்த YouTube வீடியோக்களை இனையத்தில் இருந்தே Download பன்னலாம்.
இந்த வசதியை நமக்கு வழங்கும் தளம்: KEEP VID தளம்.

தளத்தை உபயோகிக்கும் முறை:

  • இந்த தளத்தை உபயோகிக்க கண்ணினியில் JAVA மென்பொருள் நிறுவியிருக்க வேண்டும். நிறுவவில்லை என்றால் இந்தசுட்டியில் சென்று நிறுவிக்கொள்ளுங்கள்.

  • பின் அங்குள்ள Text Box-ல் உங்களுக்கான வீடீயோ URL-ஐகொடுத்துDownload-பொத்தானை அழுத்தவும்.

  • அடுத்து வரும் பக்கத்தில் பின்வரும் படத்தில் உள்ளது போல் இருக்கும்

  • படத்தில் குறிப்பிட்டுள்ளது போல் Allways Run On this Site என்று கொடுங்கள்.

  • இப்போது உங்கள் Video-க்கான Download Option கிடைக்கும்.
  • இங்கு 8 விதமான Format-களில் Download பன்னுகிறOptionகிடைக்கும்.Mobile-க்கு ஏற்ற 3GP Format-டிலும் Download பண்ணலாம்.

1 கருத்துகள்

சுவாரசியமான சிறுகதை.

 'வீட்ல யாரது?' கதவைத் தட்டியதும் உள்ளே கலகலவென்று கேட்டுக் கொண்டிருந்த பெண்களின் குரல்கள் கப்சிப் என அடங்கி சில வினாடிகள் அமைதியாகக் கழிந்தன.
 'மீண்டும் வீடல யாரது?' என்று கேட்டதும் 'யாரு?' என்று உள்ளிருந்து பதில் வினாவாக கேட்க...
'நான்தான் சாகித் வந்திருக்கிறேன். கஹாரின் இருக்காங்களா?'
'அவுங்க கடைக்கு போயிருக்காங்களே' பதிலாக பெண்குரல்.
அந்தக்குரல் எனது நண்பனுடைய துணைவியாரின் குரல் எனபது பழக்கப்பட்ட எனக்கு எளிதாக அடையாளம் தெரிந்தது.
'எப்ப வருவாங்க?'
'கொஞ்சம் நேரமாகும் என்று சொல்லிட்டுப் போனாங்க'
'அப்படியா! வந்தவுடன் நான் வந்துட்டுப் போனதாக சொல்லுங்க. அப்புறமா வர்ரேன்'
'சரி சொல்றேன்.'
கதவைத் திறக்காமலேயே உள்ளிருந்தபடியே பதில் சொன்னார் என் நண்பனின் மனைவி. அரைக்கால் ட்ரவுசரை போட்டுக் கொண்டு தெருவில் விளையாடிய போதிலிருந்தே அவன் எனக்கு நணபன்.

ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு முன்இ 1980களின் வாக்கில் தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் இசுலாமியர்களின் வீடுகளுக்குச் செல்லும் ஒரு ஆடவரின் அனுபவம் இப்படியாகத்தானிருக்கும். பெரும் நகரங்களில் சற்று வேறுபாடாக கதவுகளில் மாட்டப்பட்டுள்ள பாதுகாப்புச் சங்கிலிக்கு அந்தப் பக்கமிருந்து சிறிது நீக்கப்பட்ட இடைவெளியில் பதில் கிடைக்கும். அதுவே சந்திக்கச் சென்ற நபர் வீட்டிலிருந்தால் கதவைத் திறந்து யார் என்று பார்ப்பதுக்கு முன்னே வீட்டினுள் தாராளமாக புழங்கிக் கொண்டிருந்த பெண்கள் உள் அறைகளுக்கோ அல்லது அடுப்படிப் பக்கமோ ஒதுங்கிக் கொண்ட பிறகே உற்ற நண்பராக இருந்தாலும்இ அந்நிய ஆண்களாகஇ ஓரளவு பழக்கமுள்ள உறவினர்களாக எவராக இருந்தாலும் வீட்டினுள் வரவேற்கப்படுவர். மாமாஇ மச்சான்இ சித்தப்பா என்று நெருங்கிய ஆனால் குடும்ப உறவில் அதிக தொடர்புள்ளவர்கள் மட்டுமே இதற்கு விதி விலக்கு.
உங்களின் நண்பர் உங்களை வரவேற்று உட்காரச்சொல்லி பேசிக் கொண்டிருக்கும்போது உங்களுக்காக தேனீர் தயாரிக்கச் சொல்லியிருந்ந்தால் அதனைத் தயாரித்துக் கொண்டுவரும் உங்கள் நண்பரின் துணைவியார் கதவுகளுக்குப் பின்னால் நின்றுகொண்டு 'ஏங்கஇ டீ கொண்டு வந்திருக்கேன்' என்று சொன்னதும்இ உங்களின் நண்பர் சென்று தேனீர் டம்ளரை பெற்றுவந்து உங்களுக்குத் தருவார். அல்லது வீட்டில் பருவமடையாத சிறுமிகளிருந்தால் அவர்கள் எடுத்து வருவர். நண்பரின் துணைவியார் கதவுகளுக்குப் பின்னால் நின்றுகொண்டு ' நல்லா இருக்கீங்களா? ஊட்டுல எல்லோரும் நல்லா இருக்காங்களா?' என்று நலம் விசாரிப்பார். அநேகமாக அவர் பேசிய சொற்கள் அவ்வளவாகத்தானிருக்கும்.
நண்பரின் வீட்டுக்குச் செல்லும் போதெல்லாம் ஓடிவந்து 'மாமா' என்று மடியில் உட்கார்ந்து கொள்ளும் அவரது மகள் பர்ஹானா பருவமடைந்து விட்டதால் தாய்க்கு அருகில் நின்று கொண்டே 'மாமா' நல்லா இருக்கீங்களா? எப்பவந்தீங்க? என்று நலம் விசாரிக்கும் பண்புக்கு மாறிவிட்டாள்.

பொதுவாக இசுலாமியர்கள் ஒரு சிறு நடைப்பகுதி தலைவாசலில் இருக்குமாறுதான் தங்களின் வீடுகளைக் கட்டுவர். 70இ 80 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சுற்றுக்கட்டு முற்றம் உள்ள வீடுகளாக இருந்தாலும் தலைவாசல் பகுதியில் ஒரு அடைப்புச் சுவர் இருக்கும். இதுவே அந்நிய ஆடவர்களுக்கான எல்லையாக இருந்தது.
ஆனால் தான் மதிப்புமிக்க கௌரவமான குடும்ப பாரம்பரியம் கொண்டவர்கள் என தன்னைக் கருதிக் கொள்ளும் நடுத்தரவர்க்கத்தின் மத்தியில் மட்டுமே இந்தப் பண்பாடு காணப்பட்டது. இவர்களே இசுலாமிய சமுதாயத்தின் பிரதான தூண்களாகவும் இருந்தனர். சமூக குற்றச்சாட்டுக்களும்இ உலமாக்களின் கண்டிப்புகளும் ஒரு ஆணோ பெண்ணோ மாற்றங்களை விரும்பினாலும் தடுக்கும் சக்திகளாக இருந்தன.
உழைக்கும் பெண்களிடமும் கடைநிலையில் இருந்த அன்றாடங்காச்சி களிடமும் இந்தப் பண்பாடு வேறாகத்தானிருந்தன. வண்ணாரப்பேட்டை ஜான் பாட்சா (இவர் மாந்திரீகர்) வீதியில் இருந்த அவருடைய லைன் வீடுகளில் (17வீடுகள் _ 1974களில் உள்ள நிலை) ஒரே ஒரு அறையும் அடுப்பாங்கரையாக இருந்த முன் நடையையும் தவிர மறைந்துகொள்ள அல்லது மறைத்துக்கொள்ள ஏதும் அற்ற இல்லங்களில் வசித்த இசுலாமியர்களின் பண்பாடும்இ திருச்சி குத்பிஷா நகர் பீடி சுற்றும் தொழிலாளர்கள்இ பாலக்கரை ஆற்றோரத்தின் அருகில் புறம்போக்கு நிலத்தின் குடிசைகளில் வாழும் அன்றாடங்காச்சிகள்இ பாலையங்கோட்டை பீடி சுற்றும் தொழிலாளர்இ ஓட்டு மண்வீடும் சில முந்திரி (நிலஅளவு 16 முந்திரி 1 ஏக்கர்) நிலமும் உடைமையாகக் கொண்ட இசுலாமிய விவசாயக் குடும்பங்கள் என தமிழமெக்கும் இவர்களின் பண்பாடு வேறாகத்தானிருந்தது.
எனது நண்பர் கஹாரின் தாயார் விவசாயி. அவர் திருமணம் செய்ததிலிருந்து அவரை கதவுகளும் பாதுகாப்பு செயினும் தடுக்கவில்லை. தலையில் சாணம் சுமந்து விவசாயம் செய்தவர். ஆனால் கஹாரி எலக்ட்ரிசியன் பட்டப்படிப்பு படித்துவிட்டு ஓரளவு சுமாராக சம்பாதிக்கத் தொடங்கியதால் நடுத்தரவர்க்கத்தின் பண்பாட்டினையே கௌரவம் என வரித்துக் கொண்டுவிட்டார்.
உலமாக்கள்இ இந்திய இசுலாமிய அமைப்புகள் போன்றவர்கள் கிராமங்களிலுள்ள ஏழை விவசாயிகளை தன்னுடைய சமூக அங்கமாக ஏற்றுக்கொண்டாலும் சேரிகளில் வாழ்பவர்களையும்இ அன்றாடம் கூலி வேலைக்குச் செல்லும் பெண்களின் குடும்பங்களையும் கண்டுகொள்வதே இல்லை. இவர்களின் உழைக்கும் வர்க்க பண்பாடு இசுலாமியக் கோட்பாடுவாதிகளுக்கு நெருடலாக இருப்பதே காரணம்.
இசுலமியப் பெண்களுக்கிடையே பண்பாடுகளின் மாற்றம்இ முன்னேற்றம் அகியவற்றினைப் பற்றி முழுமையாக எழுதவேண்டுமானால் இந்த சிறு கட்டுரை போதாது. சமூக நலன் கருதி இப்படிப்பட்ட விரிவான ஒரு ஆய்வு வேண்டும். இது இங்கு முடியாது. மிகவும் பிரச்சனைக்குரிய முதன்மை தரக்கூடிய சிலவற்றைப் பற்றி பார்ப்போம்.

புர்கா
இசுலாமியப் பெண் எனள்ற விவாதம் தொடங்கினாலே முதன்மைப்படுத்தப்படும் பொருள் புர்காவாகத்தான் உள்ளது. தஸ்லிமா நஸ்ரினுடைய புர்கா பற்றி ஒரு கட்டுரையை கன்னடத்தில் மொழிபெயர்த்து (கன்னட நாளிதழ் நன்று) வெளியிட்டதற்காக லத்திஜார்ஜ் துப்பாக்கிசசூடு என்று பெரும் கலவரமே கர்நாடகாவின் பல நகரங்களில் சில நாட்களுக்கு முன் நடந்து முடிந்துள்ளது. வினவில் கூட சுமஜ்லா என்ற பிளாக்கரின் புர்கா பற்றிய தம்பட்டத்தாலும் சூடான விவாதம் நடந்துள்ளது. இசுலாமியப் பெண்களின் பிரச்சினைகள் பற்றி விவாதிக்கும்போது நடைமுறை வாழ்க்கையின் வெளிப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் இசுலாமியர்கள் புர்கா என்றதும் சூடாகி விடுவது ஏன்?
பொதுவாக எந்த மதத்தினராக அல்லது மதம் சாராதவர்களாக இருந்தாலும் தங்கள் வீட்டு பெண்களை எவராவது சைட் அடித்தாலோஇ இல்லை சாதாரணமாக பார்த்தாலோ அல்லது காதலித்தாலோ ஏற்றுக் கொள்வதில்லை. தொண்டி என்ற சிறு நகரத்தின் வாலிபர்கள் பிற மதத்தின் பெண்களை சூன்காளி (அழகிய பெண்) பூதிகாளி (அசிங்கமான பெண்) என்று ஒன்றுகூடி விமர்சித்தாலும் தன் மதத்தினுடைய பெண்களை அவ்வாறு நாலுபேர் நின்று கமெண்ட் அடிக்கவிடுவதில்லை. தகராறுதான்! அடிதடிதான்! இதே நடைமுறையில் சைட்அடித்துக்கொண்டு திரிந்து இன்று அப்பாவாக தாத்தாவாக மாறியுள்ளவர்களும் தங்கள் வீட்டுப் பெண்களை பிறர் கமெண்ட் அடிக்க விடுவதில்லை. இது எல்லா சமூகத்தினருக்கும் பொதுவானதுதான். ஆனால் பிற மதத்தினரிடம் தன் வீடு என்று சுருங்கியுள்ள உணர்வு இசுலாமியர்களிடம் தம் சமூகம் என்று விரிந்துள்ளது. அதற்காக இசுலாமிய வாலிபர்களும் குமரிகளும் தமக்குள் ஒருவர் ஒருவரை காதலிப்பது இல்லையா என்று கேட்க வேண்டாம். அதனையும் இக்கட்டுரையில் பார்க்கப்போகிறோம்.
இந்த சைட் அடிக்கும் பிரச்சனைதான் 'புர்கா' என்றதும் இசுலாமியர்களை கொதித்தெழவைக்கிறது. சமூக ஆர்வாலர்கள் அப்பெண்களுக்கு புர்காவினால் ஏற்படும் சிரமங்களை முன்வைக்கும் போது அது அப்படி இல்லை என்று மறுப்பதும் அதனையே பெண்களை விட்டு பேசவைப்பதும் விவாதத்தில் எட்டப்படாத முடிவாக உள்ளது.
கண்கள் தவிர பிறவற்றை மறைக்க வேண்டும்இ திரை மறைவுக்குப் பின் நின்றே அந்நிய ஆடவர்களுடன் உரையாற்ற வேண்டும்இ என்று கோட்பாடு கூறினாலும் நடைமுறை அவ்வாறு இல்லை. புர்காவின் இன்றைய நிலைதான் என்ன? பொதுவாக தமிழை தாய்மொழியாகக் கொண்டவர்களிடம் இந்த கருப்பு வண்ண புர்கா அணியும் பழக்கமில்லை என்பது நாம் அறிந்ததுதான். பத்தானியர்கள் (பட்டாணியர்கள்) என்றழைக்கப்படும் உருதுவை தாய்மொழியாகக் கொண்டவர்களே அதிகம் அணிந்தனர். அதுவும் அவர்களிடம் ஒரு சடங்குத்தனமான மனநிலை இருக்கிறதேயொழிய கடவுள்இ கோட்பாடுஇ சொர்க்கம் என்ற உணர்விலெல்லாம் அணிவது இல்லை.
தமிழ் முசுலீம்களிடம் கருப்பு அங்கி என்ற பண்பாடு முற்றிலும் இல்லாவிட்டாலும் வெள்ளை வேட்டியை தமது கலர் சேலைக்குமேல் சுற்றிக்கொண்ட வழக்கமிருந்தது. இன்று அந்த வெள்ளைவேட்டி அகன்றுவிட்டது. கருப்பு அங்கி அல்லது எதுவும் இல்லை (சேலைஇ சுடிதார் போட்டுக்கொண்டுதான்) என்ற நிலை பொதுப்பண்பாக மாறியுள்ளது. குமரிப் பெண்கள்இ பள்ளி கல்லூரிகளுக்கு படிக்கச் செல்வது அத்திபூத்தது போன்று அரிதாக இருந்த அன்றைய நிலையில் புர்கா அணிந்து சென்றதில்லை. ஆனால் பரவலாக இன்று அனைவரும் படிக்கவைக்கும் நிலையில் அந்த பெண்கள் புர்கா அணிந்தாலும் படிக்கச்செல்ல முடிகிறதே என்ற சந்தோஷத்தில் புர்காவை ஒரு அடக்குமுறையாகக் கருதுவதில்லை. ஒரு சில தீவிர மதப்பற்று இல்லாத குடும்பங்கள் அல்லது பெண்கள் மட்டுமே புர்கா அணியாத நிலையில் பள்ளி கல்லூரிகளுக்குச் சென்றாலும் பெரும்பாலனவர்கள் புர்கா அணிவதை ஒரு பொருட்டாக கருதுவதில்லை.
மூன்று சகோதரிகளுடன் மட்டும் பிறந்து கல்லூரிக்குச் செல்லும் பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஆயிஷா தன் தமக்கைகளிடம் 'இந்த பாரு யார் என்ன சொன்னாலும் பெரியவங்க சொல்லிட்டாங்க என்பதற்காக அப்படியே ஏத்துக்கக்கூடாது. நாமும் சிந்தித்து பார்க்கனும். ஆனாலும் அவர்களிடம் விவாதம் பண்ணிக்கிட்டு இருக்காம காலச் சூழ்நிலைக்கு ஏற்ப அட்ஜஸ்ட் செய்துகிட்டு நம்ம காரியத்தை சாதிக்கனும்' என்று கூறுகிறார். கணினித் துறையில் பொறியியல் பட்டப்படிப்பு படிக்கும் இவரும் இவரது தந்தைக்கும் புர்கா என்பதில் நம்பிக்கை இல்லை. தம்மைச் சுற்றியுள்ளவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாக வேண்டாமே என்பது அவர்களின் கருத்து. இவரின் தாய்வழி சுற்றம் எந்த பெண்களையும் பருவமடைந்த பிறகு பள்ளிக்கூடம் அனுப்பியதில்லை என்பது குறிப்பிடதக்கது.
ஸகனாஸ் கணினித் துறையில் பொறியியல் வல்லுனர். புர்கா இல்லாமல் கல்லூரிக்குச் சென்றதில்லை. கை நிறைய சம்பளம் வாங்கும் பணிக்குச் செல்லும் போதும் புர்கா அணியவே செய்வார். புர்கா பற்றி பெருமையாகவும் சொன்னவர்தான். ஆனால் கல்லூரியில் படிக்கும்போது ஒரிசாவைச் சார்ந்த மாணவரைக் காதலித்து முஸ்லீமாக ஒரு திருமணச்சடங்குஇ ஒரிசா சென்று கணவரின் குடும்பத்தினருக்காக ஒரு இந்துமத திருமணச் சடங்கு. இன்று தாய் வீட்டுக்கு வந்தால் புர்காஇ தனது வீட்டிலும் பணியிடத்திலும் அது இல்லை. பிள்ளைகளுக்கும் இரண்டிரண்டு பெயர்கள்.
மதுரைச் சேர்ந்த பாத்திமாஇ ராகேஷ்ஷுடன் இந்துவாக மாறித் திருமணம் செய்தார். திருச்சியைச் சேர்ந்த பானுஇ அகஸ்டின் தங்கராஜுடன் கிறித்தவராக மாறி திருமணம். இவர்களும் புர்காவின் குடும்பத்திலிருந்து வந்தவர்கள்தான். இன்று குடும்ப உறவுகளும் தொடரத்தான் செய்கிறது.
திருமணவிழா மண்டப்பத்திலே 18 வயது ஜுவைரியா புர்காவுடன் 'வணக்கம் தோழர்' என்று எமது தோழர்களுக்கு கை கூப்பி வரவேற்கிறார். திருமண விழாக்களில் புர்காவுடன் வலம் வரும் பெண்கள்இ ஆண்களின் கூட்டத்திடையே இயல்பாக வலம் வருகின்றனர். எதிர் எதிர் வரிசையில் அமர்ந்து விருந்துண்ணுகின்றனர். யாரும் எதற்கும் சங்கடப்படுவதில்லை எல்லாம் இயல்பாக குற்றமற்ற செய்லபாடுகளாக நாம் காணுகிறோம்.
அன்று ஜவுளிக்கடைஇ நகைக்கடைஇ வளையல்கடை போன்றவற்றிற்கு மட்டும் ஆண்களுடன் சென்றுவந்த பெண்கள் இன்று தனியாகவும்
சென்றுவருகின்றனர். கடைத்தெருவுக்கு செல்லும் பெண்களை 'ஊர் மேய்பவள்' என்று இழித்துரைத்த காலம் கண்ணாடி பெட்டகத்திற்குள் ஒளிந்து கொண்டுவிட்டது. அன்றாடத் தேவைகளுக்கு ஆண்களே கடைத்தெருவுக்குச் செல்லும் காலமும் மலைஏறிவிட்டது. காதுகளையும்இ நகை அலங்காரங்களையும் மறைத்துக்கொள்ளும் புர்காவெல்லாம் இன்று கிடையாது. இதுவே அவர்களின் புர்கா பற்றிய கோட்பாடு சார்ந்த இன்றைய யதார்த்த மதிப்பீடுக்குச் சான்றாக உள்ளது. இன்னும் ஏராளமான சான்றுகளை நாம் காணலாம்.
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம்இ தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் போன்ற இசுலாமிய அமைப்புகள் தமிழக இசுலாமியப் பெண்களை புர்கா அணியச் செய்வதில் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களின் இலக்கு 30இ 35க்குள் உள்ள பெண்கள் மட்டுமே. சற்று வயதானவர்கள் தம் நிலையில் மாற்றமில்லாமலயே தொடரமுடிகிறது. புர்கா அணிபவர்களோஇ 'புர்காதானே அணிந்துவிட்டு போகிறோம்இ ஆனால் நாங்கள் வேலைக்கு போவதையேஇ படிப்பதையோ தடுக்க முடியாது' என்கின்றனர். இன்று பரவலாக இதில் மட்டுமே என்றில்லாமல் அனைத்துத் துறைகளிலும் இசுலாமியப் பெண்கள் வேலை செய்வதை நாம் காண்கின்றோம். அவர்கள் அணியும் புர்காவே இதற்கு சாட்சியாகவும் உள்ளது.
________________________________________
பெண் உழைப்பு
'ஆண்கள்இ பெண்களை நிர்வகிப்பவர்கள். பெண்கள் உங்களுக்கு விளைநிலங்கள்' என்று குர்ஆன் கூறுகிறது. உழைக்கும் பெண்களைப் பொருத்தவரை அன்றும் இன்றும் ஏற்ப்பட்டுள்ள வேறுபாடு முதலாளித்துவத்தின் பண்பாடுதானேயொழிய குனர்ஆனுக்கும் இவர்களுக்கும் வெகுதூரம்.
ஆமினாம்மாள்! நெல் அவித்து அரிசி விற்பதில் கடந்த 40 ஆண்டுகாலமாக தன் காலத்தை கழித்துக் கொண்டிருப்பவர். தெருக்குழாயில் தண்ணீர் பிடித்து மேன்மைமிக்க குடும்பங்களுக்கு சேவை செய்து வயிறு பிழைக்கும் ஜமால்மாமி நடுத்தர வர்க்கத்தினராக வளர்ந்து வறுமையின் காரணமாக தொழில் செய்து பிழைப்பவர். இவர்களின் பண்பாடு வேறாகத்தான் உள்ளது. பருவமடைந்த அல்லது பருவம் அடையாதஇ திருமணமான அல்லது விதவைகள் என்ற எந்த வேறுபாடும் இல்லாத பெண் உழைப்பு சமூகத்தின் கட்டாயமாகிவிட்டது.
'தானும் உயர்குடியே. தமக்கென்று ஒரு தராதரம் உள்ளது. தராதரத்திற்கேற்ற சமூகத்துடன்தான் நாம் பழக வேண்டும்' என்று கருதுபவர்கள்இ முதலாளித்துவப் பண்பாட்டினை செரித்துக்கொண்டு தாங்கள் வறுமையில் வாடினாலும் முதலாளித்துவம் வழங்கும் சமூக மதிப்பீடுகளுடன் உறவாடவே விரும்புகின்றனர். இதனை குட்டி முதலாளித்துவ பண்பாடு என்று சொல்லலாம். ஆனால் புதிய பொருளாதாரத்தால் விழுங்கப்பட்டு சாறுபழியப்பட்ட சக்கைகளாக வெளித் தள்ளப்பட்ட பின் இவர்களும் உழைக்கும் பெண்கள் அணியில் (தமது தராதர மதிப்பீட்டின் உண்மைநிலை உணர்ந்து) ஒன்றிணைகின்றனர். அகலத்திறந்த கதவுகளில் தஞ்சமடைகின்றனர். சமூக மதிப்பீடுகளும் மாறிவிட்டன..
ஃபாத்திமா. இவர் மின்னணு பொறியியல் பட்டதாரி. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பறக்கும் படையில் ஒரு அதிகாரியாக கைநிறைய சம்பளம் வாங்கும் தொழில். கணவர் ஒரு ஆசிரியர். இவருக்கு வெளிநாட்டில் மிகவும் உயர்ந்த சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கிறது. வீடுஇ கார்இ குடும்பத்திற்கான விசா என்று அனைத்தும் வழங்கப்படும் வேலை. கணவரைஇ வேலையை விட்டுவிட்டு உடன்வர அழைக்கிறார். ஆனால் 'பெண்ணின் உழைப்பில் உட்கார்ந்து தின்பதா? அல்லது அவள் வெளிநாடு சென்று சம்பாதிக்க நாம் இங்கே 'பொட்டையைப்' போல் பிரிந்து வாழ்வதா?' சுய கௌரவம் இடம்தரவில்லை. சமூகம் தனக்கு வழங்கியுள்ள விவாகரத்து என்ற அங்குசத்தை நீட்டத் தொடங்கினார்.
பாத்திமாவோ 'எதுவானாலும் பரவாயில்லைஇ நான்இ எனது முன்னேற்றத்தை கெடுத்துக்கொள்ள முடியாது' என்று உறுதியாக வீசிய கவண்கல் வேலை செய்தது. அது 'இருவர் சம்பளத்திலும் சொகுசாக வாழ்ந்த வாழ்க்கையை இழக்க முடியுமா' என்ற கனியில்பட்டு பறித்தெடுத்துவிட்டது. இன்று இவர்கள் வெளிநாட்டில் கோடிஸ்வரர்களாக!.
நிறைய எடுத்துக்காட்டுகள் உள்ளன. தான் சம்பாதிக்கும் தொகையை தனது பெற்றோர்களுக்கு கொடுப்பதில் கட்டுப்பாடு இருக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக உறுதிமொழிகளைப் பெற்றுக்கொண்டு திருமணம் செய்து கொள்ளும் பெண்களும் இவர்கள் மத்தியில் வளர்ந்து கொண்டுதான் வருகின்றனர். இசுலாமிய பெண் உழைப்பை முதலாளித்தவம்தான் தீர்மானிக்கிறதேயொழிய மதக் கோட்பாடுகள் இல்லை.
_________________________________________
தலாக் – விவாகரத்து
ஆணின் ஆளுமை அதிகாரத்தினால் தலாக் தலாக் தலாக் என்று மும்முறை ஒருவன் கூறிவிட்டால் அவனது மனைவி விவாகரத்து செய்யப்பட்டவளாக கருதப்படும் நிலையே அன்றும் இன்றும் உள்ளது. இதற்கு சாட்சிகள் தேவையில்லை. அல்லாவே சாட்சியாக உள்ளதால் இது ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவே சமூகம் உள்ளது. ஒருவன் சச்சரவினால் ஏற்பட்ட கோப உணர்ச்சியின் உந்துதலில் இப்படி தலாக் செய்து விட்டாலும் அது விவாகரத்து ஆனதாகவே கருதப்படும். அவன் மனம் மாற்றம் அடைந்து இவ்வாறு செய்துவிட்டதாக வருந்தினாலும் தலாக் தலாக்தான். அவன் விரும்பினாலும் மீண்டும் இணைந்து வாழ முடியாது. ஏனெனில் இவ்வுறவு சமூக கட்டுமானத்தினுடைய ஆளுகையின் கீழ் உள்ள உறவு.
இந்த மூன்று முறை தலாக் என்று சொல்லும் உரிமைஇ சிந்தித்து தெளிவாக நிதானமாக முடிவெடுத்தாலும் ஒரு பெண்ணிற்கு கிடையாது. தனக்கு பொறுப்பானவர்கள் மூலம் தன் கணவனை இந்த உறவிலிருந்து விடுவிக்கச் செய்துகொள்ளத்தான் ஒரு பெண்ணுக்கு இருக்கின்ற உரிமையாகும்.
தலாக் என்பது போல்தான் குளலா என்பதும் என்று சில இசுலாமிய பெண் அமைப்புகள்இ தாங்களும் நேரிடையாக தலாக் செய்துகொள்ள உரிமையுண்டு என்று வாதாடினாலும் ஆண்களால் மட்டுமே நிர்வாகிக்கப்படும் உலமாக்கள் சபை அதை நிராகரித்துவிட்டது. குலா என்பதன் பொருள் 'விவாகரத்து செய்துவிடச் சொல்லுங்கள்' என்று கோரிக்கை வைப்பதே ஆகும்.
ஆனால் விவாகரத்து வழக்குகளில் இன்றைய நடைமுறை மதக்கோட்பாட்டிற்கு வெளியே ஜமாத்துகளால் தீர்மானிக்கப்படுகின்றன. ஆண் தலாக் செய்தால் தான் கொடுத்த மகர் தொகையை (திருமணத்தின்போது ஆண் பெண்ணிற்கு வழங்கப்படும் பொருள்) இரட்டிப்பாக்கித் தரவேண்டும். இது கோட்பாடு. நடைமுறையில் அப்பெண்ணிற்கு இருக்கும் குழந்தைகளின் பால்இ வயது ஆகியனக் கணக்கிடப்பட்டு அதற்குப் பாதுகாப்பு தரும்வகையில் தண்டத்தொகையாக தீர்மானிக்கப்பட்டு ஆணிடமிருந்து பெற்று பெண்ணிற்கு வழங்கப்படுகிறது. கொடுக்கப்பட்ட வரதட்சனைகள்இ நகைகள்இ சீதனங்கள் திருப்பியளிக்கப் படுகின்றன. ஜீவனாம்சம் என்றச் சொல் மட்டும உச்சரிக்கப்படுவதில்லை.
குழந்தைகள் ஆண்களுக்கே உரியன. அவர்கள் அவர்களை தமது பொறுப்பில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே கோட்பாடு. நடைமுறையில் ஒரு சிலர் அவ்வாறு தமது பொறுப்பில் எடுத்துக்கொண்டாலும் பலரும் அதனால் ஏற்படும் மறுமண வாழ்க்கைகான இடையூறுகளைக் கணக்கிட்டு ரொக்கத் தொகைக்கு விலை பேசிவிடுகின்றனர். ஆனால் சம்பாதிக்கும் பருவத்தில் உள்ள ஆண்பிள்ளைகளாக இருந்தால் ஆண்களின் பாசம் கரைகடந்து ஷரியத் சட்டம் கோலேச்சுகிறது. கணவன்களால் மட்டுமே தான் கர்ப்பமுற்று குழந்தை பெற்றெடுப்பதாகவும்இ அதில் தனக்கு பங்கேதுமில்லை என்று இன்னும் இப்பெண்கள் அறிவியலுக்கு அப்பாற்பட்டு சிந்திப்பதால் இப்பிரச்சனையில் தமக்கு ஏதும் உரிமை இல்லை என்பதை எவ்வித மனவருத்தமுமின்றி ஏற்றுக்கொள்கின்றனர். அதுவே குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு இவள்மீது சுமத்தப்படும்போது இயல்பாகவே உள்ள தாய்ப்பாசம் அதனை தன் தலையில் கட்டும் ஏமாற்றம் என்று கருதுவதற்கு இடமளிப்பது இல்லை.
பெண்ணின் விருப்பத்திற்கிணங்க விவாகரத்து நடந்தால் பெண்இ தான் பெற்ற மகர் தொகையுடன் சிறுதொகை ஒன்றையும் (திட்டவட்டமான அளவு இல்லை) கொடுக்க வேண்டும். அல்லது மகர் தொகையை மட்டுமாவது கொடுக்கவேண்டும்இ என்று கோட்பாடு கூறுகிறது. நடைமுறை அவ்வாறு இல்லை. பெண் தலாக் செய்யச் சொல்லும் சூழ்நிலை பரிசீலிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக குடிகாரக் கணவன்இ விபச்சாரிகளுடன் சுற்றும் கணவன்இ சமூக குற்றங்களைச் செய்வதால் தொடர்ந்து சிறைசென்று வரும் பொறுக்கி போன்ற அடிப்படை நிகழ்வுகள் பரிசீலிக்கப்பட்டு தீர்த்து வைக்கின்றனர். குற்றம் கணவன் மீது என்றால் கணவனுக்கு தண்டத்தொகையும். மனைவி மீது என்றால் மனைவிக்கு தண்டத்தொகையும் தீர்மானிக்கப்படுகிறது.
ஆண் தலாக் செய்ய மறுத்தாலும் வலுக்கட்டாயமாக விவாகரத்தை பெற்றுக்கொள்ளும் பாதுகாப்பும் இன்று பெண்களுக்கு ஏற்பட்டுள்ள மாற்றத்தின் முன்னேற்றம். சமூகத்தின் இன்றையநிலை பெற்றோர்களிடம் ஏற்பட்டுள்ள மாற்றமும்இ பெண்ணுழைப்பும் அடிப்படைக் காரணங்களாக அமைகின்றன. 'கல்லானாலும் கணவன்...' மலை ஏறிக் கொண்டிருக்கிறது.
______________________________________________________
இத்தா : காத்திருத்தல்
இத்தா என்பது பற்றிய விரிவான விளகத்தை பறையோசையில் கர்பப்பை இல்லாவிட்டாலுமா!படித்துக் கொள்ளுங்கள். அன்றும் இன்றும் என்ற ஒப்பீட்டை மட்டும் பார்ப்போம். இதன் மதிப்பீடு நானறிந்த வரையில் அன்றும் இன்றும் மாறவே இல்லை. கோட்பாட்டின்படி சிறிதும் பிசகாமல் கடைபிடிக்கப்படுகிறது. ஆனாலும் ஒரு சந்தேகம் எனக்கு உண்டு.
முகம்மது நபி (ஸல்) அவர்கள் போர் ஒன்றிற்குச் சென்று திரும்பியதும் தமது வெற்றியை அறிவித்துவிட்டு 'கணவன் இறந்த பெண்கள் மழித்துக் கொள்ளுங்கள் (மொட்டையடித்துக் கொள்ளுவது)' என்று கூறுகிறார். அந்த அறிவிப்பைத் தவிர அது தொடர்பான வேறு எதனையும் சான்றாக நான் படிக்கவுமில்லை. பார்க்கவும் இல்லை. அது அன்றைய நடைமுறையாக இருந்தால் அது இன்று இல்லை என்பது மட்டுமே மாற்றமாகும். இந்தியச் சூழ்நிலையில் அன்று 'வெள்ளை புடவை' இந்துமதத்தைப் போல இவர்களும் அணிந்தாலும் இன்று அது நடைமுறையில் இல்லை.
தன் கர்பப்பையில் உள்ளதை மறைக்க வேண்டிய அவசியமற்ற காலச் சூழ்நிலையிலும்இ அது அவசியம் தான் என்றால் அறிந்துகொள்ள மிக நவீன கருவிகள் இருக்கும் இந்தக் காலத்திலும் இத்தா இன்னும் ஏன் தொடர்கிறது? கணவன் இறந்துவிட்ட துயரத்தில் உள்ள பெண் அந்த பசுமையான வாழ்க்கையின் நினைவாக இந்த இத்தாவை ஒரு சுமையாக கருதுவதில்லை. அது தனது கணவனை சொர்க்கத்திற்கு இட்டுச் செல்வதில் பங்காற்றும் நன்மைகளின் எண்ணிக்கையை கூட்டும் என்றும் அவள் மனதார நம்புவதால்அப்பெண்களின் மனதில் எவ்வித எதிர்ப்பையும் ஏற்படுத்தவில்லை. சமூக ஆர்வலர்களும் இதில் தலையிட்டதும் இல்லை. அது ஏன் என்று எனக்கும் புரியவில்லை.
விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள் இத்தாவைக் கடைபிடிக்கும் நிலையிலும் மாற்றம் இல்லை. விவாகரத்து விரும்பியோ விரும்பாமலோ நடந்தாலும் கணவன்மீது ஏற்பட்டுள்ள 'கசப்புணர்வு' அங்கே ஏற்பட்டுள்ளது என்பது தெளிவான ஒன்றே. அப்படியிருந்தும் அவர்கள் இந்த இத்தாவை கடைபிப்பது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. அப்படிப்பட்டவர்களின் மனநிலையை அறிந்துகொள்ளும் வாய்ப்பும் எனக்கு ஏற்படவில்லை. எனவே இப்படிப்பட்டவர்களின் மனநிலையை அறிந்தவர் எவரேனும் இருந்தால் இங்கே எழுதுங்களேன்.
முகம்மது நபி (ஸல்) அவர்கள் தனது மகள் பாத்திமாவின் கணவனரான அலியிடம் 'என் மகளே ஆனாலும் பெண்கள் சொல்வதைக் கேளாதீர்கள்' என்று கூறியிருந்தாலும் அவரின் மரணத்திற்குப்பின் அவரது மனைவி ஆயிஷா அரசியலில் மிகவம் முக்கியமான பங்காற்றத் தொடங்கியதிலிருந்து இன்று வரை மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டேதான் வருகின்றன. இந்த மாதம் மகளிர் மாதமாக உள்ள நிலையில் ஒவ்வொரு இசலாமியப் பெண்களும் தங்களை சுற்றியுள்ள சூழ்நிலைகளையும் அதன் காரண காரியங்களையும் தன்சுய விருப்பு வெருப்புக்கு அப்பாற்பட்டு ஆய்வு செய்து பெண்களின் உரிமைகளைப் பெற பங்காற்றுவோம் என்று உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். கடவுள் நம்பிக்கைக்கும் இம்மாற்றத்திற்கும் இடையில் முடிச்சுவிழாமல் இதுவேறு அதுவேறு என பிரித்திட்டு செயலாற்ற வேண்டும்.

0 கருத்துகள்

உயிருள்ள எழும்புக் கூடு!

draught
பஞ்சம்
நான் நாளாந்தம் கண்டு கழிக்கும் சினிமா!
பட்டினி
நான் சந்திக்கவில்லை – அங்கோ
பலரின் உயிரைக் குடித்துக் கொண்டிருக்கின்றது!
பஞ்சமும் பட்டினியும் பட்டிமன்றம் நடாத்த
பரிதவித்த பொழுதுகள் வேடிக்கை பார்க்கின்றன!
அங்கே வெற்றி எப்போதும் மரணத்துக்குத்தான்!
ஒட்டிய வயிறும் உப்பிய தேகமும்
அவர்களோடு ஒட்டிப்பிறந்த வாழ்க்கைச் சரித்திரம்!
உப்பிய தேகம் தான் அவர்களது வாழ்க்கை வரலாறு!
ஒரு தாகித்த குரல்,
வாய்க்கு ருசியாய் எனக்குத் தேவையில்லை
வகைவகையாய் ஏதும் கேட்டிடவில்லை!
அதோ -ஒரு சொட்டுக்குக் கஞ்சிக்காய் உயிர் விடும் ஊனங்கள்!
எழும்பும் தோலும் தான் அவன் தேகம்!
உலகம் அவனைத் துறந்தது போல்
சதையும் சட்டென்று அவனை விலகிக் கொண்டது!
பசிக் கொடுமை அவன் உடலை அரிக்க அரிக்க
நடமாடும் குச்சியாய் அவன் தேய்ந்து போனான்
அந்தோ சரிந்து விடும் தோரணையில்
அவன் பொழுதுகள் நகர்கின்றன!
தாளாத பசி சதையைத் திண்றொழிக்க
எழும்பாவது எஞ்சட்டுமே என பாவப்பட்டு
எழும்பை மூடிக் கொண்டது தோல்!
ஆறடி மனிதன் அவன் – ஆனால்
அறைக்கிலோ மாமிசம் கூட தேறா தேகமது!
உயிருள்ள எழும்புக் கூடு!!
சுடுமணலில் காய்ந்த கருவாடாய்
உப்பிக் கிடக்கின்றது அவன் தேகம்!
கொசுக்குக் கூட குத்துவதற்கு இடமில்லை!
பஞ்சம் துரத்தித் துரத்தி அவனைக் கொல்ல
பட்டினி பாய்ந்து பாய்ந்து அவனைக் குதறிற்று!
பசி வெள்ளம் அவனை அடித்துச் செல்கிறது
பரிதாபமாய் அவனுயிர் போக – நம் சமூகமோ
கண்டும் காணாதது போல்..!!
உன் சகோதரனின் அவலக் குரல்!
அண்ணா..! தம்பி..! சகோதரா..!
கேட்கிறதா அவன் அவலக் குரல்?
அவனால் முணகத்தான் முடியும்.
பசிக்கொடுமை அவன் குரலையும்
கொஞ்சம் கொஞ்சமாய் குடித்து விட்டிருந்தது!
அண்ணா..!
என் அடிவயிராவது ஆறுதலடையட்டும்
அடிச் சட்டியின் தீய்ந்து போன சோறுகளாவது கிடைக்காதா?
- இது அவன் முணகலின் தேடல்!!
தம்பி..!
என் ஈரமற்றுப் போன நாக்கினை நனைத்துக் கொள்ள
எஞ்சிய எச்சில்களாவது கிடைக்காதா?
- இது அவன் விடும் பெரு மூச்சின் ஓசை!!
சகோதரா..!
ஒரு வாய்க் கஞ்சி ஊற்றினால்
ஒரு வாரம் எனக்குத் தெம்பூரும்.
நீ உண்ட தட்டின் ஓரங்களில்
ஒட்டியிருக்கும் உணவையாவது
பொறுக்கித் திண்ண எனக்கு வழி செய்வாயா?
- இது அவன் எதிர் பார்ப்பின் பாஷை!!
நான் உயிருள்ளதோர் எழும்புக் கூடு!
வாழ்க்கையின் எந்த சுகந்தமும்
எனை முத்தமிட்டது கிடையாது!
என் வாழ்க்கையில் வசந்தத்தை – நான்
கனவில் கூட கண்டது கிடையாது!
எல்லோருக்கும் போல் எனக்கும் ஆசையுண்டு
ஆனால் – எட்டாக் கனிக்கு கொட்டாவி விட்டடென்ன பயன்!
என் வாழ்க்கையே கானல் நீராய் ஆனபோது
எதிர்பார்ப்புக்கள் என்பதும் கானல் நீரே!
ஆனால் – ஒன்றை மட்டும் சொல்கிறேன்
உன் ஸகாத்தும், ஸதகாவும்
உன்னிடம் தேங்கிக் கிடக்கும் எம் எதிர்காலங்கள்!
உன் உதவியும், உத்தாசையும்
உயிர்வாழ நாம் கேட்கும் உயிர்ப்பிச்சை!
நீ – எமக்குச் செய்ய வேண்டிய கடமைகள்
கரையற்ற குளமாய்த் தேங்கிக் கிடக்கின்றன.
என் உயிர் பிரிய முன் உதவிக் கரம் கொடு!
உன் உயிர் பிரிய முன் உன் கடமையைச் செய்!!
நன்றி :  தமிழ்முஸ்லிம் Post

0 கருத்துகள்
 
YASS இணைய வலயமைப்பு © 2012 | Designed by Canvas Art, in collaboration with Business Listings , Radio stations and Corporate Office Headquarters