அழகே வா!... அருகே வா!...



அழகு எங்கிருக்கின்றதோ அங்கே இயற்கையாகவே செல்வாக்கும் மதிப்பும் ஏற்பட்டுவிடும். அழகு இறைவன் ஒருவருக்கு வழங்கும் சிபாரிசு கடிதம்.
இறைவன் ஒவ்வொரு மனிதனையும் மிக அழகாகவே படைத்திருக்கின்றான் (அல்குர்ஆன் 95:4). ஆனால் மனிதன் தான் அலட்சியத்தின் காரணமாக அந்த அழகை வீணடிக்கின்றான் அல்லது மேலும் அழகாக வேண்டும் என்ற பேராசையால் இரசாயான மருந்துகளாலும் தேவையில்லாத உணவு கட்டுபாடுகளாலும் தன்னை வருத்திக்கொண்டு செய்யும் உடற்பயிற்சிகளாலும் அழிவை நோக்கி செல்கின்றான் அந்த திசைகளை தெளிபடுத்தவே இந்த தொடர் இன்ஷாஅல்லாஹ்.



கொழுப்பு உணவை மனிதன் எதிரியாகவே நினைக்க தொடங்கிவிட்டான். மனிதனின் தோல் அழகுக்கும் மூளையின் செயல்பாட்டுக்கும் கொழுப்பு உணவு அவசியமே. ஒருவரின் தோல் பளபளப்பாக சொரசொரப்பு இல்லாமல் இருக்கவேண்டுமெனில் அதற்கு கொழுப்பு உணவு அவசியமே. கொழுப்பு உணவை முற்றிலும் தவிர்ப்பதது நமக்கு நாமே கேட்டை தான் உண்டாக்கிகொள்ளவே.

கொழுப்பு உணவினால் இரத்த குழாய் அடைப்பு, இதய நோய்கள்,உடல் பருமன் ஏற்படுகின்றதே என்று நீங்கள் கேட்கலாம், ஆனால் அதற்கு காரணம் கொழுப்பு அல்ல!.
யாருடைய மண்ணீரலும் (Spleen)  வயிறும்  (Stomach)  சரியாக வேலை செய்கிறதோ அவர் சராசரியான கொழுப்பை சாப்பிடுவதால் அவருக்கு எந்தவித தீங்கும் ஏற்படாது மாறாக, அக்கொழுப்பு உணவால் நன்மை ஏற்பட்டு உடலும் வனப்பு அடையும்.

இதற்கு மாற்றமாக யாருடைய வயிறும்  (Stomach) மண்ணீரலும்  (Spleen)   சரியாக இயங்க வில்லையோ அவர் மிக குறைவான கொழுப்புணவு சாப்பிட்டாலும் அதனால் அவருக்கு தீங்கே ஏற்படும் காரணம் வயிறும் மண்ணீரலும் ஒழுங்காக இயங்காத காரணத்தல் கொழுப்புணவு முறையாக பயன்படாமல் போகின்றது. இந்த காரணத்தால் தான் பயன்படாத கொழுப்பு நம் உடம்பில் பல தீங்குகளை உண்டாக்குகின்றது. வயிறும் மண்ணீரலும் சரியாக செயல்பட வைத்துவிட்டால் இந்த கொழுப்பின் தீங்குகளிலிருந்து நம்உடலை காப்பாற்றி நன்மைகளை பெற்று நலமாக வாழலாம். எனவே ஒவ்வொரு மனிதருக்கும் கொழுப்பு உணவு அவசியமே.
உணவு உண்ணும் முறைகளை பின்பற்றினால் அது நம் உடலில் அழகையும் ஆரோக்கியத்தையும் அதிகபடுத்தும். காலை உணவு அவசியம் சாப்பிட்டே ஆகவேண்டும் அதுவும் காலை நேரம் 7-9 மணிக்குள் சாப்பிடவேண்டும் அதுதான் வயிறு நன்றாக இயங்கும் நேரம் . காலையில் நாம் உண்ணும் உணவே அன்று முழுவதும் நம் உடல் உழைப்புக்கு தேவையான சக்தியை கொடுக்கும்.

மதியம் உண்ணும் உணவு நடுநிலையாகவும் இரவு உணவு மிக மிக குறைவாக அல்லது சாப்பிடாமல் இருப்பது மிகவும் நல்லது. ஒரு வேளை சாப்பிடுபவன் யோகி, இரு வேளை சாப்பிடுபவன் போகி, மூன்று வேளை சாப்பிடுபவன் ரோகி, என்பதனை இவ்விடத்தில் நினைவு கூர்வது நல்லது.
இரவு என்பது நமது உடலுக்கும் உள்ளத்துக்கும் ஓய்வளிப்பதற்காக எல்லாம்வல்ல இறைவன் நமக்களித்த அருட்கொடை. வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு படுத்தால் ஓய்வு எப்படி கிடைக்கும்? வயிறு பெருங்குடல், சிறுகுடல், பித்தப்பை என உறுப்புகள் அனதை;தும் சாப்பிட்டவுடன் இயங்கும் போது உறங்கினால் அது ஓய்வாகுமா?.

இந்த உறக்கத்தினால் உடல் தீங்iயே பெறும் இதன் பிரதிபலிப்பு உடல் அழகில் உடல் சைசில் தீங்கையே ஏற்படுத்தும் சாப்பிட்டு சில மணிநேரம் கழித்து உறங்குவதே நல்லது. காரணம் இடைப்பட்ட நேரத்தில் உண்ட உணவு முறையாக ஜீரணமாகியிருக்கும்.

உணவினை மிக நன்றாக மென்று நாக்கால் சுவைத்து சாப்பிடவேண்டும் அப்போதுதான் முறையான ஜீரணம் உண்டாகும் உணவின் பலனை உடல் பெறும் சாப்பிட்ட திருப்தி உண்டாகும். சாப்பிடும் அளவு குறையும்.
உணவை மெல்லாமல் சுவைக்காமல் வேகமாக விழுங்கினால் சாப்பிட்ட திருப்தி ஏற்படாது அதனால் அதிகம் சாப்பிட வேண்டிவரும். முறையாக ஜீரணமாகாது முறையாக ஜீரணமாக காரணத்தால் நல்ல உணவு உண்டும் அதன் சத்துக்களை பெற முடியாமல் போய்விடுகின்றது இது போன்ற முறையற்ற செயல்களால் வயிறு பாதிக்கப்பட்டு அதனால் உடல் தோற்றமும் ஆரோக்கியமும் பாதிப்படைகின்றது.

நேரத்துக்கு சாப்பி;டவேண்டும் என்ற எண்ணத்தில் பசியே இல்லாத போதும் உணவை சாப்பிடாதீர்கள் அது உங்களின் ஆரோக்கியத்தை கெடுத்துவிடும் நேரத்திற்கு சாப்பிடாவிட்டால் அலசர் வரும் என்ற வாதமே அறிவுக்கு முரண்பட்ட தவறான வாதமாகும்.

நேரத்திற்கு சாப்பிடாத காரணத்தினால் தான் அலசர் வருகின்றது என்றால் இன்று இந்தியாவில் வாழும் பல கோடி ஏழைகளுக்கும் வந்திருக்க வேண்டுமே! ஏன் வரவில்லை? அல்சர் வருவதற்கு காரணம் நேரத்திற்கு சாப்பிடாததல்ல, வயிறும் சிறுநீர்பைக்கும் உள்ள தொடர்பில் ஏற்படும் குறைபாடே 99மூ காரணம் அதை விட்டு மாத்திரைகள் மருந்துகள் சாப்பிட்டு வந்தால் அல்சர் சரியாகாது மருந்துகள் தான் சரியாகும். கையில் உள்ள பணம் தான் காலியாகும். எனவே நேரத்திற்கு சாப்பிடுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதே நேரம் பசித்தால் மட்டுமே சாப்பிடவேண்டும்.
உடலின் வடிவமைப்பு அசிங்கமாக இருப்பதை குறைப்பதற்கு பலர் இரவு பகல் உடற்பயிற்சி செய்வதை பார்க்கின்றோம் அதே நேரத்தில் உடற்பயிற்சி எதுவும் செய்யாமலே சாதாரண வேலைகளை செய்துகொண்டே ஆரோக்கியமாகவும் கச்சிதமாகமான உடலேலடும் சிலர் இருப்பதற்கு காரணம் என்ன?

உடல் உறுப்புகள் அனைத்தும் சரியாக சீராகயிருந்தால் இயங்கினால் உடல் கட்டமைப்பும் தோற்றமும் அழகாக இருக்கம்.
இடுப்பும் புட்டமும்  (Buttock சேரும் இடத்தில் அதிக சதை போட்டால் அவரது பெருங்குடல் பிரச்சனையில் இருக்கின்றது என்று அர்த்தம்.
இடுப்பின் பக்கவாட்டில் அதிக சதை மடிப்புகளுடன் ஏற்படுமானால் மண்ணீரலும் வயிறும் சரியாக இயங்கவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் எந்த அளவுக்கு இடுப்பு பகுதியில் மடிப்பு விழுகின்றதோ அந்த அளவுக்கு வியாதி இருக்கின்றது என்று அர்த்தம். வியாதியால் உண்டாகும் மடிப்பையும் ரசிக்கும் விந்தையான உலகம் இது. மண்ணீரலினின் பாதிப்பு உடல் எடையை அதிகாரிக்கவே செய்யும்.

புட்டப்பகுதியிலும் தொடையின் பின் பகுதியிலும் கழுத்தின் பின் பகுதியிலும் யாருக்கு எல்லாம் சதை உண்டாகின்றதோ அவருக்கு சிறுநீர்பையில்  (Urinary Bladder)  பிரச்சனை இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளவேண்டும். இவர்களின் தொடையும் தொடையும் உரசிக்கொள்ளும்.

அக்குள் மடிப்புகளில் மார்பு பக்கவாட்டில் சிலருக்கு சதை உண்டாகி கைவீசி நடக்கவே மிகவும் சிரமபடுவார்கள் இவர்களுக்கு சிறுகுடல் இயக்கம் பாதிக்கப்பட்டுவிட்டது என்பதை இதன் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.
உடம்பில் அளவுக்கதிகமாக எங்கு சதை ஏற்பட்டாலும் அது நோயின் அறிகுறியே உடல் உறுப்பு ஏதோ ஒன்றால் ஏற்படும் இயக்க குறைவே இதற்கு காரணம் அதை சரி செய்து விட்டால் அந்த சதை பகுதி சரியாகி உடல் வடிவமைப்பு சரியாகிவிடும்.
முகத்தின் அழகு தோற்றம் தான் ஒருவரை பற்றிய முதல் நல் அபிப்பிராயத்யத்தை வரவழைக்கும் முகத்தின் தோற்றத்திறகும் உடல் உறுப்புகளுக்கும் உள்ள தொடர்பை தெரிந்து கொண்டால் 6 வாரத்தில் ஆழகாக்குகின்றேன் என்று சொல்லும் இரசாயன முககீரீம்கலிருந்தும், பவுடர்களிலிருந்தும் இது போன்ற மற்ற பொருள்களிலிருந்தும் நம்மை காப்பாற்றிக்கொள்ளலாம்.

சிலருக்கு உடம்பு வெள்ளையாக இருக்கும் முகம் மட்டும் கருத்து கொண்டே பொகும். இவர் எத்தனை கிரீம் போட்டு தேய்த்தாலும் கிர்pம்தான் தீர்ந்து போகும் ஒழிய முகத்தின் கருப்பு மாறாது காரணம் யார் ஒருவருக்கு முகம் மட்டும் கருத்துக் கொண்டே போகின்றதோ அவருக்கு சிறுநீரகம் (கிட்னி- kidney ) சரியாக இல்லை என்பதை புரிந்து கொள்ளவேண்டும். சிறுநீரக பலகீனத்தின் பிரதிபலிப்புதான் முகம் கருத்துபோவது. இதுமட்டுல்ல முகத்தில் வீக்கம், தசைகள் சுருங்கல் கழுத்தின் முன்பக்கம் சதை உண்டாகுதல், நாக்கு உலர்ந்து போவது இவையெல்லாம் சிறுநீரகத்தின் சக்தி குறைபட்டால் உருவாவதே.

புருவம் இமைகளில் உள்ள முடி யாருக்கொல்லாம் கொட்டுகின்றதோ அவருக்கு நுரையீரல்களின் இயக்கம் சரியில்லை அதை சரிசெய்யும் போது இவை சரியாகும். உடம்பில் உள்ள முடி கொட்டுவது (தாடி, மீசை, புருவம், இமை, பிறப்புறுப்புகள்) நுரையீரல் சம்பந்தப்பட்டது தலையில் உள்ள முடி கொட்டுவது கிட்னி சம்பந்தப்பட்டது.
கண்களில் கீழ் இமை சிலருக்கு சிறு பை போல் தொங்கும் அல்லது துடித்துக்கொண்டே இருக்கும் வயிறு சக்தியின் குறைபாடே இது.
உதடு அழகாயிருக்க ஆயிரக்கணக்கில் மேக்கப் உபகரணங்கள், ஆரோக்கிய உடலுக்கு அது தேவையில்லை. உதடு பெருத்து தொங்கினால் உங்களுடைய மண்ணீரலும் வயிறும் தான் காரணம் உதடு வரண்டு போனால் அதற்கு பெருங்குடலே காரணம். இந்த உறுப்புகள் சரியாக இயங்கினால் உதடு இயற்கையாகவே அழகாக அமைந்துவிடும்.

முகம் கருத்து போவது சிறுநீரக பலகீனத்தால் ஏற்படுவது போல் சிலருக்கு முகம் நீல கலராக மாறும் இதற்கு காரணம் கல்லீரலே அதே போல முகம் வெளுத்தல் போன்று தோன்றினாலும் அதற்கும் காரணம் கல்லீரலே இந்த உறுப்புகளின் இயக்கத்தை சரிசெய்தால் இவைகள் சரியாகிவிடும்.
முகத்தில் கன்னம் மட்டும் உப்பியிருந்தால் சிறுகுடலை கவனிக்கவேண்டும் முகம் முழுவதும் உப்பியிருந்தல் வயிறு பெருங்குடலை சரிசெய்ய வேண்டும்.
கண்களின் சிகப்பு, நீர்வடிதல் போன்றவற்றை சரிசெய்ய நாம் சிறுநீர்பையின் சக்தி நிலையை சரிசெய்யவேண்டும்.

முகத்தின் தோற்றம் இத்தனை உறுப்புகள் சம்மந்தப்பட்டிருக்கும் போது இவற்றையெல்லாம சரிசெய்யாமல்
மேக்கப் போட்டு சரிசெய்ய முற்படுவது நமது உடலில் தேவையில்லாத இரசாயண பொருட்களை உள் அனுப்பி தோல்வியாதிகளை விலைக்கு வாங்குவது போன்றதாகும்.

சிலரின் கை கால் நகங்கள் உடைந்தும் முறிந்தும் உழுங்கில்லாத அமைப்பிலும் சொத்தை போன்றும் கலர் மாறியும் இருக்கும் இதற்கு காரணம் பித்தபை  (Gallbladder) கல்லீரலும்  (Liver) சரியாக இயங்க வில்லை என்பதை அறிந்து அவற்றை சரிசெய்தால் இவை சரியாகிவிடும்.
முகத்தின் அழகும் உடலின் அழகு தோற்றமும் நம் மனதில் நல் அபிப்பிராயத்தை உருவாக்கும் அதே நேரத்தில் சிலரிடம் நாம் நெருங்கி பேச முற்படும்போது நம்மை தூர விலகி நிற்க வைக்கும அவர் மீது
வீசும் வாசம்.
பூவுக்கு மட்டும்தான் வாசமுண்டா?
வேருக்கும் உண்டு!
வேருக்கு மட்டும்தான் வாசம் உண்டா?
ஓவ்வொரு மனிதனுக்கும் உண்டு!
மனிதனின் உடலில் வீசும் வாசத்தை வைத்தே அவனுடைய பாதிக்கப்பட்ட உறுப்பை கனித்துவிடலாம் அதனால் ஏற்படும் நோய்களையும் சரிசெய்துவிடலாம்.
யாருடைய உடலில் அழுகல் (Putrid)  வாசம் வீசுகின்றதோ அவருடைய சிறுநீரகமும் சிறுநீர்பையும் சரியாக இல்லை அதனை நாம் சரிவர இயங்கவைத்துவிட்டால் அந்த வாசம் வீசுவது நின்றுவிடும்.
யாருடைய உடம்பில் மாமிசவாசம்  (Fleshy)  வீசுகின்றதோ அவருடைய நுரையீரல், பெருங்குடல் பிரச்சனை என்பதை நாம் அறிந்துகொண்டு அந்த உறுப்புகளை நாம் சரிசெய்ய வேண்டும் அதன் மூலம் இந்த வாசத்pலிருந்து விடபடலாம்.
தீய்ந்த  (Scoreched)  வாசம் யார் மீது வீசுகின்றதோ அவருடைய இதயம் மற்றும்  (Triplewarmer vDk;) மூவெப்ப மண்டலத்தில் இயக்கம் சரியில்லை என்று அர்த்தம் அவற்றை அறிந்து இயக்கத்தை சரிசெய்வதன் மூலம் இந்த வாசத்திலிருந்து விடுபடலவாம்.
கல்லீரலும் பித்தபையும் சரியில்லை என்றால் அவருடைய உடம்பில் ஊசிபோன  (Rancid)  வாசம் வீசும் கல்லீரல் பித்தப்பை இயக்கத்தை சரிசெய்து இந்த வாசத்திலிருந்து விடுபடலாம்.
யாருடைய உடம்பில் சுகந்தமான  (Fragrant  இனிமையான வாசம் வீசுகின்றதோ அருடைய உடம்பில் அனைத்து உறுப்புகளும் இயக்கம் சரியாக இருக்கிறது குறிப்பாக வயிறும் மண்ணீரலும் நன்றான இருக்கின்றது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.
பார்க்க அழகாக இருபார்கள் சிலர் ஆனால் வாய் திறந்து பேசினால் நம்மால் அருகில் நிற்க முடியாது அந்த அளவுக்கு வாசம் வீசும்.
பித்தப்பை சரியாக இயங்காவிட்டால் அவர்கள் நாக்கில் வெண்மை படியும் வாயும் வாசம் வீசும், இவர்கள் தினமும் காலையில் பல்துலக்கிவிட்டு நாக்கை டங்கிளீனர்  (Tongue Cleaner) கொண்டு வழித்துக்கொண்டிருப்பார்கள். இவர்கள் வாழ்நாள் முழுவதும் இப்படிசெய்தாலும் இவர்களின் பிரச்சனை தீராது, இதனால் நாக்கின் சுவை உணர்வு மொட்டுக்கள் பாழடைந்து நாக்கின் சுவை உணரும் தன்மை இழந்து போகும். இதற்கு ஒரே வழி பித்தப்பையின் இயக்கத்தை சரிசெய்ய வேண்டும், வாய் வாசனை சரியாகும், வெண்மை படிதல் நிற்கும்.
சிறுகுடல் பாதி;க்கப்படின் வாயின் உட்பகுதியிலும் நாவிலும் புண்கள் ஏற்படும் இதுவும் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும், இதனை சரிசெய்ய சிறுகுடல் இயக்கத்தினை சரிசெய்தால் போதும்.
நாக்கு மிகவும் சிகப்பாக இருந்தால் உடன் நாம் இதயத்தை கவனிக்கவேண்டும். நாக்கு மஞ்சளாக இருந்தால் வயிற்று பகுதியில் பிரச்சனை என்று அறிந்து அவைகளை சரிசெய்ய வேண்டும். சில நேரங்களில் இவைகளாலும் வாய் வாசனை ஏற்படுவதுண்டு.
குளிக்காமல் பல் துலக்காமல் இருந்து வீசும் வாசத்திற்கு உடல் உறுப்புகள் பொருப்பல்ல அவைகள் அப்பாவிகள் தினமும் குளித்து வாசனை திரவியங்கள் பூசாமல் வீசும் இயற்கையான வாசத்திற்கே உடல் உறுப்புகள் பொறுப்பாகும்.
உடல் உறுப்புகளின் இயக்கத்தினை நாம் சரியாக வைத்துக்கொண்டால் உடல் அழகைப்பற்றி நாம் கவலைபட தேவையில்லை. அழகே வா அருகே வா என்று அழைக்க வேண்டிய அவசியமுமில்லை அவை நம்முடனே தங்கி கொள்ளும் நம்முடைய தோற்றம் சொல், செயல் அனைத்தும் அழகாவே அமையும் இன்ஷாஅல்லாஹ்.
மனிதர்களின் கைகள் தேடிக்கொண்ட (தீய செயல்களின்) காரணத்தால் கடலிலும் தரையிலும் (நாசம்) குழப்பமும் தோன்றின தீமைகளிலிருந்து அவர்கள் திரும்பி விடும் பொருட்டு அவர்கள் செய்தார்களே (தீவினைகள்) அவற்றில் சிலவற்றi (இவ்வுலகில்) அவர்கள் சுவைக்கும்படி அவன் செய்கின்றான் (அல்குர்ஆன் 30:41).
இயற்கையான அழகை பெற்று வாழ முயற்சிப்போம். இரசாயண பொருட்களின் தீங்குகளிலிருந்து நம்மை காத்துக்கொள்வோம், அதற்காக பிராத்திப்போம்... மீண்டும் அடுத்த தொடரில் சந்திப்போம்..இன்ஷா அல்லாஹ்..

நன்றி : தமிழ் இஸ்லாம்.காம்  Post 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
YASS இணைய வலயமைப்பு © 2012 | Designed by Canvas Art, in collaboration with Business Listings , Radio stations and Corporate Office Headquarters