மரணம் நிரந்தரமல்ல.....




உன் மரணம் நிரந்தரமல்ல
மண்ணின் இடைக்கால விடுதலை
மறுபடியும் நீ எழுப்பப்படுவாய்
மறுமை எனும்
நியாயத்தீர்ப்பு நாளில்
மனிதா!
மரணம் உனக்கு நிரந்தரமல்ல
மண்ணின் இடைக்கால விடுதலை



மண்ணறையினில் கூட - நீ
மகிழ்வாய் உறங்கமாட்டாய்
நன்மை செய்தவர் சுகமான உறக்கத்தில்
தீமை செய்தவன் தீராத மண்ணறை வேதனையில்
கப்றுகள் கூட உன்னை நிராகரிக்கும்
மனிதா!
மரணம் உனக்கு நிரந்தரமல்ல
மண்ணின் இடைக்கால விடுதலை

மட்கிய உன் உடலுக்கும்
உயிர் தருவான் எம்மிறைவன்
உலகின் உன் செயல்களுக்காய்
உடல் உறுப்புகள் பதில் சொல்லும்
களவாடிய கைகளும்
பொய், புறம் பேசிய நாவும்
தனித்தனியே தம்மை எடுத்து வைக்கும்
உன் நன்மைகள் நற்கணக்கில்
பாவங்கள் தண்டைனைக்கு உரம் போடும்
மனிதா!
மரணம் உனக்கு நிரந்தரமல்ல
மண்ணின் இடைக்கால விடுதலை

சொர்க்கத்தின் சுகந்தங்களுக்காக
நன்மையைத் தேடிக் கொள் - உன்
பாவக்கரங்களை தவ்பாவில் மீண்டு
கழுவிக் களைந்துக் கொள்

மனிதா!
மரணம் உனக்கு நிரந்தரமல்ல
மண்ணின் இடைக்கால விடுதலை
மறுமை நாளை பயந்துகொள்
மரணம் வரும் முன் திருந்திக் கொள்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
YASS இணைய வலயமைப்பு © 2012 | Designed by Canvas Art, in collaboration with Business Listings , Radio stations and Corporate Office Headquarters