அஸ்ஸலாமு அலைக்கும்...
எமது YASS இணைய வலயமைப்பினை 1000 க்கும் மேற்பட்வர்கள் பார்வையிட்டிருப்பதனை தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றோம். அல்ஹம்துலில்லாஹ்!






0 கருத்துகள்

மகனுக்குத் தந்தையின் வழிகாட்டல் தோழனுக்கும் உற்ற தோழனுக்கும் உள்ள வித்தியாசம்




ஒரு இளைஞன் எப்பொழுதும் வீட்டிற்குத் தாமதமாகவே வந்து கொண்டிருந்தான். இவ்வாறே பல நாட்கள் கழிந்தன. ஒருநாள் அந்த இளைஞனின் தந்தை, ''மகனே, ஒவ்வொரு இரவும் நீ தாமதமாகவே வீட்டிற்குள் நுழைகின்றாய். எங்கே போய் விட்டு வருகின்றாய்?''
அதற்கு, ''தந்தையே.., எனக்கு ஒரு நண்பன் உண்டு. ஒவ்வொரு இரவும் நான் அவனைச் சந்திக்கின்றேன். நாங்கள் இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருப்போம். பொழுது செல்வது தெரிவதில்லை. எனவே தான் வீட்டிற்கு வரத் தாமதமாகி விடுகின்றது'' என்றான் அந்த மகன்.

உண்மையாகவா? இந்த வயதில் இப்படிப்பட்டதொரு நண்பனை இந்தக் காலத்திலும் பெற்றுக் கொள்ள இயலுகின்றதா..!? என்று ஆச்சரியத்துடன் கேட்டவராக, உண்மையில் இது போன்றதொரு பிணைப்பு மிக்க தோழமையை நான் என்னுடைய வாழ்நாளில் கண்டிருக்கின்றேன்.
இந்தக் காலத்தில் நட்பினால் என்ன தான் பயன் இருக்கின்றது? உண்மையிலேயே இந்த வயதில் உங்களுக்கிடையே அவ்வளவு பிணைப்பா இருக்கின்றது?



மகன் கூறினான், ''ஆம், தந்தையே..! அப்படிப்பட்ட நண்பன் தான் அவன், ''எங்கே என்னுடைய வியர்வைத்துளிகள் விழுகின்றனவோ, அங்கே தன்னுடைய இரத்தத்தைச் சிந்தத் தயாராக இருக்கின்றேன்'' என்று கூறக் கூடியவன் அவன் என்றான் பெருமிதத்தோடு தன் நட்பைப் பற்றி..!
அப்படியா நல்லது. நாளை.., நானும் உன்னுடன் அவனைச் சந்திக்க வர விருப்பப்படுகின்றேன், என்னை அழைத்துச் செல்வாயா..!
அந்தக் குறிப்பிட்டதொரு மாலை நேரத்தில் மகனுடைய நண்பனைச் சந்திப்பதற்காக கிளம்பும் பொழுது, குறிப்பிட்ட அந்த நேரத்தில் உடனே கிளம்பாமல் தந்தை சிறிது வேண்டுமென்றே தாமதப்படுத்தினார், இதன் காரணமாக அவர்கள் வழக்கமாகச் சந்திக்கும் நேரத்தை விட அதிக நேரமாகி விட்டது. நண்பனது வீட்டைத் தாமதமாகவே வந்தடைந்தார்கள்.
முன்கதவு தாளிடப்பட்டிருந்தது. மகன் கதவைத் தட்டினான், உள்ளே இருந்த நண்பன், யாரது..? என்று குரல் கொடுத்தான்.
நான் தான்.., உன்னுடைய நண்பன்.., என்று கூறித் தன்னுடைய பெயரையும் குறிப்பிட்டான்.
ஓ..! இன்றைக்கு நீ தாமதமாக வந்து விட்டாயே..! என்று கூறியவனாக கதவைத் திறந்தான்.
உள்ளே நுழைந்த மகன் அடுத்த வார்த்தையை ஆரம்பிக்கு முன்பாகவே, அந்த நண்பன் கூறினான், காத்திருப்பதைக் காட்டிலும் தூங்கி விடலாம் என்று தூங்கி விட்டேன், இன்னும் எனக்குத் தூக்கக் கலக்கமாகவே இருக்கின்து, இப்பொழுதும் என்னுடைய உடல் நிலை சரியில்லை, என்னை மன்னித்து விடு என்று கூறினான், ''தான் வியர்வை சிந்தினால் தனக்காக இரத்தத்தையே அர்ப்பணிப்பான்'' என்று கூறியிருந்த அந்த நண்பன். அவ்வாறு கூறிக் கொண்டே அவன் கதவை மீண்டும் தாளிட்டுக் கொண்டான், கதவை தாளிடும் சங்கிலியை இழுத்துப் போடும் சப்தத்துடன் அவன் வீட்டிற்குள் திரும்பிச் சென்ற சப்தம் இருவருக்கும் கேட்டது.
அந்த தந்தை கூறினார், என்னுடைய நண்பன் அப்படி, இப்படி.. என்றாய். உன்னை எவ்வாறு அவன் நடத்தி விட்டான் பார்த்தாயா? வா..! எனக்கும் ஒரு நண்பன் இருக்கின்றான், அவன் எத்தகைய நண்பன் என்று உனக்கு நான் காட்டுகின்றேன் என்றார். அந்த நண்பர் இங்கே பக்கத்தில் தான் வசிக்கின்றார். எனக்கும் வயதாகி விட்டது, இன்னும் அவனுக்கும் கூட. அவனை நான் பார்த்துப் பல வருடங்கள் ஆகி விட்டன. வா..! அவனைச் சென்று சந்திப்போம். பின்னர் நட்பு என்பது எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை நீயே யூகித்துக் கொள் என்றார்.
அவ்வாறு கூறிக் கொண்டே இருவரும் அந்த நண்பரது வீடு நோக்கி நகர்ந்தனர். அவனது தந்தையின் வீட்டை அடைந்ததும், அவனது தந்தை தனது நண்பரை அழைத்தார். தந்தையின் குரலைக் கேட்ட மாத்திரத்திலேயே அந்த தந்தையின் நண்பர் பதில் கொடுத்தார். இதே வந்து விடுகின்றேன் என்று கூறிக் கொண்டே, உன்னைப் பார்த்து எத்தனை வருடங்களாகி விட்டது.., இப்பொழுது தான் என்னைச் சந்திக்கத் தோன்றியதாக்கும்..! என்றார்.
மகனது நண்பனோ உள்ளிருந்து கொண்டே வந்திருப்பது யார் என்றான். ஆனால் தந்தையின் நண்பரோ தந்தையின் குரல் கேட்டதுமே, சந்தித்துப் பல வருடங்கள் ஆகிய நிலையிலும் வந்திருப்பது யார் என்று புரிந்து கொண்டார்.
சற்று தாமதத்திற்குப் பின்னர் கதவு திறக்கப்பட்டது, ஆனால் என்னதொரு வித்தியாசமானதொரு நண்பர், அவர் அவர்கள் முன் மிகவும் வித்தியாசமான கோலத்தில் காட்சி அளித்தார். அவரது தலையில் சமையல் பாத்திரங்கள் இருந்தன, அவரது ஒரு கையில் கைப்பை இருந்தது, இன்னொரு கையில் தடி ஒன்றும் இருந்தது. முகமன்.. ஸலாம் ஆகிய அறிமுகங்கள் முடிந்ததும், அந்தத் தந்தை தனது நண்பரைப் பார்த்து, இது என்ன கோலம் என்றார்?
இந்தக் கோலமா நண்பரே..! மிக நீண்ட நாட்களுக்குப் பின்னர் உங்களது குரலைக் கேட்டேன், வந்திருப்பது நீங்கள் தான் என்பதை ஊகித்துக் கொண்டேன்.
எனது நண்பன் வந்திருக்கின்றான்.., மிக நீண்ட நாட்கள் கழித்து.., இன்னும் இருட்டிய இந்த நேரத்தில்..! உண்மையில் அவனுக்கு ஏதாவது கஷ்டம் இருந்திருக்க வேண்டும். இன்னும் சாப்பிடுவதற்கு ஒன்றுமில்லாத நிலையில் பசியோடிருக்கக் கூடும். எனவே ஒரு பாத்திரத்தில் உணவை எடுத்துக் கொண்டேன். இதன் மூலம் உனக்கு நான் உணவளிக்க முடியும்.
அல்லது நீ யாரிடமாவது கடன் பெற்றிருக்க வேண்டும், அது உன்னுடைய வாழ்வை சிரமத்திற்குள்ளாக்கி இருக்கும் என்று கருதினேன். எனவே, பணத்துடன் கூடிய இந்தப் கைப்பையை எடுத்துக் கொண்டேன்.
அல்லது, உனக்கு யாராவது எதிரிகள் இருக்கக் கூடும், உன்னுடன் சேர்ந்து அவனை எதிர்ப்பதற்கு இந்தக் கம்பு பயன்படுமே என்று இதனையும் எடுத்துக் கொண்டேன்.
நண்பனே..! நானோ இப்பொழுது தள்ளாத முதுமையில் இருந்து கொண்டிருக்கின்றேன். உன்னுடைய எதிரியை வலுவோடு எதிர்க்க இயலாவிடினும், ஒன்று அல்லது இரண்டு அடிகளாவது என்னால் எதிர்த்து அடிக்க இயலும் என்றார்.
அந்த மகனுடைய தந்தை கூறினார், நண்பரே..! எந்த சண்டையும் இல்லை, நான் கடனாளியாகவும் இல்லை, பசிக் கொடுமையினால் உன்னிடம் வரவுமில்லை.
இதோ இவன் என்னுடைய மகன்..! அவன் அவனாக ஒரு நண்பனைத் தேடிக் கொண்டான். அவனுடைய நண்பனைச் சென்று நான் பார்த்து விட்டு வந்தேன். அதேநேரத்தில் என்னுடைய நண்பனையும் அவனுக்கு அறிமுகப்படுத்த விரும்பி இங்கு உன்னிடம் அழைத்து வந்தேன் என்றார்.
அந்த மகனுக்கு அமைந்த போன்ற நண்பர்களிடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும்படி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அறிவுறுத்தி உள்ளார்கள்.
ஓ.. அல்லாஹ்..! ஏமாற்றுக்கார நண்பர்களிடமிருந்து நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன் - வழிகெடுக்கும் நண்பர்களிடமிருந்தும் உன்னிடம் பாதுகால் தேடுகின்றேன் - அவன் தன்னுடைய இரண்டு கண்களைக் கொண்டு நிலை குத்தாமல் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, மனம் நிறைந்த அன்புடன் என்னை நோக்குவது போல இருக்கின்றது, ஆனால் மனதுள் என்னைக் கிழித்துக் கொண்டிருக்கின்றான் இன்னும் என்னை நறநறவென்று மென்று கொண்டிருக்கின்றான்..!
இத்தகைய சூது மிக்க, வஞ்க எண்ணமுள்ள நண்பனிடமிருந்து பாதுகாவல் தேடுகின்றேன்.
ஒருவரை எவ்வாறு வஞ்சக எண்ணமுள்ள நண்பன் என்று இனங் கண்டு கொள்வது?
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
எப்பொழுதெல்லாம் என்னிடம் நல்லவற்றைக் காணுகின்றானோ, அதனைத் தன்னுள் மறைத்து விடுவான். எப்பொழுதெல்லாம் பிடித்தமுள்ள, நல்லனவற்றை, சரியானவற்றைக் காண்கின்றானோ, அதனையும் தன்னுள் மறைத்துக் கொள்வான். அந்த நல்லவற்றைப் பாராட்டுவதற்கு அவனது உதடுகள் வளையாது, அதனை பிறரிடம் சொல்வதற்கும் அவனுக்கு மனது வராது. இருப்பினும், எப்பொழுது என்னிடம் ஒரு தவறானதொன்றைப் பார்த்து விடுகின்றானோ, அடுத்தவர்களிடம் சென்று அதனைப் பற்றிக் கூறுவான். அதனை விளம்பரப்படுத்துவான், எனது தவறுகளைப் பிறரிடம் போட்டு உடைத்துக் கொண்டிருப்பான்.
ஓ அல்லாஹ்..! இத்தகைய நண்பர்களிடமிருந்து நான் பாதுகாவல் தேடுகின்றேன்.
உங்களுக்கு ஏகப்பட்ட நண்பர்கள் இருக்கலாம், ஆனால் அவர்களில், உண்மையான நண்பர்கள் இருப்பது மிகவும் அரிதானதே..!

நன்றி : தமிழ் இஸ்லாம்.காம்  Post      




0 கருத்துகள்

கணவரை மகிழ்விப்பது எப்படி? (அல்குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் நிழலில்)



மனைவியின் அழகிய வரவேற்பு
பணியிலிருந்தோ அல்லது பயணத்திலிருந்தோ கணவன் வீட்டிற்கு வரும்போது அவரை நல்ல வார்த்தைகள் கூறி வாழ்த்துக்களுடன் வரவேற்று உபசரியுங்கள்.
முகமலர்ச்சியுடன் கணவரை எதிர்கொள்ளுங்கள்.
உங்களை அழகுபடுத்தி, உங்கள் கணவருக்குப் பிடித்தமான வாசனைத் திரவியங்களை பூசிக்கொள்ளுங்கள்.


சந்தோஷமான செய்தியை முதலில் தெரிவியுங்கள், கவலையான செய்தி இருந்தால் உங்கள் கணவர் அமைதி அடையும் வரை பிற்படுத்தி வையுங்கள்.
அன்பான, அரவணைப்பான வார்த்தைகளை உங்கள் கணவரிடத்தில் பயன்படுத்துங்கள் (வேலையிலோ அல்லது வரும் வழியிலோ ஏதாவது பிரச்சினைகளைச் சந்தித்திருக்கலாம்).
கணவருக்காக அக்கறையுடன் தயாரிக்கப்பட்ட உணவை சரியான நேரத்திற்குள் பரிமாறுங்கள் (கணவருடன் சேர்ந்து உண்ணும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்).
இனிய குரலும் தேவையான கனிவும்
உங்கள் கணவரிடம் மென்மையான குரலில் அழகாக, அன்பாக பேசுங்கள். மேலும் மஹரம் இல்லாத ஆண்களுக்கு முன்னால் இவ்வாறு குழைந்து பேசக் கூடாது என்பதை மறந்துவிடவேண்டாம். உங்கள் கணவரிடத்தில் உம்!! இல்லை!! என்று சொல்லி அவரின் பேச்சை உதாசீனப்படுத்தாதீர்கள்.
நறுமணமும் அலங்கரிப்பும்
உடலை அழகு-ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சிரத்தையுடன் முயற்சி செய்யுங்கள். (வீட்டு வேலைகளை வேலைக்காரியோ அல்லது இயந்திரங்களின் உதவியோ இன்றி நாமே செய்ய முயற்சி செய்யவேண்டும். இதனால் உடல் ஆரோக்கியத்தையும் உடல் அழகையும் பேணுவதோடு பணச்செலவையும் குறைக்கலாம்)
உங்கள் கணவருக்கு அருகில் (மட்டும்) மெல்லிய ஆடைகளைப் பயன்படுத்துங்கள்.
தினமும் குளித்து உடலை சுத்தமாக வைத்துக்கொள்ளும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள். குறிப்பாக மாதவிடாய் காலத்தில் சுத்தமாக வைத்துக்கொள்ளுவதில் அதிகமாக அக்கறைச் செலுத்துங்கள்.
வீட்டிற்கு கணவன் வருவதற்கு முன்னால் உங்களை அழகுபடுத்திக் கொள்ளுங்கள். (அழுக்கான ஆடையுடன் முகத்தில் எண்ணெய் வடிந்திருக்கும் நிலையில் உங்கள் கணவரிடம் செல்லாதீர்கள்)
தடுக்கப்பட்ட முறையில் அதாவது ஹராமான முறையில் அலங்கரித்துக் கொள்ளக்கூடாது. (உதாரணமாக புருவத்தை வழித்துக் கொள்ளுதல், ஒட்டுமுடி வைத்துக் கொள்ளுதல்)
கணவனுக்கு பிடித்தமான வாசனைத் திரவியம், கலர் துணிவகைகள் ஆகியவற்றை பயன்படுத்துங்கள்.
முடி அலங்காரம், வாசனைத் திரவியங்கள், உடையின் வண்ணம் மற்றும் மாடல் ஆகியவற்றை கணவன் ரசிக்கும்படி அடிக்கடி மாற்றுங்கள். இது போன்ற விஷயங்கள் மஹரம் இல்லாத ஆண்களுக்கு முன் செய்வது ஹராம் என்பதை நினைவிற் கொள்ளுங்கள்.
நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது: 'எந்தப் பெண் (மனைவி) அனைவரையும் விடச் சிறந்தவள்?' அண்ணலார் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: 'எந்தப் பெண் தன் கணவன் தன்னைப் பார்க்கும் போது அவனை மகிழ்விப்பாளோ, அவன் கட்டளையிட்டால் அவனுக்கு கீழ்ப்படிந்து நடப்பாளோ, தன் விஷயத்திலும், தன்னுடைய பொருளிலும் தன் கணவனுக்கு விருப்பமில்லாத எந்தப் போக்கையும் மேற்கொள்ளமாட்டாளோ அத்தகையவளே, அனைவரையும் விடச்சிறந்தவள்'. ( நஸயீ)
இனிய வாழ்வின் திறவுகோல் தாம்பத்தியமே
திருமணத்தில் இணையும் ஆணும், பெண்ணும் ஒருவருக்கொருவர் தங்களது இயற்கையான உடல் தாகங்களை (அனுமதிக்கப்பட்ட முறையில்) செம்மையாகப் பகிர்ந்து கொள்வது இஸ்லாமியத் திருமணத்தின் முக்கிய குறிக்கோளாகும் என நபி (ஸல்) அவர்கள் உணர்த்தினார்கள். (புகாரி, முஸ்லிம், அபூதாவுத், நஸயீ)
கணவன் தாம்பத்தியத்திற்காக மனைவியை அழைத்து, அவள் தேவையின்றி மறுக்கிறாள். அதனால் கணவன் அவள் மீது கோபங்கொண்டு அவ்விரவைக் கழித்தால், விடியும் வரை வானவர்கள் அப்பெண்ணை சபித்துக்கொண்டே இருப்பார்கள் என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள். (புகாரி, முஸ்லிம், அஹ்மத்).
நபி (ஸல்) அவர்கள் தெளிவாக்கினார்கள்: கணவன் ஊரிலிருக்கும் போது அவனது அனுமதியின்றி எந்தப் பெண்ணும் (ரமளான் அல்லாத நஃபிலான) நோன்பு நோற்பது கூடாது. மேலும் தனது வீட்டில் கணவன் அனுமதியின்றி எவரையும் அனுமதிக்கக் கூடாது. (புகாரி, முஸ்லிம், அபூதாவூத், தாரமி).
உங்கள் கணவனுக்கு தாம்பத்திய உறவு அவசியம் தேவை என்கிற சூழ்நிலையில் அதனை முதன்மைப் படுத்துங்கள். (பிறர் தவறாக எண்ணுவார்கள் என்றோ ஏதாவது பேசுவார்கள் என்றோ தள்ளிப்போடாதீர்கள்).
உங்களுடைய உடலை சுத்தமாகவும் வாசனையாகவும் வைத்துக் கொள்ளுங்கள்.
கணவருடன் இனிய மொழியில் காதலைப் பரிமாறிக் கொள்ளுங்கள். (குடும்பத்தின் பிரச்சினைகளை மறந்துகூட அப்பொழுது வெளிப்படுத்தாதீர்கள். இல்லையென்றால் சந்தோஷமான சூழ்நிலையை சங்கடமான சூழ்நிலையாக அது மாற்றிவிடக்கூடும்).
உங்கள் கணவர் திருப்தி அடையும்வரை ஒத்துழையுங்கள்.
தோதான நல்ல சூழ்நிலைகளில் உங்கள் கணவரை தாம்பத்தியத்திற்கு ஊக்குவியுங்கள் (உதாரணமாக வெளியூர் பயணத்திலிருந்து திரும்பியபோது அல்லது கணவருக்கு அமைதி தேவை என்னும் பட்சத்தில்).
அல்லாஹ் அருளியவைகளைக் கொண்டு திருப்தி கொள்வது
உங்களுடைய கணவன் ஏழையாகவோ அல்லது சாதாரண வேலையிலோ இருந்தால் அதற்காக வாழ்க்கையை வெறுத்துவிடாதீர்கள். (பிறரின் கணவர்கள் போல் நீங்கள் இல்லையே என ஒப்புமையும் செய்யாதீர்கள். அது உங்கள் கணவருக்கு வெறுப்பை உருவாக்கும்).
ஏழைகள், உடல் ஆரோக்கியம் இல்லாதவர்கள், ஊனமுற்றோர்கள் போன்ற நம் நிலைக்கு கீழாக உள்ளவர்களை பார்த்தேனும் இறைவன் நம்மை இந்த நிலைக்கு உயர்த்தி வைத்திருப்பதை நினைத்து சந்தோஷப்படுங்கள்.
தன்னம்பிக்கையும் மற்றும் கணவருக்கு நீங்கள் அளிக்கும் ஊக்கமும்தான் உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றம் என்பதை மறந்துவிடாதீர்கள்.
உலக விஷயத்திலேயே மூழ்கிவிடவேண்டாம்
இவ்வுலக வாழ்க்கை மட்டும்தான் நமக்கு நோக்கம் என்று இருந்திட வேண்டாம்.
இதன் அர்த்தம் அல்லாஹ் அனுமதித்த இன்பங்களை அனுபவிக்கக் கூடாது என்பதல்ல, மறுமையின் சுகவாழ்வுக்கு எதிரான விஷயங்களை கவனமாகத் தவிர்த்து வாழ வேண்டும்.
உங்கள் கணவரின் செலவை குறைக்கச் சொல்லி அதனை தர்மம் செய்யவும், ஏழைகள் மற்றும் தேவைப்படும் மக்களுக்கு கொடுக்கவும் ஆர்வம் ஊட்டுங்கள்.
அவசியம் இல்லாத பொருள்களை வாங்கிக்கேட்டு கணவனை நச்சரிக்காதீர்கள். (உங்கள் பெற்றோர்கள் வீட்டில் கிடைத்த மாதிரி கணவனிடம் எதிர்பார்க்காதீர்கள். உங்கள் கணவனின் வசதிக்கேற்ப உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்).
செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்வின் கவர்ச்சியாகும். நிலையான நல்லறங்களே உமது இறைவனிடம் கூலியில் சிறந்ததும், எதிர்பார்க்கப் படுவதில் சிறந்ததுமாகும். (அல்குர்ஆன் 18:46)
கணவனின் உதவியை வரவேற்றல் நன்றி செலுத்துதல்
நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் 'பெரும்பான்மையான பெண்கள் கணவனின் உதவியை நிராகரித்ததன் காரணமாக அவர்களை நரகத்தில் பார்த்தேன்' என்பதாக. எனவே கணவன் செய்த உதவிகளை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்.
உங்கள் கணவரின் உதவிகளுக்கு நன்றி செலுத்தும்போது உங்கள் கணவரை மேலும் உதவி செய்பவராகவும் உங்களை பலவழிகளில் சந்தோஷப் படுத்துபவராகவும் காண்பீர்கள்.
உங்கள் கணவரின் நன்றியை மறக்கும்போது, உங்கள் கணவர் 'ஏன் இவளுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று தன்னைத்தானே நொந்து கொள்வார்'.
உறுதுணையும் உதவியும்
உங்கள் கணவர் ஏதேனும் விபத்தின் காரணமாக ஊனம் ஏற்பட்டுவிட்டால் அல்லது வியாபாரத்தில் நஷ்டமடைந்துவிட்டால் பெண்களுக்கு அனுமதிக்கப்பட்ட சொந்தத் தொழில் மூலமாகவோ மற்றும் உங்கள் சொத்தின் மூலமாகவோ கணவனுக்கு 'தோள்' கொடுங்கள்.
கட்டுப்படுதல்
ஒரு பெண் தனது ஐவேளைத் தொழுகையை (செம்மையாக) தொழுது (ரமழான்) மாதத்தில் நோன்பு நோற்று, தனது கற்பையும் காத்துக்கொண்டு (இறை ஆணைகளுக்கு மாற்றமில்லாத காரியங்களில்) தன் கணவனுக்குக் கட்டுப்பட்டும் நடந்து கொண்டால், 'நீ விரும்பும் எந்த வாயில் வழியாக வேண்டுமானாலும் சுவர்க்கத்தில் நுழையலாம்' என அவளிடம் (மறுமையில்) கூறப்படும் என நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள். (தப்ரானி, முஸ்னத் அஹ்மத்)
ஒருவர் மற்றொருவருக்கு சாஷ்டாங்கம் (ஸஜ்தா) செய்யலாமென நான் கட்டளையிட நாடியிருந்தால் மனைவியை கணவனுக்கு தலை வணங்கி சாஷ்டாங்கம் (ஸஜ்தா) செய்ய ஆணையிட்டிருப்பேன். (ஆனால் அதுவும் தவறே! எனவே அதனை அனுமதிக்கவில்லை) என ரசூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத், நஸயீ, திர்மிp, இப்னுமாஜா, பைஹகி)
கணவனுடைய அத்தனை கட்டளைகளையும் நிறைவேற்றுங்கள் அது இறைவனுக்கு மாற்றமாக இல்லாதபோது.
ஓர் இஸ்லாமிய குடும்பத்தில் கணவன் தலைவன் என்பதையும் மனைவி கணவனுக்கு உதவி செய்பவள் என்பதையும் மறந்துவிடாதீர்கள்.
அமைதிப்படுத்துங்கள் (கோபமாக இருக்கும் போது)
முதலாவதாக கணவரை எது கோபப்படுத்துமோ அதை தவிர்த்துவிடுங்கள். அப்படி தவிர்க்க முடியாத சூழ்நிலையில் சமாதானப் படுத்துங்கள்.
நீங்கள் பிழை செய்திருந்தால் மன்னிப்புக் கேளுங்கள். (கோபமான சூழ்நிலையில் ஒருவருக்கொருவர் வீசிக் கொள்ளும் 'உப்பு சப்பு' பெறாத வார்த்தைகள்தான் விவாகரத்தில் முடிகிறது என்பதை எல்லோருமே அறிவார்கள்).
கணவர் தவறு செய்திருந்தால் அதனை நல்ல சூழ்நிலை பார்த்து சொல்ல முயற்சி செய்யுங்கள். அல்லது அவருடைய கோபம் குறையும் வரை அமைதியாகக் காத்திருந்து சாந்தமான முறையில் அவருடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள்.
வெளி விஷயத்தின் காரணமாக கோபம் இருந்தால், கோபம் குறையும் வரை காத்திருந்து பிறகு அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்யுங்கள். (உதாரணமாக வேலையில் பிரச்சினை, மற்றவர்களால் அவமானப் படுத்தப்பட்டிருத்தல்)
அவருடைய பிரச்சினைகளை அறிந்து கொள்ளும் பொருட்டு அந்த கோபமான நிலையிலேயே பற்பல கேள்விகளை எழுப்பி தொந்தரவு செய்யாதீர்கள்.
'என்ன நடந்தது? என்று நீங்கள் சொல்லித்தான் ஆகவேண்டும்;' என்றோ அல்லது எது உங்களை கோபப்படுத்தியது? என்று எனக்கு தெரிந்துதான் ஆகவேண்டும்! என்றோ அல்லது நீங்கள் எதையோ மறைக்கிறீர்கள்! அதைத் தெரிந்து கொள்வதற்கு எனக்கு முழு உரிமை இருக்கின்றது! என்றோ கேள்வி கணைகளை எழுப்பி எரிகிற வீட்டில் எண்ணெய்யை ஊற்றாதீர்கள்.
பாதுகாப்பது (அவர் வீட்டில் இல்லாத போது)
இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்;. தங்கள் அழங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது இன்னும் தங்கள் முந்தானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும் (அல்குர்ஆன்: 24:31)
அல்லாஹ் கூறுகிறான்: நல்லொழுக்கமுள்ள மனைவிமார்கள் (தங்கள் கணவனிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவர்) இல்லாத சமயத்தில் அவர்களின் (செல்வம், உடைமை, மானம், மரியாதை) அனைத்தையும் பாதுகாப்பவர்களாகவும் இருப்பார்கள். (தங்கள் கணவருக்கு மாறு செய்ய மாட்டார்கள்). (அல்குர்ஆன்: 4:34)
தடுக்கப்பட்ட நட்புகளைவிட்டும் உங்களை காத்துக் கொள்ளுங்கள்.
குடும்பத்தின் ரகசியங்களை மற்றவரிடம் சொல்லாதீர்கள். (முக்கியமாக தாம்பத்தியம் மற்றும் உங்கள் கணவர் பிறரிடம் சொல்ல விரும்பாத விஷயங்கள்)
வீட்டில் உள்ள பொருள்களையும் குழந்தைகளையும் பேணிப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
கணவனுடைய பணத்தையும் சொத்துக்களையும் பாதுகாத்து வையுங்கள்.
கணவனுடைய அனுமதியின்றி வீட்டைவிட்டு வெளியேறாதீர்கள்.
அப்படியே உங்கள் கணவர் அனுமதித்தாலும் முழு ஹிஜாபுடனும் பாதுகாப்புடனும் வெளிச் செல்லுங்கள்.
உங்கள் கணவருக்குப் பிடிக்காதவர்களை வீட்டிற்குள் வர அனுமதிக்காதீர்கள்.
மஹரம் இல்லாத ஆண்களை நீங்கள் தனியாக இருக்கும் இடங்களில் அனுமதிக்காதீர்கள். (கணவனுடைய சகோதரர்கள், தாயின் சகோதரி மகன்கள், தந்தையின் சகோதரனின் மகன்கள் - போன்றவர்கள்தானே என்று அலட்சியமாக இருக்காதீர்கள்)
கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அவருடைய பெற்றோர்களுடனும் உறவினர்களுடனும் நல்லபடியாக நடந்து கொள்ளுங்கள்.
பொறுமையும் பாதுகாப்பளித்தலும்
கஷ்டங்களை எதிர்கொள்ளும்போது பொறுமையுடன் இருங்கள்.
வாழ்க்கையில் இழப்புகள் சோதனைகள் (உங்களுக்கு, உங்கள் கணவருக்கு, குழந்தைகளுக்கு, உறவினர்களுக்கு, சொத்துக்களுக்கு...) ஏற்படும்போது இறைவனின் கூலியை எதிர்பார்த்து பொறுமை கொள்வது அவசியம். (உதாரணமாக : நோய், விபத்துகள், இறப்புகள்...)
அழைப்புப்பணியில் துன்பங்கள் ஏற்படும்போது (சிறைபிடிக்கப்படுதல், ஊனமாக்கப்படுதல் ...) பொறுமையுடன் இருந்து கணவரை மீண்டும் அல்லாஹ்வுடைய பாதையில் சுவர்க்கத்தை வேண்டி தியாகம் செய்ய உற்சாகப்படுத்துங்கள்.
உங்களிடம் உங்கள் கணவர் மோசமாக நடந்து கொண்டால்கூட அவரிடம் நீங்கள் நல்ல முறையாக நடந்து பாடம் புகட்டுங்கள். (இவள் நம்மீது இவ்வளவு அன்பு பொழியும் போது நாம் ஏன் இவளிடம் நல்ல முறையாக நடந்தக் கொள்ளக்கூடாது என்று நினைத்து வருந்தி தன் தவறுகளைத் திருத்திக் கொள்வார்).
இறைவனுக்கு அடிபணிவதிலும், அழைப்புப்பணி, தியாகம் ஆகியவற்றிலும் உதவியாக இருத்தல்
உங்கள் கணவருடன் ஒத்துழையுங்கள். கடமையான மற்றும் உபரியான வணக்கங்களை அவருக்கு நினைவுபடுத்துங்கள்.
இரவு தொழுகை தொழ அவருக்கு ஆர்வமூட்டுங்கள்.
அல்குர்ஆனை கேட்பதிலும் படிப்பதிலும் தனித்தும் கணவருடன் சேர்ந்தும் ஈடுபடுங்கள்.
இஸ்லாமிய பயான் கேஸட்டுகளை தனியாகவும் கணவருடனும் சேர்ந்தும் கேளுங்கள் (இருவரும் புரிந்து கொண்ட முக்கிய கருத்துக்களை ஒருவருக்கொருவர் பரிமாற்றம் செய்து கொள்ளுங்கள்).
சுப்ஹுதொழுகைக்குப் பின்னரும், மஃரிப் தொழுகைக்கு முன்னரும் திக்ருகளில் (இறைநினைவு) ஈடுபடுங்கள்.
பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் செய்யப்படும் அழைப்புப்பணிகளில் உங்களையும் உட்படுத்திக் கொள்ளுங்கள்.
இஸ்லாமிய சட்டங்களையும் பெண்களுக்குரிய நல்ல பண்புகளையும் கற்றுக் கொண்டு செயல்படுத்துங்கள்.
உங்களுடைய அன்புக் கணவருக்கு ஒத்தாசையாக இருந்து அவரை ஊக்கப்படுத்தி, அவருக்குத் தேவையான நல்ல கருத்துகளைச் சொல்லி அவரின் துன்பங்களில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள்.
உங்களுடைய பகுதி நேரத்தை ஒதுக்கி கணவருடன் சேர்ந்து அழைப்பு பணிகளில் ஈடுபடுங்கள்.
அவசியமான நேரத்தில் அனைத்து தியாகங்களையும் செய்ய உங்கள் கணவருக்கு ஆர்வமூட்டி நீங்களும் உங்கள் குழந்தைகளும் அல்லாஹ்வுடைய பாதுகாப்பில் இருப்பதை நினைவுபடுத்துங்கள்.
அழகிய வீட்டு பராமரிப்பு
வீட்டை சுத்தமாகவும், அழகாகவும் நேர்த்தியாகவும் வைத்துக் கொள்ளுங்கள்.
பொழுது போகாத நேரங்களில் வீட்டுப்பொருள்களை சீர்படுத்தி வையுங்கள், உங்கள் கைகளால் தயாரித்த அலங்காரப் பொருள்களைக் கொண்டு வீட்டை அழகுபடுத்துங்கள். (உங்கள் கணவர் மிக சந்தோஷம் அடைவார்).
தேர்ந்தெடுக்கப்பட்ட தரமான உணவுகளையும் புதிய வகையான உணவுகளையும் தயாரித்து உங்கள் கணவருக்கும் குழந்தைகளுக்கும் கொடுங்கள்.
அனைத்து வீட்டு வேலைகளையும் நேர்த்தியாகச் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.
குழந்தைகளை எப்படி இஸ்லாமிய வழியில் வளர்ப்பது, பராமரிப்பது என்பதை கற்றுக்கொண்டு செயல்வடிவத்தில் வெளிப்படுத்துங்கள்.
குடும்பத்தையும் சொத்துக்களையும் பராமரித்தல்
கணவனுடைய பணத்தை அவருடைய அனுமதி இல்லாமல் செலவழிக்காதீர்கள். (அது தர்மமாக இருந்தாலும் சரி. ஆனால், உங்கள் கணவர் இதற்கு உடன்படுவார் என்பது தெரிந்தால் செய்யலாம்)
வீடு, வாகனம் போன்றவற்ளை கணவன் வீட்டில் இல்லாத போது பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
குழந்தைகளை சுத்தப்படுத்தி நல்ல ஆடைகளை அணிவித்து அழகூட்டுங்கள். குழந்தைகளுடைய பாதுகாப்பு மற்றும் கல்வி விஷயங்களில் பேணி நடந்து நல்ல பண்புகள், இஸ்லாமிய அறிவு, நபிமார்களின் சரித்திரங்கள் நபித்தோழர்களின் தியாகங்கள் ஆகியவற்றையும் போதியுங்கள்.
நல்ல மனைவி சுவர்க்கத்தின் துணைவி
நல்ல பெண்களுக்கு முன்மாதிரியாக நபித்தோழியர் கதீஜா, ஆயிஷா, உம்மு ஸலமா, உம்முசுலைம் (ரலி) போன்றவர்களை எடுத்துக்கொள்ளுங்கள்.
கெட்ட பெண்களை அல்லது நடிகைகளைப் பின்பற்றுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
கணவனுக்கு சமயோசித முடிவுகள் தேவையானபோது சொல்லிக் கொடுங்கள். (முதலில் அதற்கான அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்)
கணவனுடைய திருப்தியைப் பெற்ற நிலையில் எப்பொழுதுமே இருக்க முயற்சி செய்யுங்கள்.
ஒரு பெண் தன் கணவனது திருப்தியைப் பெற்ற நிலையில் மரணித்துவிட்டால் அவள் சொர்க்கத்தில் நுழைவாள் என நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள். (திர்மிதி, இப்னுமாஜா)


நன்றி : தமிழ் இஸ்லாம்.காம்  Post     




0 கருத்துகள்

இல்லற பாசமும் நேசமும் பூத்துக் குலுங்க..!




திருமணம் என்பது மனிதர்கள் இழைப்பாற ஒதுங்கும் நந்தவனம் போன்றது, இன்னும் ஒவ்வொரு நாள் பொழுதினில் ஏற்படும் கஷ்டங்களையும், துன்பங்களையும் துடைத்து விடக் கூடிய ஆறுதல் அளிக்கும் தளமுமாகும். இஸ்லாம் இந்தத் திருமணத்தின் மூலமாக மட்டுமே எதிர்எதிர் பாலியல் கொண்டவர்களை இணைக்கின்றது. இஸ்லாம் இந்தத் திருமண பந்தத்தினை மிக அதிகமாகவே வலியுறுத்துவதோடு, அதில் பல அருட்கொடைகளும் உங்களுக்கு இருக்கின்றது என்று அறிவுறுத்துகின்றது.


நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. (30:21)
இஸ்லாம் வலியுறுத்தும் திருமணத்தின் நோக்கம் என்பது பல பயன்பாடுகளை உள்ளடக்கியுள்ளது. அது தனிமனிதர்களை தவறான கெட்ட நடத்தைகளிலிருந்தும், விபச்சாரத்தில் ஈடுபடுவதிலிருந்தும் பாதுகாக்கின்றது. இயற்கையிலேயே மனிதன் ஆசாபாசங்களில் தன்னை இழந்து விடக் கூடியவனாக இருக்கின்றான். இன்னும் ஷைத்தான் அவனது ஆசாபாசங்களைத் தூண்டி விட்டு, மனித இனம் வெட்கித்தலைகுனியக் கூடிய விபச்சாரத்தின் பக்கம் அழைத்துச் சென்று விடக் கூடியவனாகவும் இருக்கின்றான்.

பெண் ஷைத்தானைப் போலவே (மனதை மயக்கும் விதத்தில்) அணுகுகின்றாள், இன்னும் ஷைத்தானால் பீடிக்கப்பட்ட (மனதை மயக்கும் விதத்தில்) நிலையிலேயே வெளியேறுகின்றாள். உங்களில் ஒருவர் மனதை மயக்கும் விதத்தில் ஒரு பெண்ணைப் பார்ப்பீர்கள் என்றால், அவன் அவளது மனைவியிடம் செல்லட்டும், ஏனென்றால், மற்ற பெண்களிடம் உள்ளது போலவே உங்கள் மனைவியிடம் உள்ளது. அவன் தனது இச்சையை ஆகுமான வழியில் தீர்த்து திருப்தி கொள்ளட்டும். (முஸ்லிம்)
இரண்டாவதாக, திருமணத்தின் மூலம் வாரிசுகள் உருவாகி, அதன் மூலம் இஸ்லாமிய சமுதாயம் வளர்வதற்கு வாய்ப்பு ஏற்படுகின்றது. முறையான திருமண உறவு முறையின் மூலம் பெற்றெடுக்கின்ற மழலைச் செல்வங்களின் மூலம், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் விருப்பத்தையும் நாம் நிறைவேற்றியவர்களாகின்றோம். அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், திருமணம் செய்து கொள்ளுங்கள், ஏனென்றால் (மறுமை நாளில்) மற்ற சமுதாயங்களைக் காட்டிலும் என்னுடைய சமுதாயத்தவர்கள் அதிகமாக இருப்பதைக் காண நான் விரும்புகின்றேன். (பைஹகி).
இவை தான் இஸ்லாம் வலியுறுத்தும் திருமணத்தின் நோக்கமெனினும், இன்னும் பல சிறப்பு அம்சங்கள் அதனுள் பொதிந்து கிடக்கின்றன.
அதாவது ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டுவது, ஒருவர் மற்றவர் மீது கருணையோடும், இரக்கத்தோடும் நடந்து கொள்வது, இன்னும் ஒருவர் மற்றவரின் கெடுதல்களிலிருந்து பாதுகாப்புப் பெற்றுக்கொள்வது, அது மட்டுமல்ல இருவரும் இல்லறத்தை நல்லறமாக மாற்றுவதன் மூலம் நன்மையான பல காரியங்களை இணைந்து செய்வதற்கான சூழல் அங்கு நிலவ ஆரம்பிக்கின்றது, இருவருது அன்புப் பிணைப்பின் மூலமாக இஸ்லாமிய சமுதாயம் ஒரு பாதுகாக்கப்பட்ட சமுதாயமாக, பாதுகாப்புணர்வு கொண்ட சமுதாயமாக பரிணமிப்பதோடு, அங்கு பழக்க வழக்கங்களில் நன்னடத்தையும், சமூகம் மற்றும் உடல் ரீதியான ஆரோக்கியத்தையும் பெற்றுக் கொள்கின்றது.
துரதிருஷ்டவசமாக, மற்ற சமுதாயங்களைப் போலவே இன்றைக்கு முஸ்லிம் சமுதாயத்திலும் மணவிலக்குகள் அதிகரித்து வருவது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது.
இன்றைக்கு நீங்கள் வாழக் கூடிய சூழலில் இவ்வாறான மணவிலக்குகள் அதிகமில்லாதிருந்தாலும் கூட, மேலே நாம் சொன்ன திருமணத்தின் காரணமாக விளையக் கூடிய நன்மைகள் தானாக விளைந்து விடுவதில்லை. மாறாக, அன்பு, பண்பாடுகள், பழக்க வழக்கங்கள், முயற்சிகள், இன்னும் ஒருவர் மீது ஒருவர் அக்கறை கொள்ளுதல், இவை அனைத்தையும் விட அற்பணிப்பு மனப்பான்மையுடன் ஒருவர் மற்றவரிடம் நடந்து கொள்ளுதல் போன்றவற்றின் மூலமாகத் தான் அத்தகைய நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியுமே தவிர, தானாக எந்த நன்மையும் விளைந்து விடுவதில்லை. அனைத்திற்கும் நமது முயற்சி இன்றியமையாததொன்றாக இருக்கின்றது.
இறைவன் தன்னுடைய திருமறையிலே கூறுவது போல,
உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்;. (30:21)
கணவன் மனைவிக்கிடையே காதலும், கனிந்துருகச் செய்யும் விளையாட்டும் விடைபெற்று விடுமென்று சொன்னால், அதனை மீட்டிக் கொண்டு வருவதற்கு அங்கு கருணையும், சகிப்புத் தன்மையும், ஒருவர் மற்றவருக்கிடையே தொடர்புகள் நீடித்திருக்கச் செய்வதும் அவசியமானதாகும், இவை மூலம் விடைபெற்றுச் சென்ற காதலும், கனிந்துருகச் செய்யும் விளையாட்டுக்களும் அங்கு தலைத்தோங்க ஏதுவாகும். ஊடலுக்குப் பின் கூடல் என்பது தான் உறவை இருகச் செய்யும் சாதனமாகும்.
தம்பதிகள் இருவரும் சந்தோஷமாக வாழ்வது என்பது அவர்களுக்கு மட்டும் நன்மை பயப்பதல்ல, மாறாக, அது உங்களது குழந்தைக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கும் அம்சமாக இருக்கின்றது. நீங்கள் உங்களுக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, அன்பு பாராட்டி, சகிப்புத் தன்மையுடன் நடந்து கொள்ளும் பொழுது, அந்தச் சூழலில் வாழக் கூடிய உங்களது குழந்தைகளும் இத்தகைய நற்பழக்கங்களைக் கற்றுக் கொண்டு, தங்களது வாலிப நாட்களில் அதனைக் கடைபிடிப்பதற்கான முன்மாதிரிகளைப் பெற்றுக் கொள்வார்கள் என்பது ஆய்வுகள் கூறும் முடிவுகளாகும். இன்னும் அமைதியான சூழ்நிலைகள் நிலவக் கூடிய இல்லறத்தில், வாழ்வின் வசந்தங்கள் என்றென்றும் பூத்துக் குலுங்கிக் கொண்டே இருக்கும். இது ஒன்றும் கடிமான விஷமுமல்ல, இதற்கென நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டிய அவசியமுமில்லை, உங்களது பழக்கவழக்கங்களில் சற்று மாறுதல்களைக் காண்பித்தாலே போதும், இல்லறத்தில் நல்லறங்கள் பூக்க ஆரம்பித்து விடும். அவற்றில் சிலவற்றை இங்கு நாம் காண்போம் :
ஒருவர் மற்றவர் உரிமைகளை மதித்து நடப்பது
உங்களது திருமணம் வெற்றிகரமான திருமணமாக பரிணமிக்க வேண்டுமென்றால், திருமணமான ஆண்-பெண் இருவரும், ஒருவர் மற்றவர் மீது என்னனென்ன உரிமைகள் இருக்கின்றன என்பதைப் பற்றித் தெளிவாக அறிந்து கொள்வதுடன், அவற்றை மதித்து நிறைவேற்ற கூடுதல் முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு கணவனின் மீது உள்ள உரிமைகள் என்னவென்றால், தன்னை நம்பி உள்ள குடும்பத்தினருக்கு தாய், தந்தை, மனைவி, பிள்ளைகள் போன்றவர்களுக்கான வாழ்வியல் தேவைகளை அதாவது, உடை, உணவு, உறையுள், கல்வி இன்னும் பல அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பது, அதற்கான பொருளாதாரத்தைத் திரட்டிக் கொடுப்பது.
இன்னும் குடும்பத் தலைவன் என்ற முறையில் குடும்பப் பராமரிப்பு அத்துடன் மார்க்க வழிகாட்டுதல்கள் மற்றும் குடும்பத்தினரிடையே ஒழுக்க மாண்புகளில் கவனம் செலுத்துதல் ஆகியவை கணவன் மீதுள்ள இன்றியமையாத கடமைகளாகும். இவை யாவும் அவன் மீதுள்ள தவிர்க்க முடியாத கடமைகளாகும்.
மனைவியைப் பொறுத்தவரையில், இறைவன் அனுமதித்துள்ள வரம்புகளைப் பேணுவதும், அதற்காக கணவனுக்குக் கட்டுப்பட்டு நடப்பதும், குடும்பப் பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு போன்றவற்றில் தனிக் கவனம் செலுத்துவதும் அவளது இன்றியமையாத கடமைகளில் ஒன்றாக இருக்கின்றது. இன்னும் பல பொறுப்புக்களை நிறைவேற்றக் கூடியவளாக அவள் இருந்தாலும், மேலே சொன்னவைகள் தான் அவளுக்குரிய அடிப்படைக் கடமைகள் என்பதை அவள் மறந்து விடக் கூடாது. இவற்றை அவள் நிறைவேற்றத் தவறுவாளாகில், அந்தக் கணத்திலிருந்து குடும்பத்தில் குழப்பங்கள் தலைதூக்க ஆரம்பித்து விடும், குடும்பச் சூழ்நிலை பாழ்பட ஆரம்பித்து விடும். குடும்பத்தில் அமைதி நீங்கி, புயல் வீச ஆரம்பித்து விடும். இத்தகைய சூழ்நிலைகளினால் அங்கு அன்பு அழிந்து, கருணையை இழந்து, ஒருவர் மற்றவரைப் பிணைக்கக் கூடிய நற்பண்புகளையும் இல்லாமலாக்கி விடும்.
எனவே தான், கணவன் மனைவி இருவரும் தங்களுக்குரிய கடமைகள் என்னவென்பதை ஆராய்ந்து, அதனை நிறைவேற்றுவதில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். ஒருவர் மற்றவர் மீது காட்டக் கூடிய அலாதியான அந்த அன்பு, அவர்களது இதயத்தைப் பிணைப்பதோடு, இறைவன் நாடினால் மேலும் மேலும் வசந்தம் வீசக் கூடிய தளமாக இல்லறம் மாறவும் வாய்ப்பு ஏற்படும்.
தனிமைச் சந்திப்புக்கு நேரம் ஒதுக்குதல்
இன்றைய உலகம் என்பது அவசர உலகம். அதனால் வாழ்க்கையை வாழ்வதற்குக் கூட நேரமில்லாமல் வாழக் கூடிய நிலைமையில் தான் இன்று நாம் இருந்து கொண்டிருக்கின்றோம். வாழ்வியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவே இருக்கின்ற 24 மணி நேரம் போதவில்லை என்று அங்கலாய்ப்பவர்களைத் தான் நாம் பார்த்திருக்கின்றோம். ஆனால் அந்த 24 மணி அலுவல்களுக்கிடையிலும் உங்கள் மனைவிக்காகவும் சில மணித்துளிகளை ஒதுக்குங்கள். அதில் அவளுடன் தனிமையைப் பகிர்ந்து கொள்ளுங்கள். மிகவும் அவசியமில்லாத முக்கியத்துவமில்லாத எத்தனையோ விஷயங்களுக்காக நாம் நம் நேரத்தையும், பணத்தையும் செலவழிக்கத் தயாராக இருக்கின்றோம். ஆனால் திருமணம் எனும் பந்தத்தில் நம்முடன் இணைந்த அவளுடன், வாழ்நாள் முழுவதும் நம்மையே நம்பி வாழ்ந்து வரக் கூடிய அவளுக்கென சில மணித்துளிகளை செவழிப்பதற்குத் தயங்குகின்றோம்.
சில குடும்பங்களில் கணவனும் மனைவியும் தனிமையில் சந்திப்பதே ஒரு சில நிமிடத்துளிகள் தான். எனக்கு நேரமில்லை, நேரமில்லை, காலையில் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவது, அடுத்து வேலைக்குச் செல்வது, மாலையில் வீட்டுக்கு வருவது, உடன் அடுத்தடுத்த பணிகளுக்கு நேரத்தை ஒதுக்குவது இப்படியாக காலத்தை நகர்த்தக் கூடிய நாம், மனைவிகளுக்காகவும், பிள்ளைகளுக்காகவும் எந்தளவு நேரத்தை ஒதுக்கினோம் என்பதைப் பற்றிச் சிந்திப்பது நல்லது.
இன்றைக்கு பணம் வாழ்க்கையின் அடிப்படைத் தேவையாக மாறி விட்டது. பணம் தான் எல்லாம் என்ற மனநிலை மக்கள் மனதில் நோயாக மாறிக் கொண்டிருக்கின்றது. மனிதர்களது உணர்வுகளை பணத்தைக் கொண்டு திருப்திபடுத்தி விட முடியாது என்பதைப் புரியாதவர்களாக மனிதர்கள் மாறி விட்டிருக்கின்றார்கள். இதிலிருந்து தவிர்ந்து வாழ்வதற்கு உங்களது நேரங்களைத் திட்டமிட்ட அமைத்துக் கொள்ளுங்கள். நேர முகாமைத்துவம் ஒவ்வொரு மனிதர்களுக்கும் அவசியம். அவசர கால ஓட்டத்தில் உங்கள் மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் சில நேரத்துளிகளை ஒதுக்கித் தரும் பொழுது, பணம் தராத சுகத்தை உங்களது அருகாமை அவர்களுக்கு வழங்கும்.
அதிகாலை பஜ்ர் தொழுகைக்குப் பின் குடும்பத்தினர் அனைவருடனும் சிறிது நேரம் உட்கார்ந்திருப்பது, அல்லது இரவு சாப்பாட்டிற்குப் பின் சிறிது நேரம் குடும்பத்தினருடன் உட்கார்ந்திருப்பது ஆகியவற்றை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
நீங்கள் எந்தளவு பரபரப்பானவராக இருந்தாலும் சரி, குடும்பத்தினருக்காகவென ஒரு நேரத்தை ஒதுக்கி வைத்துக் கொள்வதன் மூலம் அவர்களது உணர்வுகளை நீங்கள் புரிந்து கொள்ள முடியும். அதன் மூலம் உங்களைப் பற்றி அவர்களும், அவர்களைப் பற்றி நீங்களும் அக்கறை கொண்டவர்களாக இருக்கின்றீர்கள் என்பதையும் உணர்த்த முடியும். உணர்வுகள் தான் மனிதனை உச்சத்திற்கும் கொண்டு செல்லும், அதே உணர்வுகள் தான் மனிதனை தாழ்நிலைக்கும் கொண்டு செல்லும்.
கவனிப்பு அல்லது அக்கறை
உங்களது திருமண பந்தம் நிலைத்திருக்க வேண்டுமா?! அப்படியானால், ஒருவர் மற்றவர் மீது அக்கறை கொண்டவர் என்பதை, ஒருவர் மற்றவருக்கு உணர்த்தத் தவறக் கூடாது.
உங்களது மனைவி சற்று தாகமெடுக்கின்றது என்று சொன்னால், உடனே சென்று ஒரு குவளைத் தண்ணீரைக் கொண்டு வந்து அவளுக்கு வழங்குங்கள். இல்;லை, உங்களது கணவன் களைப்பாக இருக்கின்றது என்று சொன்னால், அவனது களைப்பு எதனால் ஏற்பட்டது என்று அறிந்து கொண்டு அதற்கான ஆறுதலைக் கூறுங்கள். எனவே, ஒருவர் மற்றவருக்கு இளைப்பாறும் தளமாக மாறிக் கொள்ளலாம். இன்னும் ஒருவர் மற்றவரது சுமைகளைத் தாங்கிக் கொள்ள முன்வர வேண்டும். குடும்ப அலுவல்களில் மனைவிக்கு உதவுவது கணவனின் உதவி என்றால், கணவனின் அலுவல்களுக்கு இடையூறாக இல்லாமல், அவனது சிரமங்களைப் புரிந்து கொண்டு, அந்த சிரமங்களைச் சமாளிப்பதற்குண்டான ஊக்கத்தை வழங்குவது மனைவி புரியக் கூடிய உதவியாக இருக்கும்.
ஒருவர் மற்றவரது அலுவல்களின் சுமைகளை இறக்கி வைப்பதன் மூலம், வேலைப் பளு குறைவதோடு, இணக்கமான சூழ்நிலையும் நிலவ ஆரம்பித்து விடும். இதுவே உங்களது பிணைப்பை உறவை வலுப்படுத்தும்.
அமைதியாகப் பேசுவது, கவனமாகச் செவிமடுப்பது
தம்பதிகளுக்கிடையே பிரச்னை உருவாகுவது என்பது இருவருக்குமிடையே புரிந்துணர்வு இல்லாததே காரணமாகும். அதாவது உங்கள் இருவருக்கிடையே பேச்சுவார்த்தையே கிடையாது என்பதல்ல, மாறாக, அர்த்தமுள்ள பேச்சுக்கள் குறைவாக இருப்பது தான் பிரச்னைக்கே காரணமாகும்.
நீங்கள் உங்களுக்கிடையே உரையாடும் பொழுது, நீங்கள் இருவரும் தம்பதிகளாக இருக்கின்றீர்கள், அவள் மனைவி, இவன் கணவன் என்ற உணர்வு மேலோங்க வேண்டும். நீங்கள் ஒருவர் மற்றவரிடம் பேசும் பொழுது சப்தமிட்டு, உரத்த குரலில் பேசுகின்றீர்களா? அல்லது மிக மெதுவாகப் பேசுகின்றீர்களா? ஒருவர் பேசும் பொழுது மற்றவர், அவர் என்ன சொல்ல வருகின்றார் என்பதை நிதானித்து கவனிக்கின்றீர்களா? அல்லது அவர் என்ன சொல்வது நான் என்ன கேட்பது? என்ற அலட்சியப் போக்கில் இருக்கின்றீர்களா?
ஒருவர் மற்றவரிடம் பேச்சுக் கொடுக்க வரும் பொழுது, அவள் என் மனைவி, இவன் எனது கணவன், அவன் அல்லது அவள் என்னிடம் அர்த்தமுள்ள பேச்சைத் தான் பேச வருகின்றான் அல்லது வருகின்றாள் என்ற உணர்வுடன், ஒருவர் மற்றவரது பேச்சை அக்கறையுடன் செவிமடுக்க வேண்டும்.
அவள் அல்லது அவன் என்ன சொல்ல வருகின்றார் என்பதை நிதானத்துடன் கவனித்து, அதனை முழுவதுமாக கிரகித்து, அதற்கான பதிலை அல்லது ஆலோசனைகளை வழங்க வேண்டும். அந்த ஆலோசனைகள் கூட அறிவுறுத்தலாக இருக்க வேண்டுமே ஒழிய, கட்டளைத் தொணியில் இருக்கக் கூடாது. இதன் மூலம் வற்புறுத்தல் இல்லாத நிலை உருவாகுவதோடு, இருவருக்குமிடையே நல்லதொரு புரிந்துணர்வு ஏற்படும். புரிந்துணர்வே பல பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடும்.
இறைவனிடம் உதவி கேளுங்கள்
திருமணத்தின் மூலம் உங்கள் இருவரையும் கணவன் மனைவி என்ற அந்தஸ்திற்கு உயர்த்தியன், அல்லாஹ் தான், அவனே உங்கள் இருவருக்குமிடையே அன்பையும், பாசப் பிணைப்பையும் உருவாக்கி வைத்தான்.
இப்னு மஸ்ஊது (ரலி) அவர்கள் கூறினார்கள் :
நிச்சயமாக அன்பு என்பது இறைவன் புறத்திலிருந்து உருவானது, வெறுப்பு என்பது ஷைத்தானிடமிருந்து வந்தது, அவன் தான் உங்களுக்கு அல்லாஹ் எதனை ஆகுமாக்கி வைத்திருக்கின்றானோ அதன் மீது வெறுப்பைத் திணிக்கின்றான்...
எனவே, உங்கள் மனைவி மீதுள்ள அன்பு குறைகின்றதென்றால், நீங்கள் அல்லாஹ்வின் புறம் திரும்புங்கள், அவனே அனைத்து நல்லறங்களையும் வழங்கக் கூடியவன், அவனிடமே உதவி கேளுங்கள், உங்கள் மனைவி மீது அன்பாக இருப்பதற்காகவும்..! இன்னும் அவளிடம் காணக் கூடிய கெட்ட நடத்தைகளின் பொழுது பாராமுகமாக இருப்பதற்காகவும்..! உங்கள் இதயங்களை இணைப்பதற்காகவும், இன்னும் நீங்கள் எதனை விரும்புகின்றீர்களோ அத்தனையையும் கேளுங்கள், அவனே உங்களது தேவைகளை நிறைவேற்றக் கூடியவனாகவும், உங்களது கோரிக்கைகளுக்கு செவிமடுக்கக் கூடியவனாகவும் இருக்கின்றான், அவற்றுக்குப் பதிலளிக்கக் கூடியவனாகவும் இருக்கின்றான்.
திருமணம் என்பது இஸ்லாமிய சமுதாய வாழ்வில் தவிர்க்க முடியாத, இன்றியமையாத சாதனமாகும். ஒவ்வொரு நாள் சுமையிலிருந்தும், கஷ்டங்களிலிருந்தும் நீங்கள் ஓய்வெடுக்கக் கூடிய தளமாக திருமணம் எனும் பந்தம் இருக்க வேண்டும். அது குளிருக்குக் கதகதப்பானதாகவும், வெயிலுக்கு இதமான குளிர்ந்த தென்றலாகவும் திகழ வேண்டும். அதன் மூலம் அன்பும், பாசமும் தளைத்தோங்க வேண்டும். ஒருவரை ஒருவர் சரியான அளவில் புரிந்துணர்வு கொண்டு செயல்பட வேண்டும். அதன் மூலம் பாசப்பிணைப்பில் மேலும் இறுக்கம் ஏற்பட வேண்டும்.
உங்கள் குடும்பங்கள் புயல் வீசுகின்ற தளமாக இருக்குமென்றால், மேலே சொன்ன அறிவுரைகளைச் செயல்படுத்திப் பாருங்கள், உங்களுக்கிடையில் இருக்கின்ற தவறுகளைக் களைந்து, கருணை எனும் இறக்கையைத் தாழ்த்திப் பாருங்கள். வசந்தம் எனும் வானம்பாடி பாடித்திரியும் நந்தவனமாக, பாச மலர்க் கூட்டமாக உங்கள் இல்லம் திகழக் கூடும். இறைவன் நாடினால்..!
எல்லாவற்றுக்கும் மேலாக அவனிடமே கையேந்துங்கள். அவனே, இதயங்களைப் புரட்டக் கூடியவனாக இருக்கின்றான்.


நன்றி : தமிழ் இஸ்லாம்.காம்  Post    


0 கருத்துகள்

சுல்தான் ஸலாஹுத்தீன் அல் அய்யூபி




இன்னும் தீமைக்கும் கூலி அதைப் போன்ற தீமையேயாகும். ஆனால், எவர் (அதனை) மன்னித்துச் சமாதானம் செய்கிறாரோ அவருக்குரிய நற்கூலி அல்லாஹ்விடம் இருக்கிறது - நிச்சயமாக அவன் அநியாயம் செய்பவர்களை நேசிக்க மாட்டான். (திருமறைக் குர்ஆன் அத்தியாயம் 42 : வசன எண் : 40)
சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி என்ற பெயர் இஸ்லாமிய வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட பெயராகும். ஆம்! புனித ஜெருஸலம் நகர் கிறிஸ்தவர்களின் பிடியில் 90 ஆண்டு காலம் சிக்கிச் சீரழிந்து கொண்டிருந்த பொழுது, முஸ்லிம்கள் மட்டுமல்ல யூதர்களும் கூட அங்கு தினமும் சித்திரவதைகளை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். சிலுவை யுத்தம் நடந்த காலங்களில் ஜெருஸல நகரத் தெருக்களில் கரண்டைக் கால் அளவுக்கு மனித இரத்தம் ஓடியதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. அத்தகையதொரு கொடுமையிலிருந்து அந்தப் புனிதப் பூமியை மீட்டதோடல்லாமல், தனது மனித நேயத்தால் அனைத்துத் தரப்பு மக்களையும் கவர்ந்த பண்பாளராகவும் சுல்தான் ஸலாஹுத்தீன் அல் அய்யூபி அவர்கள் திகழ்ந்தார்கள்.




இரண்டாம் உமர் என்று போற்றப்படக் கூடிய உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்களுக்குப் பிறகு, இஸ்லாமிய நெறிமுறைப்படி ஆட்சி செய்த பண்பாளர் என்ற நற்பெயரை இவர் பெற்றிருக்கின்றார் என்பதிலிருந்து இவரது ஆட்சி முறை எப்படி இருந்திருக்கும் என்பது தெளிவாகும்.
சிலுவை யுத்தம் நடந்து முடிந்த பின், சுல்தான் ஸலாஹுத்தீன் (ரஹ்) ஜெருஸலம் நகரில் நின்று கொண்டிருக்கின்றார். அப்பொழுது ஒரு பெண்களின் குழுவொன்று அவரைக் கடந்து செல்கின்றது. அப்பெண்களின் குழுவில் இருந்த சிறுமி ஒருத்தி சுல்தானைப் பார்த்து,
ஓ சுல்தான் !! நாங்கள் இந்த நகரை விட்டுக் கிளம்புவது உங்களது கண்களுக்குத் தெரியவில்லையா?! நீங்கள் பிடித்து வைத்திருக்கக் கூடிய போர்க்கைதிகளின் தாயார்களும், மனைவிமார்களும், தங்கைகளும், இன்னும் பெற்றெடுத்த மகள்களுமாக, ஆண் துணைகளின்றி நாங்கள் இந்த நகரை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றோம். உங்களிடம் இருக்கக் கூடிய எங்களுடைய ஆண்களை விட்டால், எங்களுக்கு வேறு ஆதரவு கிடையாது, அவர்களை நாங்கள் இழந்து விட்டோமென்றால் எங்கள் வாழ்க்கையின் அனைத்து சுகங்களையும் நாங்கள் இழந்தவர்கள் போலாவோம். எங்கள் மீது இரக்கப்பட்டு, அவர்களை நீங்கள் விடுவித்தீர்கள் என்று சொன்னால் எங்களது வாழ்க்கையையே மீட்டித் தந்த நன்மைக்குரியவராவீர்கள்! என்று அந்தப் பெண்கள் முறையிட்டு நின்றார்கள்.

அந்தப் பெண்களைப் பார்த்து புன்முறுவல் செய்து விட்டு, தனது தோழர்களை நோக்கி, இவர்களது ஆண்களை விடுதலை செய்து இவர்களுடன் அனுப்பி வையுங்கள். இன்னும் இங்கு இருக்கும் பெண்களின் துணைக்கிருந்த ஆண்களில் எவரும் போரில் கொல்லப்பட்டிருந்தால், அதற்குப் பிரதியீடாக அவர்களுக்கு பண உதவி செய்து அனுப்பி வைக்கும்படியும் ஸலாஹுத்தீன் உத்தரவிட்டார்.

அப்பொழுது, ஒரு பிரஞ்சுச் சிறுமி சுல்தான் அருகில் வந்து, கொலைகாரர்களே! நீங்கள் என்னுடைய தந்தையைக் கொன்று விட்டு, என்னுடைய சகோதரர்கள் இருவரையும் சிறை பிடித்து விட்டீர்களே! பாவிகளா? என்றாள். அவளது சினத்தைக் கண்டு கொள்ளாத ஸலாஹுத்தீன் இவளது சகோதரர்களையும் விடுதலை செய்யுங்கள் என்று தனது தோழர்களுக்கு உத்தரவிட்டு அந்தச் சிறுமியைப் பார்த்து, சிறுமியே! உன்னுடைய தந்தை எதனால் கொல்லப்பட்டார் என்று தெரியுமா? உன்னுடைய தந்தையால் ஆரம்பித்து வைக்கப்பட்ட போரால் தான் அவர் தன்னுடைய மரணத்தைத் தழுவினார் என்பது மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான அப்பாவிகளின் உயிரையும் அவரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட போர் காவு கொண்டு விட்டது என்று பதிலளித்தவுடன், குற்ற உணர்வின் மேலீட்டால் அந்தச் சிறுமி தன்னுடைய தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு, என்னுடைய இந்த அறியாமைக்கு நான் வருந்துகின்றேன், உங்களிடம் மன்னிப்புக் கோருகின்றேன் என்று கூறியதோடு, இவ்வளவு பண்பாடுள்ள உங்களிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டதற்கு வருந்துகின்றேன் என்று கூறி, சுல்தான் ஸலாஹுத்தீனிடம் மன்னிப்புக் கோரினாள்.
நான் சந்தித்த இந்தக் கொடூரமான சூழ்நிலைத் தாக்கத்தின் காரணமாக உங்களிடம் நான் வரம்பு மீறி நடந்து கொண்டதற்கு என்னை மன்னியுங்கள், இன்னும் உங்களைப் பற்றியும், முஸ்லிம்களைப் பற்றியும் எங்களது ஆட்சியாளர்கள் ஏற்படுத்தி வைத்திருந்த வெறுப்புணர்வின் காரணமாகவே நான் அவ்வாறு நடந்து கொண்டேன். ஆனால் இப்பொழுது நான் உண்மையைக் கண்டு கொண்டேன் என்பது மட்டுமல்ல, இதுவரை நாங்கள் அறியாமையில் இருந்திருக்கின்றோம் என்பதையும் உணர்ந்து கொண்டு விட்டேன், இப்பொழுது உங்கள் முன் நான் நிற்பது, உங்களது மன்னிப்பை வேண்டித் தான் என்று கூறி முடித்தாள்.

எங்களை வழி கெடுத்த அந்தப் பாவிகள் மீது சாபம் இறங்கட்டும், அவர்கள் எங்களை வழி கெடுத்து விட்டது மட்டுமின்றி, எங்களது புனித பூமியில் இரத்தம் சிந்தவுடம் வைத்து விட்டார்கள். எங்கள் உற்றார் உறவினர்களிடமிருந்து எங்களைப் பிரித்தும் விட்டார்கள். எங்களது உணர்வுகளை அவர்கள் பயன்படுத்திக் கொண்டு, அவர்களது நலன்களை அடைந்து கொண்டார்கள்.

இப்பொழுது நாங்கள் உண்மையை நேரடியாக உணர்ந்து கொண்டு விட்டோம், அவர்கள் சொன்னவற்றில் எதுவும் உண்மை இல்லை என்பதையும் கண்டு கொண்டோம் என்றும் அவள் கூறினாள்.
சுல்தான் ஸலாஹுத்தீன் அல் அய்யூபி (ரஹ்)அவர்களது வரலாற்றை ஆய்வு செய்பவர்களுக்கு, அவரைப் பற்றி அறிந்து கொள்ளவும், இன்னும் உண்மையான இஸ்லாமிய போதனைகளைப் பின்பற்றி வாழும் முஸ்லிம்களையும், அவர்களது கொள்கைகளையும் அறிந்து கொள்ள இதனை விடச் சிறந்த அறிமுகம் தேவை இல்லை.
அடக்குமுறையை அதைப் போன்றதொரு வலிமை கொண்டு தடுக்கப்பட வேண்டும்

இறைவன் வகுத்திருக்கும் தண்டனைகளுக்குரிய வரம்புகளை மீறாது பேண வேண்டும்
வலிமையற்றோரையும், போரில் தோற்கடிக்கப்பட்டோரையும் பழிக்குப் பழி வாங்காமல், அவர்களை மன்னித்து, நீதமுடன் நல்ல முறையில் நடத்த வேண்டும்,
இந்த மூன்று அடிப்படைகளின் கீழ் நின்று ஆட்சி செய்தவர் தான் சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி (ரஹ்) அவர்கள். இன்னும் தவறிழைப்பவர்களுக்குத் தண்டனை வழங்குவதை விட, அவர்களது குற்றங்களை உணரச் செய்து மன்னித்து விடுவதே மேலானது என்ற கொள்கையைக் கொண்டவராகத் திகழ்ந்தார். இது மட்டுமல்ல இன்னும் இரக்கம், அன்பு, வீரம், கொடைத்தன்மை, பொறுமை ஆகிய நற்குணங்களுக்கு இலக்கணமாகவும் திகழ்ந்தார்.
இத்தகைய நற்குணங்களின் மூலமாகத் தான் பிரபல சிலுவை யுத்தங்களில் மிகப் பெரிய படைகளை எதிர்த்து, அவரால் வெற்றி பெற முடிந்தது.
பல போர்களில் வெற்றி பெற்று அதனால் கிடைக்கப் பெற்ற செல்வங்கள் இருந்தும், அவற்றில் இருந்து எதனையும் தனக்காக ஒதுக்கிக் கொள்ளாத பண்பாளராகத் திகழ்ந்தார். ஒருமுறை ஒரு தோழர் இவ்வாறு கேட்டார் :
உங்களுக்குக் கிடைத்த இந்த செல்வத்தை ஏழைகளுக்கும், ஆசிரியர்களுக்கும் இன்னும் போர்களுக்குமே செலவழித்துக் கொண்டிருக்கின்றீர்களே? உங்களுக்கென எதனையும் சேமித்து வைக்கக் கூடாதா? என்று கேட்டார்.
ஒரு மனிதனின் பலம் எங்கிருக்கின்றதென்றால் அவன் அவனைப் படைத்தவனிடம் கேட்கும் பிரார்த்தனையின் பலனில் தான் இருக்கின்றது, ஏழை அடியானுடைய பிரார்த்தனையை இறைவன் வீணடித்து விடாமல், கண்டிப்பாக அங்கீகரித்து விடுவதால், அவன் முன்னிலையில் நான் ஏழை அடியானாக நிற்கவே ஆசைப்படுகின்றேன், என்று தனது தோழருக்குப் பதிலிறுத்தார்.

இஸ்லாம் வரையறுத்திருக்கும் வரையறைகளைப் பேணுவதிலும், தொழுகை போன்ற வணக்க வழிபாடுகளில், மேலதிகமான வணக்க வழிபாடுகளில் அதிகமாக ஈடுபடக் கூடியவராகவும், இன்னும் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் வழிமுறைகளை மிகவும் பேணுதலுடன் கடைபிடிக்கக் கூடியவராகவும் சுல்தான் ஸலாஹுத்தீன் (ரஹ்) அவர்கள் திகழ்ந்தார்கள். இரவு நேர தஹஜ்ஜத் தொழுகைகளை தினமும் நிறைவேற்றக் கூடியவராகவும் இருந்தார்.
புகழ்மிக்க மன்னராக இருந்த போதிலும், அவர் இறந்த பொழுது ஒரு தினாரும், 47 திர்ஹம்களைத் தவிர வேறு எந்தச் சொத்தையும் அவர் தனது சொத்தாக விட்டு வைத்திருந்திக்கவில்லை. இன்றைய ஆட்சியாளர்களைப் போல அரண்மணை போன்ற பங்களாக்களையோ, தோட்டங்களையோ, ஆடம்பரமான எந்தப் பொருளையும் அவர் தன்னுடைய வாரிசுகளுக்கு விட்டு விட்டுச் செல்லவில்லை. அவர் வைத்திருந்த அந்தப் பணம், அவரது அடக்கச் செலவுகளுக்குக் கூட போததாகவே இருந்தது. இருப்பினும் அவர் சாதாரண ஆட்சியாளராக அவர் மரணிக்கவில்லை, இன்றிருக்கும் சிரியா விலிருந்து லிபியா வரை இன்னும் பாலஸ்தீனம், எகிப்து அடங்கலாக உள்ள பிரதேசத்தின் தனிப்பெரும் ஆட்சியாளராக இருக்கும் நிலையில் தான் அவர் மரணமடைந்தார்.

அவர் வாழ்ந்த சம காலத்தில் மன்னர்கள் படாடோப மிக்க வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த பொழுது, தனக்காக எதனையும் சேமித்து வைக்காது, இஸ்லாமியக் கொள்கை வழியின் பால் தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டதால் தான், இறைவன் அவருக்கு அவ்வளவு பெரிய வெற்றியை வழங்கினான். இன்னும் மாற்று மதத்தவர்களும் கூட போற்றும் உயர்ந்த மனிதராக வாழ்ந்து காட்டினார். அதன் மூலம் அவர் இஸ்லாமியக் கொள்கைகளைப் பூரணமாகப் பின்பற்றி வாழ்ந்த காரணத்தால், தான் வாழ்ந்த சம கால மக்களுக்கொரு உதாரண மனிதராகவும் திகழ்ந்திருக்கின்றார்.
ஒருமுறை அவர் ஒரு மனிதரால் பாதிக்கப்பட்டிருந்த போதும், ஆட்சியாளர் என்ற நிலையில் இல்லாது நீதி கேட்டு நீதிபதியிடம் சென்று முறையிட்டார். இவரது பொருளைக் கவர்ந்து சென்ற மனிதருக்கு எதிரான வழக்கில், பொருள் இவருடையது தான் என நிரூபிக்கப்பட்ட பின்னர், அந்தப் பொருளுக்குச் சொந்தம் கொண்டாடிய அந்த மனிதரிடமே அந்தப்பொருளை ஒப்படைத்து, அந்த மனிதரையும் மன்னித்து விட்டார்.

இது தான் இன்றைய முஸ்லிம் சமுதாயத்தின் தேவையுமாக இருக்கின்றது. இஸ்லாத்தின்படி வாழ்ந்து காட்டுங்கள். வெற்றிப்படிகள் உங்கள் காலுக்கடியில். வாருங்கள் இஸ்லாத்தினை வாழ்ந்து காட்டுவோம்!!
இறைமறை சுட்டிக் காட்டும் உதாரணமிக்க, படைக்கப்பட்ட சமுதாயங்களிலேயே உன்னதமான சமுதாயம் என்று உலகுக்கு அறிவித்துக் காட்டுவோம்.

முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்; இதுவே (இறையச்சத்திற்க்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்;. அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான். (திருமறைக் குர்ஆன் அத்தியாயம் 5 : வசன எண் :08)

நன்றி : தமிழ் இஸ்லாம்.காம்  Post   

0 கருத்துகள்

விருந்தோம்பலின் பயனையும் பண்பினையும் அறிவோம்!


இஸ்லாம் விருந்தோம்பலை சிறந்த தொரு அமலாகக் கருதுகிறது. இஸ்லாமிய சகோதரத்துவம் மென்மேலும் வளர்ச்சிகாண விருந்தோம் பலும் ஒரு காரணமாக அமைகிறது.



இன்று முஸ்லிம்களின் பெருந் தொகை யானோர் விருந்தோம்பலில் அடங்கியுள்ள தத்துவங்களைப் பற்றியோ; அதன் விழு மியங்களைப் பற்றியோ சிந்திப்பதில்லை; தெரிந்தவர்கள்; தெரிந்தும் தெரியாதவர் போல வாழ்கிறார்கள்; அறியாதோர் அறியாமலேயிருக்கின்றனர்.

ஒரு சமயம் நபி (ஸல்) அவர்களிடம் ஒரு ஏழை மனிதன் தனது வறுமை நிலைமையைக் கூறி உணவு தரும்படி வேண்டி நிகின்றார். உடனே நபி (ஸல்) அவர்கள் தம் மனைவிமாரிடம் ஆளனு ப்பி உணவு உள்ளதா என விசாரிக்க, அன்று நீராகாரத்தை தவிர வேறு ஒன்று மில்லை எனப் பதில் கிடைத்தது.
அந் நேரம் ஒரு நபித் தோழர் நபி பெருமா னாரின் அனுமதியுடன் அந்த ஏழையை அழைத்துச் சென்றார். அன்று அத்தோழர் வீட்டில் அவர் குழந்தைகளுக்கு மட்டும் உணவிருந்து. அவர் மனைவியுடன் கதைத்து குழைந்தைகளை உறங்க வைத் துவிட்டு அந்த உணவை விருந்தாளிக்கு கொடுத்து உபசரித்தனர். அதன் பின் அத்தம்பதியினர் பசியோடு உறங்கினர். இச்சம்பவத்தை அல்லாஹ் சிலாகித்து குர்ஆனில் குறிப்பிட்டுள்ளான்.


அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டவராக யாராவது இருந்தால் அவர் தம் விருந்தாளிகளை சங்கை செய்யவும் என எம் பெருமானார் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (புகாரி, முஸ்லிம்)
இப்படியாக பல சம்பவங்களும், பல ஹதீஸ்களும் விருந்தோம்பலைப் பற்றி சிறப்பித்து குறிப்பிட்டுள்ளதை இஸ்லாமிய வரலாறுகளில் காணலாம். அத்துடன் நபி (ஸல்) அவர்கள் உட்பட விருந்தோம்பல் ஏனைய நபிமார்களினதும் சுன்னத்தான வழிமுறையாகும்.
இப்படியான விருந் தோம்பலுக்கு பல ஒழுங்கு முறைகள் இருக்கின்றன. இந்த ஒழுங்கு முறைப்படி விருந்துக்கு அழைப்பவரும், அழைப்பை ஏற்றுக் கொள்பவர்களும் அறிந்திருக்க வேண்டிய பல வழிமுறைகள் இருக்கின்றன. இவைகள் அறிந்து செயல்பட்டால் அல்லாவின் அருள் கிடைக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமுமில்லை.

விருந்துக்கு அறிவிப்பவர்கள் அறிய வேண்டியது.
1. பயபக்தி உள்ளவர்களையும், ஒழுக்கமானவர்களையும் விருந்துக்கு அழைக்க வேண்டும். ‘மூமின்களுடன் மாத்திரம் உறவு வையுங்கள்; உமது உணவை ஒழுக்க சீலர் அல்லாதார் உண்ணாமல் இருக்கட்டும் என்பது நபி மொழி… எனவே துன்மார்க்கர்களையும், பெரும் பாவிகளையும் அழைக்கக் கூடாது.
2. பேரையும், புகழையும் விரும்பி விருந்து வைக்கக் கூடாது.
3. செல்வந்தர்களை மாத்திரம் அழைக்கக் கூடாது.
‘விருந்துகளில் மிகத் தீயது ஏழைகளை அழையாமல் செல்வம் படைத்வர்களை மாத்திரம் அழைப்பது என்பது நபிமொழி. எனவே உறவினர், அயலவர், நண்பர்களை அழைத்து விருந்துபசாரம் செய்ய வேண்டும்.
4. விருந்தாளிகளை சிரமப்படுத்தக் கூடாது.
விருந்தாளிகள் வரும்பொழுது முக மலர்ச்சியுடன் வரவேற்று, அவர்களை அமரச் செய்யவேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் உணவு பரிமாற வேண்டும். நீண்ட நேரம் தாமதப்படுத்தி விருந்தினர் களை சிரமப்படுத்துவது நாகரிகமான செயலல்ல; என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும்.
5. உணவு பரிமாற முன்பு பழங்கள் கொடுப்பது, உணவு உண்டபின் இனிப்பு கொடுப்பது சிறந்த முறையாகும். அத்துடன் விருந்தில் இறைச்சியும் ஒரு அங்கமாக உண்ணக் கொடுப்பது சிறப்பானது.
6. விருந்தளிப்பவரோ, விருந்தளிப்ப வர்களோ, அல்லது குடும்பத்தினர்களோ, உறவினர்களோ, விருந்தாளிகளுடன் அமர்ந்து உண்பதும், மற்றும் உணவு பரிமாறுவதும், விருந்தினர் உண்டு முடிந்த பின்பு கைதூக்குவது சிறப்பானது.
7. விருந்தாளிகளுடன் நல்ல முறையில் உறவாடுவது, வயிறார உண்ணும்படி கேட்டுக் கொள்வதும் சிறந்த பண்பாகும்.
8. விருந்தாளிக்கு குறைவான உணவோ, தேவைக்கு மிகுந்த உணவோ கொடுக்கக் கூடாது.
9. விருந்து முடிந்த பின் இன்முகத்து டன் உடன் சென்று வழியனுப்ப வேண்டும்.

விருந்தழைப்பை ஏற்றுக் கொள்வதும் விருந்துண்ணும் விழுமியங்களும்
1. விருந்துக்கு அழைத்தால் அதை சந்தோஷமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
விருந்துக்கு ஒருவர் அழைத்தால் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்; முன் சப்புக்கு அழைத்தாலும் சரி, பிந்திய சப்புக்கு அழைத்தாலும் சரி அதனை ஒப்புக்கொள்வது நபிவழியாகும். ஆனால் ஒரு விடயத்தை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். சன்மார்க்கத்துக்கும், சரீரத்து க்கும் ஏற்காத, தீங்கு விளையும் எனக் கண்டால்; விருந்தை ஏற்றுக்கொள்ளக் கூடாது.
2. விருந்தழைப்பை ஏற்பது சகோதர முஸ்லிமை கண்ணியப்படுத்துவதாகும்; என்ற எண்ணம் இருக்க வேண்டும். எண்ணம் போலவே வாழ்வு என்பது நபி மொழியாகும்.
3. விருந்தழைப்புகளை அண்மை, சேய்மை என கவனிக்கக் கூடாது. எதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
4. ஏக காலத்தில் இரு விருந்துகளுக்கு அழைக்கப்பட்டால் எது முந்திக் கிடைத் ததோ அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
5. விருந்துக்கழைப்பவர் யார் என எடைபோடக் கூடாது.
ஏழை, பணக்காரன் என வித்தியாசம் பார்த்து; ஏழை வீட்டு விருந்தை உதாசீனம் செய்வது பெருமைக்குரிய விடயமாகும். பெருமை இறைவனுக்குரிய இலட்சண மாகும். இதை முஸ்லிம்கள் எந்நேரமும் எதிலும் உணர வேண்டும்.
ஒரு நாள் நபி (ஸல்) அவர்களின் பேரனும் அலி (ரலி) அவர்களின் மகனு மாகிய ஹஸன் (ரலி) அவர்கள் வாகன மொன்றில் சென்று கொண்டிருக்கும் பொழுது சில ஏழைகள் தரையில் அமர்ந்து ரொட்டிகளை துண்டுகளாகப் பிய்த்து வைத்துச் சாப்பிட்டுக் கொண்டி ருந்தார்கள்.
ஹஸன் (ரலி) அவர்களைக் கண்ட அவர்கள் பெருமானார் பேரரே எங்களுடன் சாப்பிட வாருங்கள் என அன்புடன் அழைத்தனர். உடனே இமாமவர்கள் வாகனத்திலிருந்து இறங்கினார். அவர்களிடம் சென்றார்கள். அவர்களுடன் இருந்து சாப்பிட்டார்கள். இது வரலாறு.
5. சுன்னத்தான நோன்பு நோற்றி ருந்தால் விருந்தழைப்பை ஏற்று நோன்பை முறித்துவிட வேண்டும்.
‘உங்களில் ஒருவர் விருந்துக்கு அழைக்கும் நாளில் (நபில்) நோன்பாளி யாக இருந்தால் நோன்பை திறந்து உணவருந்தவும். இது பெருமானார் (ஸல்) அவர்களின் போதனை. ஒரு மூமினை சந்தோஷப் படுத்துவது இன்னோரு மூமினின் கடமை என்பதையும் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
6. விருந்துபசாரத்துக்கு முன்னதாகச் சென்று பந்திகளில் உட்காரக் கூடாது. அதுபோல பந்திக்கு அதிக நேரம் தாமதித்து செல்லவும் கூடாது. இரண்டு தன்மைகளும் விருந்துக்கு அழைத்தோர்க்கு கஷ்டத்தை கொடுக்கக் கூட்டியது.
7. விருந்துக்குச் சென்றால் சபை ஒழுக்கங்களை பேணவேண்டும். விருந்த ழைப்பாளர் அமரச் சொல்லும் இடத்தில் அமர்வது சிறந்த முறையாகும். தான் விரும்பிய இடத்தில் அமர்வது. முண்டி யடித்துக்கொண்டு செல்வது பண்பான செயலல்ல.
8. எல்லோரும் சாப்பிட்டு முடிந்த பின்பு தான் எழுந்திருக்க வேண்டும். அவசர அவசரமாக எழுந்து செல்வது ஏனையவரை நோகடிக்கும் செயலாகும்.
9. விருந்து முடிந்தபின், விருந்து தந்தவர்களுக்கும், வீட்டாருக்கும் அல்லாஹ்வைப் புகழ்ந்து அவர்களுக்காக துஆ செய்ய வேண்டும்.
10. விருந்தில் ஏதும் குறையிருந்தால் அதை வெளியே சொல்லக்கூடாது.
இப்படியான ஒழுங்கு முறைகளை ஒவ்வொரு முஸ்லிமும் பேணினால் இஸ்லாமிய சகோதரத்துவம் பேணப்படும். ஆனால் இன்று திருமணச் சடங்கு, வலிமா, இப்படி பல பெயர்களில் முஸ்லிம்கள் விருந்தோம்பல் செய்கின்றனர். நல்லது தான். என்றாலும் ஒரு சில விருந்துபசா ரங்களைப் பார்க்கும் பொழுது வேதனை ப்பட வேணடியது மட்டுமல்ல; வெட்கப் பட வேண்டிய நிலையிலுள்ளோம்.

சில திருமணச் சடங்குகளில் மெழுகுதிரி எரிய விட்டு சங்கீத கச்சேரிகள் நடைபெறுகின்றன. இவை யாவும் நஸராக்களின் கலாசாரம் என்பதை உணர வேண்டும். அத்துடன் தேவைக்கதிகமான உணவுகள், பரிமாறப்படுகின்றன. ஏழை உறவினர், அயலவர் அழைக்கப்படுவதில்லை; நிறைய இடங்களில் மிதமிஞ்சிய உணவு வகைகள் புதைக்கப்படுகின்றன. இவை அல்லாஹுவுக்கு மாற்றமானவை.


1 கருத்துகள்

பத்திரிகைகளை உணவாக உட்கொள்ளும் கர்ப்பிணி

பிரிட்டனைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணொருவர் பத்திரிகைகளை உணவாக உட்கொள்ளும் விநோத பழக்கத்திற்கு தான் உட்பட்டுள்ளதாக கூறுகிறார்.ஆன் குரன் என்ற 35 வயது பெண், செய்தித் தாள்கள் மட்டுமே மிகவும் சுவையான உணவாக உள்ளது என தெரிவித்துள்ளார்.


அவர், அவசர ‘சிற்றுண்டியாக’ பயன்படுத்திக்கொள்வதற்காக செய்தித்தாள்களிலிருந்து கிழிக்கப்பட்ட துண்டுகளை தனது கைபையில் வைத்துக்கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்.
‘நான் வீட்டு வரவேற்பறையில் அமர்ந்து பத்திரிகைகளில் உள்ள பக்கங்களை கிழிக்க ஆரம்பித்து விடுவேன்.

அனைவரும் வேடிக்கையாக பார்த்துக்கொண்டு இருப்பர். இப்பத்திரிகைத் துண்டுகளை நான் சொப்பிங் செய்யும் போது என்னால் அதனை உட்கொள்ள முடியும்’ என அவர் கூறியுள்ளார்.
செய்தித் தாள்கள் மாத்திரம் அதுவும் குறிப்பிட்ட சில சுவைகொண்ட கடதாசிகள் மாத்திரமே தனக்கு உண்பதற்கு விருப்பமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி : Thaaitamil.com  Post

1 கருத்துகள்

போதை தரும் அனைத்தும் இஸ்லாத்தில் தடை


“கம்ரு” எனும் அரபுச் சொல்லுக்கு புளிக்கவைத்தல் என்றும் பொருள். அப்புளிப்பே அதை அருந்துவோருக்கு போதையைக் கொடுத்து அவர்கள் அறிவை மயக்கும் தன்மைவாய்ந்தது.
அரபு நாட்டில் ஆரம்பத்தில் திராட்சை ரச மதுவே உபயோகத்திலிரு ந்து வந்தது. திராட்சை ரச மதுவிற்கு அரபு மொழியில் “கம்ரு” என்று சொல் லப்படும். அந்நாட்டு மக்கள் கோதுமை, பேரித்தம்பழம், தேன் முதலியவைகளிலி ருந்தும் மது வடித்து வந்தனர். அவை அனைத்திற்கும் “கம்ரு” என்று பெயரிட்டனர்.
அல்லாஹ் கூறுகிறான், (நபியவர்களே) மது அருந்தல், சூதாடல் ஆகியவை பற்றி அவர்கள் உம்மிடம் வினவுகின் றனர். அவ்விரண்டிலும் மக்களுக்கு சில நன்மைகளும், பல தீமைகளும் இருக்கி ன்றன. எனினும் அவ்விரண்டின் நன்மையை விடத் தீமைகள் பெரியது என்று கூறுக! (குர்ஆன் 2:19)

நபி (ஸல்) அவர்கள் போதை தரும் பொருட்கள் அனைத்திற்கும் தடை விதித்தனர். ஆதலால் அரபு நாட்டவர் அருந்தி வந்த திராட்சை ரசம் அல்லது ஈத்தம் கள் சாராயம் மது வகைகள் போதை தரக்கூடிய அனைத்தும் தடுக்கப்பட்டுள்ளன.
மனித சுபாவம்
மனிதன் ஏதாவதொரு பழக்கத்திற்கு அடிமைப்பட்டுவிட்டால் அதைக் கைவிட என்றும் துணிவதில்லை. அதனைக் கைவிட அவனால் முடியவும் மாட்டாது. நாளடைவில் அப்பழக்கம் இயற்கையாக மாறிவிடும். மனிதன் மதுவிற் பிரியங் கொண்டு விடுவானாயின் அதை வெறுத்துத்தள்ள அவனால் முடிவதில்லை.
மதுவின் ஒரு நிமிட இன்பத்திற்காக அதனால் வரப்போகும் எத்தகைய பழி யையும் அவர்கள் பொருட்படுத்துவதில்லை. மக்களிடம் மதிப்பை இழப்பது, மானம் போவது, கொலைப்பாதகம் நேரிடுவது போன்ற எந்தப் பெரும் கேட்டையும் அவன் கவனிப்பதில்லை.
மதுவினால் சமுதாயத்தின் சீரழிவு
தன்மானமும் ஒழுக்கங்கெட்ட ஒரு சிலர் ஒரு சமுதாயத்தில் தோன்றினால் அச்சமுதாயம் என்னென்ன கேடுகளுக்கு இலக்காக நேரிடும். சில குடிகாரர்களின் செயல்காரணமாக அச்சமுதாயத்தின் பெண்களின் கற்பு, குடும்ப கொலை, அடிதடி, வாய்ச்சண்டை, வெறியாட்டம் இவை அனைத்தும் நடைபெறுவது கண்கூடு.
நபி (ஸல்) கூறினார்கள், சூனியக் காரன் சுவனம் செல்லவே முடியாது. சூனியக்காரனைப் போலவே மதுபானம் வடிப்பவனும், குடும்ப உறவைத் துண் டிப்பவனும் சுவனம் செல்ல முடியாது.
அறி: அபூமூஸா (ரலி)
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் குடிக்கென்று ஒரு தனித்தண்டனை விதிக்கப்பட வில்லை. குடித்துவிட்டு வருபவருக்கு செருப்படி, உதை, துணியை முறுக்கி திரித்துக் கொண்டு அடிப்பது போன்ற தண்டனைகள் கொடுக்கப்பட்டு வந்தன. சிலவேளை பேரித்தநார் கயிற்றாலும் அடி கொடுக்கப்பட்டது. சிலவேளை அக்கயிற்றால் நாற்பது அடிகள் கொடுக்கப்பட்டன. சிலவேளை சூழ்நிலைக்குத் தக்கவாறு தண்டனை வழங்கப்பட்டது.

தண்டனை வழங்கப்பட்ட முறை
1. நபிகள் காலத்தில் மது அருந்திய குற்றத்திற்கு தனித்தண்டனை விதிக்கப் படவில்லை.
2. மது அருந்திய ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்ட போது “அவரை அடியுங்கள்” எனக்கூற நாங்கள் கையாலும் செருப்பாலும், துணித்திரியாலும் அவரை அடித்தோம்.
(அபூதாவுத்)
குடித்தவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேரித்தமட்டை, செருப்பு ஆகியவைகளால் அடி கொடுக்கச் செய்தனர். அவ்விரண்டாலும் நாற்பது அடிகள் கொடுக்கப்பட்டன. (அறி:- கத்தாதா)

கலிபாக்கள் காலத்தண்டனை
கலிபா அபூபக்கர் (ரலி) அவர்கள் ஆட்சிக் காலம் முழுவதிலும் உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்கால ஆரம்பத்திலும் குடித்தவர்களுக்கு நாற்பது அடிகள் கொடுக்கப்பட்டு வந்தன. சிலவேளை 40 முதல் 80 ஆக உயர்த்தினார்கள். இஸ்லாமிய ஆட்சியில் இருந்த நடைமுறையே இப்போதும் இருந்து வருகிறது.
கலிபா உதுமான் (ரலி) அவர்களிடம் மது அருந்திய குற்றத்திற்காக வலீது இப்னு அக்பா என்பவர் கொண்டுவரப் பட்டார். அவர் மது அருந்தியதாக ஹம்ரான் என்பவரும் மற்றொருவரும் சாட்சி கூறினர்.
அவருக்கு தண்டனை அளிக்குமாறு அலி (ரலி) அவர்களை உதுமான் (ரலி) கேட்டுக் கொள்ள அலி (ரலி) அவர்கள் அப்துல்லாஹ் இப்னு ஜஃபர் (ரலி)யை அழைத்து வலித்துக்கு சவுக்கடி கொடுக்கும்படி கூறவே அவர் எழுந்து அவருக்கு அடி கொடுக்க, அலி (ரலி) எண்ணுவதற்கு ஆரம்பித்தார்.
அவர் நாற்பது அடிகள் கொடுத்தவுடனே போதும்! நபி (ஸல்) அவர்களும் அபூபக்கர் (ரலி) அவர்களும் குடிகாரர் களுக்கு நாற்பது சவுக்கடிகளே கொடுத் தனர். உமர் (ரலி) அவர்கள் மட்டும் எண்பது அடிகள் கொடுத்தார்.
எனவே இக்கொடிய, தீய, பழக்கவழக்கங்களை கடைப்பிடித்திருப்ப வர்கள் ஊரையும், குடும்பத்தினரையும் பாழாக்கி நாசப்படுத்தாமல், எதிர்வரும் ரமழானில் நல்லமல் செய்து நற்பிரஜை யாக வாழ அல்லாஹ் அருள் பாலிப்பானாக.

0 கருத்துகள்

ஜோதிடம் பார்க்காதீர்...

ஜோசியத்தைப் பற்றி சிலர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டபோது “அதனால் பயன் ஏதுமில்லை” என பதில் கூறினார்கள். “அவர்கள் கூறுவது எங்களிடம் சரியாகவும் உள்ளதே!” என்று கேட்டனர். அதற்குக் காரணம் (வானவர்கள் பேசியதை) ஜின்கள் ஒட்டுக்கேட்டு தமது தோழர்களின் காதுகளில் போடுவதாகும். அந்த செய்தியில் 100 பொய்களை சேர்த்து கூறிவிடுகின்றனர் என்று நபி(ஸல்) பதில் கூறினார்கள்.
ஆயிஷா (ரலி) : புகாரி, முஸ்லிம்
ஜோசியத்தைப் பற்றி சிலர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டபோது “அதனால் பயன் ஏதுமில்லை” என பதில் கூறினார்கள். “அவர்கள் கூறுவது எங்களிடம் சரியாகவும் உள்ளதே!” என்று கேட்டனர் …


இறைத்தூதர் அவர்களே! நாங்கள் (இஸ்லாத்தை தழுவும்முன்) அறியாமை காலத்தில் பல காரியங்களை செய்வோம். (அதில் ஒன்று) நாங்கள் ஜோசியரிடம் செல்வதும், (இது சரியான செயலா?) எனக்கேட்டேன். “நீங்கள் ஜோசியரிடம் செல்லாதீர்கள்” என நபி(ஸல்) அவர்கள் பதில் அளித்தார்கள். நாங்கள் சகுனமும் பார்த்து வந்தோம். (இது சரியானதுதானா?) எனக் கேட்டேன். அதற்கு இது உள்ளத்தில் ஏற்படும் ஒரு (தவறான) விஷயமாகும். எனவே (எந்தச் செயல் செய்வதிலிருந்து) தடுத்துக் கொள்ளாதீர்கள் என நபி(ஸல்) பதில் கூறினார்கள். முஆவியா(ரலி) : முஸ்லிம்

மாதவிடாய் பெண்ணிடமோ அல்லது பெண்ணின் மலதுவாரத்திலோ, உடலுறவு கொண்டால், அல்லது ஜோசியனிடம் சென்று அவன் சொன்னதை ஏற்று நம்பி உண்மையாக கருதினால் அவன் முஹம்மதாகிய எனக்கு இறக்கப்பட்டதை (குர்ஆனை) மறுத்தவனாவான் என்று நபி(ஸல்) கூறினார்கள். அபூஹுரைரா(ரலி) : இப்னுமாஜா, அஹ்மத்
வருங்காலத்தை கணித்துக் கூறுபவனிடம் சென்று, எந்த ஒரு விஷயத்தையேனும் கேட்டால் அவனுடைய 40 நாள் இரவு தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது என்று நபி(ஸல்) கூறினார்கள். ஸஃபிய்யா(ரலி) : முஸ்லிம்
ஹுதைபா(ரலி) அவர்கள் ஒருவரின் கையில் ஜுரம் நீங்குவதற்காக கயிறு ஒன்று இருப்பதைக் கண்டு அதை அறுத்துவிட்டு பின்வரும் திருவசனத்தை ஓதிக்காண்பித்தார்கள்
மேலும் அவர்கள் இணைவைப்பர்களாக இருக்கிற நிலையிலல்லாமல் அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதில்லை. (அல்குர்ஆன் 12:106) நூல் : முஸ்னத் இப்னு அபீஹாதம்
நபி(ஸல்) அவர்கள் ஒருவரை அவர் கையில் பித்தளை வளையம் இருப்பதைக் கண்டு “இது என்ன?” என்று வினவினார்கள்” அதற்கு அம்மனிதர் வாஹினாவின்(கழுத்தில், கையில் உண்டாகும் நோய்) காரணமாக அணிந்துள்ளேன் என்று பதில் கூறினார். அது சமயம் நபி(ஸல்)அவர்கள் அவரை நோக்கி “நீர் இதைக் கழற்றிவிடும் இது உமக்கு பலஹீனத்தைத்தான் அதிகப்படுத்தும். இந்நிலைமையில் நீர் மரணித்தால் நிச்சயமாக நீர் வெற்றி பெறவே மாட்டீர்” என்று கூறினார்கள். இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) : முஸ்னத் அஹ்மத்

“ஜோதிடன் கூறுபவற்றை உண்மைப் படுத்துபவன் நபி(ஸல்) அவர்கள் மீது இறக்கி வைக்கப்ட்ட (வேதத்)தை நிராகரித்தவனாவான்” என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அபூஹுரைரா(ரலி) : அபூதாவூத்
மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது இன்னும், அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது; தேடுவோனும், தேடப்படுவோனும் பலஹீனர்களே. (அல்குர்ஆன் 22:73)


நன்றி : புதுவலசை Post

0 கருத்துகள்

சமூக அமைதிக்கு வித்திட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள்



இன்றைக்கு சமூக நல்லிணக்கம் என்பது என்றால் என்ன? என்று கேட்கும் அளவுக்கு சமூக மாச்சரியங்கள் மலிந்து காணப்படுகின்ற வேளையில், இஸ்லாம் சமூக அமைதிக்கு வழிகாட்டியிருக்கின்றது என்பது பற்றி அறிந்து கொள்ள இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாழ்வு நமக்கு பேருதவி புரிகின்றது.

இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மதினாவைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து கொண்டிருந்த நேரமது. இஸ்லாமிய தலைமைக் கேந்திரமான மதினாவிலும், அதனைச் சுற்றிலும் உள்ள பகுதிகளிலும் பல்வேறு மதத்தவர்கள் வாழ்ந்து வந்தார்கள். இவர்கள் அனைவரும் எந்தக் காலத்திலும் எந்தச் சட்டத்திற்கும் கட்டுப்பட்டு வாழ்ந்த வரலாறு என்பதே கிடையாது. இந்த நிலையில், பல்வேறு குழுக்களையும் ஒப்பந்தங்கள் மூலம் ஒருங்கிணைத்து, அதன் மூலம் மதீனாவின் சமூக வாழ்வை அமைதி தவழும் இடமாகவும், மக்கள் தங்களுக்குள் கொள்கைகளில் வேறுபட்டிருந்தாலும், சமூக அமைதி என்ற ஒரே குறிக்கோளை முன்வைத்து அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தலைமையில் ஒருங்கிணைந்து வாழ்ந்ததை நாம் காண முடிகின்றது.


இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் என்ற மதீனாவிற்கு நாடு துறந்து வந்த பொழுது, மதீனாவில் பல்வேறு கொள்கையைக் கொண்ட மக்கள் வாழ்ந்து வந்தார்கள். அவர்களில் மிகவும் வலுவான சமூக அடித்தளத்தைக் கொண்ட யூதர்களும், மற்றும் கிறிஸ்தவர்களும், தங்களது மூதாதையர்களின் பழக்க வழக்கங்களைப் பின்பற்றி வருபவர்களுமாக, மதீனா நகரம் ஒரு குழம்பிய குட்டையாகத் தான் இருந்தது.
பல்வேறு கொள்கையைக் கொண்டிருந்த இந்த மக்களை ஒருங்கிணைத்து அமைதியான சமூக வாழ்வை ஏற்படுத்த விரும்பிய இறைத்தூதர்(ஸல்) அவர்கள், அந்த பல்வேறு குலத்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, நேரடித் தொடர்புகள் அல்லது எழுத்துப்பூர்வமான ஒப்பந்தங்களைச் செய்து கொண்டார்கள். இந்த ஒப்பந்தங்களின் நோக்கம் எதுவாக இருந்ததெனில், மதீனா நகரில் பல்வேறு குலத்தவர்கள் வாழ்ந்து வந்தாலும், பல்வேறு கொள்கையைக் கொண்டவர்களாக அவர்கள் இருந்தாலும், சமூக வாழ்வில் அந்தத் தாக்கங்கள் தலைகாட்டாது, சமூகம் அமைதி தவழும் இடமாக இருந்து வர வேண்டும் என்பதாக இருந்தது.

இதனை மிகப் பிரபலமான மேற்கத்திய சிந்தனையாளரான டி.டபிள்யூ.அர்னால்டு என்பவர் இவ்வாறு கூறுகின்றார் :
ஹிஜாஸ் பிரதேசத்தில் வாழ்ந்த மக்களிடம் சமூக அமைதியை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள், இதற்கு முன் எந்த சட்டத்திற்கும் கட்டுப்படாத அந்த மக்களை முழுவதுமாக ஒப்பந்தங்களின் மூலம் கட்டுப்பட வைத்ததன் மூலம், சமூக அரசியல் தளத்தில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தினார்கள். இன்னும் அவர் கூறுகின்றார், சிறிய மற்றும் பெரிய குலத்தவர்களாக சிதறிக் கிடந்த அந்த மக்களை, தங்களுக்குள் எப்பொழுதும் பகைமை பாராட்டிக் கொண்டிருந்த அந்த மக்களை ஒருங்கிணைத்து, சமூக ஒற்றுமையை ஏற்படுத்தினார்கள்.
மக்காவின் வெற்றியைத் தொடர்ந்து, இதுவரை காலமும் முஸ்லிம்களை மரணப்படுக்கையில் தள்ளுவதற்குக் கூடத் தயங்காத இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத அந்த மக்களை மதச் சகிப்புத் தன்மையுடன் நடத்தியதோடு, அவர்களை இரக்கத்துடன் நடத்தினார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள். இத்தைகய சகிப்புத்தன்மையை இதுவரை காலமும் அரபுக்கள் தங்கள் வாழ்நாளிலே என்றுமே கண்டதுமில்லை, கேட்டதுமில்லை. இத்தைகய நற்பண்புகள் முஸ்லிம்களின் மீது மிகப் பெரும் நன்மதிப்பை அவர்கள் மத்தியில் ஏற்படுத்தியது.

இஸ்லாம் ஆட்சி செய்து கொண்டிருந்த அந்த பிரதேசத்தில், இஸ்லாமிய நீதியையும், நெறிமுறைகளையும் அமுல்படுத்திக் காட்டுவதில், மற்றவர்களைக் காட்டிலும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தான் ஒரு முன்மாதிரிமிக்கவராகத் திகழ்ந்து காட்டினார்கள். அவர்கள் அந்த மக்கள் மத்தியில் மத சகிப்புத் தன்மையையும், நீதியையும் குர்ஆன் வகுத்துக் காட்டியிருக்கின்ற வழிமுறைப்படி ஆட்சி செய்து காட்டினார்கள். இந்த ஒரு காரணத்திற்காக, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, பல்வேறு குலங்களையும், கோத்திரங்களையும் சேர்ந்த அந்த மக்கள், இஸ்லாத்தின் மதசகிப்புத் தன்மை, நீதி பரிபாலணம், அது வழங்கியிருக்கும் அமைதி தவழும் வாழ்க்கை நெறி ஆகியவற்றினால் கவரப்பட்டு, குறுகிய காலத்தில் தங்களை இஸ்லாத்தினுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டார்கள். இவ்வாறு பல குலங்களையும் ஒருங்கிணைத்த இஸ்லாம், அவர்கள் அனைவரையும் சகோதரத்துவம் என்ற ஒரே கொள்கையின் கீழ் இணைத்து, நீதிபரிபாலணம் என்பது முழு அளவில் செயல்பட்டுக் கொண்டிருந்தது. அதற்கு திருமறைக் குர்ஆன் இவ்வாறு பின்புலமாக இருந்தது.
நாம் படைத்தவர்களில் ஒரு கூட்டத்தார் இருக்கின்றார்கள். அவர்கள் சத்திய வழியைக் காட்டுகிறார்கள்; அதைக் கொண்டு நீதியும் செலுத்துகிறார்கள். (7: 181)
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மற்ற மக்களிடம் காட்டிய மதச் சகிப்புத் தன்மைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக, நஜ்ரான் பிரதேசத்துக் கிறிஸ்தவர்களிடம் அவர்கள் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் முஸ்லிம்களின் மத சகிப்புத் தன்மைக்கும், நீதி நெறிமுறைகளுக்கும் சிறந்த சான்றுகளாகத் திகழ்கின்றன. இதனை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அந்த சமூகத்தில் முழுவதுமாக நடைமுறைப்படுத்திக் காட்டினார்கள்.
அத்தகைய ஒப்பந்தங்களின் ஒருபகுதி இவ்வாறிருந்தது :
உயிர்களும், அவர்களது கொள்கைகளும், உடமைகளும், குடும்பங்களும், அவர்களது வழிபாட்டுத் தளங்களும், இன்னும் நஜ்ரானில் வாழ்கின்ற அனைத்து மக்களும், இன்னும் அவர்களுடன் வாழ்ந்து வருபவர்களும் அல்லாஹ்வினதும், அல்லாஹ்வினது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களினதும் பாதுகாப்பின் கீழ் இருக்கின்றார்கள்.
எனவே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இதுபோன்ற ஒப்பதங்கள் மூலமாக, இஸ்லாமிய ஒழுக்க மாண்புகளை எவ்வாறு சமூகத்தில் நடைமுறைப்படுத்திக் காட்டுவது என்பதற்கான நடைமுறையையும், இன்னும் முஸ்லிம்களுடன் முஸ்லிம் அல்லாத மக்களான வேதம் வழங்கப்பட்டவர்கள் எவ்வாறு இணக்கமான முறையில் வாழ முடியும் என்பதற்கான உதாரணத்தையும் காட்டி விட்டுச் சென்றுள்ளார்கள்.
முஸ்லிம்களின் நடைமுறைப்படுத்திக் காட்டும் ஒழுக்க மாண்புகள் நீதமானதும், நடுநிiயானதும், இன்னும் அமைதிப்பூர்வமானதும் கூட. இன்னும் அதிகமாக, இத்தகைய ஒப்பந்தங்கள் மூலமாக, அதற்குப் பிரதியீடான இஸ்லாமானது வாழ்நாள் முழுவதற்குமான அமைதியையும், மற்றும் தொல்லைகளற்ற வாழ்வுக்கும் உத்தரவாதம் தருகின்றது. இன்னும் இஸ்லாத்தின் ஒழுக்க மாண்புகளை அடிப்படையாகக் கொண்டதொரு முன்மாதிரி மிக்க சமூகத்தைப் பெற்று அதன் மூலம் கருணை, இணக்கம், சகிப்புத் தன்மை மற்றும் அமைதி மிக்க வாழ்க்கையை இந்தப் பூமிப் பந்தின் மீது நிறுவுதற்கு அனைவருக்கும் அழைப்பும் விடுக்கின்றது.
அனைத்து மக்களும், அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் சரியே, அமைதியான சமூக வாழ்விற்கு ஒத்துழைப்பது அனைவரின் மீதுள்ள மிகவும் பொறுப்பு வாய்ந்த கடமையாகும். முஸ்லிம்கள் என்ற நிலையில், மற்ற மதத்தவர்ளைப் பொறுத்தவரை, முஸ்லிம்களுக்கு அல்லாஹ் கட்டளையிடுவது என்னவென்றால், ''அல்லாஹ்வைத் தனித்துவமாக வணங்குவதற்கும் இன்னும் அவனுடன் எந்தவித இணையாளர்களையும் ஆக்காதிருப்பதற்காவும்'', மேற்கண்ட நோக்கத்தை அடைந்து கொள்வதற்காக அவர்களுடன் தோள் கொடுத்துச் செயலாற்றும்படிக் கூறுகின்றான் :
(நபியே! அவர்களிடம்) ''வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹவீர்ர்hர்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்'' எனக் கூறும்; (மு.மின்களே! இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்; ''நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!'' என்று நீங்கள் கூறிவிடுங்கள். (3:64)
முஸ்லிம்களும், யூதர்களும் மற்றும் கிறிஸ்தவர்களும் ஒரு பொதுவான கருத்தின் அடிப்படையில் அதாவது பரஸ்ர நல்லுணர்வு, அன்பு, அமைதி மற்றம் சகிப்புத் தன்மை ஆகியவற்றை பொதுவான நோக்கமாகக் கொண்டதன் அடிப்படையில் இணைந்து விட்டார்களென்று சொன்னால், இந்த உலகம் ஒரு வித்தியாசமானதொரு இடமாக மாறி விடும். பிளவுகளும், பிரச்னைகளும், அச்சமும், மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளும் மறைந்து, அவை எல்லாம் வரலாற்றில் தேடிப்பிடிக்க வேண்டிய நிகழ்வுகளாக ஆகி விடும், அன்பு, மதிப்பு மற்றும் அச்சமற்ற தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட புதியதொரு நாகரீகம் மலர்ந்து விடும்.

அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே கூறுகின்றான் :
நிச்சயமாக யூதர்களையும், இணைவைப்பவர்களையும் முஃமின்களுக்குக் கடும் பகைவர்களாகவே (நபியே!) நீர் காண்பீர்; ''நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கின்றோம் என்று சொல்பவர்களை, முஃமின்களுக்கு நேசத்தால் மிகவும் நெருங்கியவர்களாக (நபியே!) நீர் காண்பீர்; ஏனென்றால் அவர்களில் கற்றறிந்த குருமார்களும், துறவிகளும் இருக்கின்றனர்; மேலும் அவர்கள் இறுமாப்புக் கொள்வதுமில்லை. (5:82)

சில இறுமாப்புக் கொண்டவர்கள் (சிலுவை யுத்தக் காரர்கள்) இந்த உண்மையை அறிந்து கொள்ள இயலாத காரணத்தால், இரு சமூகத்திற்கும் இடையே அவர்கள் மிகப் பெரும் யுத்தத்திற்கு வழி வகுத்து விட்டார்கள். உண்மையான கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் இத்தகைய யுத்தத்தின் மூலம் இரத்தம் சிந்தப்படுவதை விரும்பக் கூடாது, தங்களுக்குள் பரஸ்பரம் ஒத்துழைத்து, அதனை தடுக்கவும் முயற்சி செய்ய வேண்டும்.
அமெரிக்காவில் நடந்து போன துரதிர்ஷ்டவசமான அந்த நிகழ்வுக்குப் பின், இத்தகைய ஒத்துழைப்புகளுக்கான விதைகள் தூவப்பட்டதற்கான அறிகுறிகள் தென்பட்டதை நாம் கண்டோம். வெறுக்கத்தக்க இந்த நாசகாரச் செயல்கள் நடந்து விட்ட பின், இரு சமூகத்திற்கும் இடையே மிகப் பெரும் இணைப்பை உருவாக்கி வைத்ததையும் நாம் பார்த்தோம்.

முன்னைக்காட்டிலும், இஸ்லாத்தின் பக்கம் மிக நெருக்கமாகச் சென்று அதனை ஆராய்ந்து அறிந்து கொள்ளும்படி பல கிறிஸ்தவர்கள் உற்காசமூட்டப்பட்டார்கள், அதனைப் போலவே முன்னைக் காட்டிலும் தங்களது மார்க்கத்தைப் பற்றி அதிகமான விளக்கத்தையும், குர்ஆன் கூறும் இஸ்லாமிய ஒழுக்க மாண்புகள் பற்றியும் அதிகமாக அளவில் விளக்கங்கள் கொடுக்க அதிக முயற்சியை முஸ்லிம்கள் எடுத்துக் கொண்டார்கள்.
இறைவன் நாடினால், இந்த பூமிப் பந்தில் அமைதியை முழுமையாக நிறுவுவதற்கு இஸ்லாமிய ஒழுக்க மாண்புகளே உகந்தது என்ற உண்மையை இந்த 21 ஆம் நூற்றாண்டானது விரைவில் கண்டு கொள்ளும்.

முன்னைக் காட்டிலும் இஸ்லாத்தைப் பற்றியும், அதன் ஒழுக்க மாண்புகள் பற்றியும் மக்கள் மத்தியில் இருந்த எதிர்மறையான கருத்துக்கள் மறைய ஆரம்பித்திருப்பதும், அத்தகைய தவறான எண்ணங்கள் களையப்பட்டு வருவதும், 21 ஆம் நூற்றாண்டை விரைவில் இஸ்லாமிய ஒழுக்க மாண்புகள் ஆட்சி செய்யும் என்ற நற்செய்திக்குக் கட்டியம் கூறுபவைகளாக உள்ளன.

நன்றி : தமிழ் இஸ்லாம்.காம்  Post   

0 கருத்துகள்

வலி வரும் வழிகளும் அதனால் வரும் நோய்களும்




எந்த ஒரு நோயும் மனிதனை உடனே தாக்குவதில்லை. சிறுக சிறுக தாக்கியப் பிறகே வலுவடைகின்றது. இதன் ஆரம்ப கட்டங்கள் நமக்கு சில சமிக்கைகள் கிடைக்கவே செய்கின்றன. அவைகளை நாம் புரிந்துக் கொண்டால் நோய்க்கான காரணத்தை தெரிந்துக் கொண்டு அதிலிருந்து நம்மை காத்துக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்.

முதலில் கைகளை எடுத்துக் கொள்வோம். கைகளில் உள்ள ஐந்து விரல்களின் மூலம் ஆறு வகை உறுப்புகளின் இயக்கத்தை தெரிந்துக் கொண்டு நோய்க்கான காரணத்தை விரைவில் ஒரு பைசா செலவில்லாமல் கண்டுபிடித்து விடலாம்.


நாடி பார்த்து 12 உறுப்புகளின் நோய் அறிவது அக்கு பஞ்சருக்கு இறைவன் அளித்த கலை. இதனால் தான் ஏற்படுவதில்லை இந்த மருத்துவத்தில் நோய் கண்டறிவதின் பிழை. இன்னும் சில வழிகளும் இருக்கின்றது நோய் கண்டறிய. அவைகளில் ஒன்று தான் கை விரல்கள் மூலம் நோய் அறியும் நிலை.

கை பெருவிரல் (THUMP FINGER)

கை பெருவிரல் வெளிப் பக்க ஓரத்திலிருந்து வலி ஆரம்பித்து நேராக முழங்கை மேல் பக்கம் நடுவில் சென்று பிறகு மேலே வலி முடியுமானால் அல்லது இதற்கு இடை இடையே வலியோ மரமரப்போ இருக்குமானால் இது நுரையீரல் சம்பந்தப்பட்ட நோயின் அறிகுறியாகும்.

ஆட்காட்டி விரல் (INDEX FINGER)


ஆட்காட்டி விரலில் ஆரம்பித்து முழங்கை வெளிப் பக்கமாக நேராக தோள்பட்டை மேல் சென்று மூக்கின் ஓரத்தில் முடியும். இந்த பாதையில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளும் பெருங் குடல் சம்பந்தப்பட்ட நோயின் அறிகுறியாகும்.

நடு விரல் (MIDDLE FINGER)

நடு விரல் இதயத்தின் மேல் உறையோடு சம்பந்தப்பட்டது. இதய நோயின் ஆரம்ப கட்டத்தில் அல்லது இதயத்தின் மேல் உறையில் ஏற்படும் பிரச்சினைகள் இந்த விரலில் ஆரம்பித்து உள்ளங் கை பக்கமாக வந்து கையின் நடுவில் நேராக சென்று அக்குளின் மேல் புறம் முடியும். இந்த பாதையில் அல்லது அதற்கு இடைப்பட்ட பகுதியில் ஏற்படும் உபாதைகள் அனைத்தும் இதய உறை (Pநுசுஐஊயுசுனுஐருஆ) பாதிப்பை அறிவுறுத்தும் அறிகுறிகளாகும்.

மோதிர விரல்(RING FINGER)

உடலில் வெப்ப நிலை மாறுபாட்டை அதனால் ஏற்படும் நோயின் அறிகுறிகளை மோதிர விரல் மூலம் அறியலாம். இந்த விரலில் ஆரம்பித்து கையின் பின்புறமாக சென்று தோள் பட்டை மேல் புறமாக காது வழியாக போய் கண் அருகில் முடிகின்றது. இந்த பகுதியல் ஏற்படும் பாதிப்புகளும் இந்த பாதை செல்லும் பகுதியில் உள்ள உறுப்புகளின் பாதிப்புகளும் உடலில் உஷ்ண நிலையில் கோளாறு உள்ளதையே காட்டுகின்றன.

சுண்டு விரல்(SMALL FINGER)

சுண்டு விரல் நகக் கண்ணில் (மோதிர விரல் பக்கம்) வலி ஆரம்பித்து அது உள்ளங் கை பக்கமாக வந்து மணிக்கட்டு ரேகையின் ஓரமாக போய் அக்குலில் முடியுமானால் அது உறுதியாக இதயத்தின் பாதிப்பைக் காட்டுகின்றது.
சுண்டு விரல் நகக் கண் வெளிப் பக்கம் ஆரம்பித்து மணிக் கட்டு ஓரமாக போய் முழங் கை கீழாக சென்று தோள்பட்டையின் பின் பக்கமாக போய் காதின் ஓரத்தில் முடியும் பாதையில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளும் சிறு குடல் பாதிப்பை வெளிப்படுத்தும் அறிகுறிகளாகும்.
கவணம்
சுண்டு விரலில் ஏற்படும் வலியின் போதும் நடு விரலில் ஏற்படும் வலியின் போதும் அலட்சியமாக இருப்பது இதயத்தையும் இதயத்தின் மேல் உறையையும் மேலும் பாதிப்புக்கு உள்ளாக்கும். இதயத்தில் முதலில் பிரச்சினை வரும் போது அது நடு விரல் பாதையில் தான் அதிகமாக அறிகுறிகள் தென்படும். அதன் பிறகே சுண்டு விரல் பக்கம் வலி ஏற்படும்.
இந்த நேரங்களில் நாம் தகுந்த சிகிச்சை எடுப்பதன் மூலம் பெரும் நோய்களிலிருந்து நம்மை காத்துக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்.
சரிதானா?
நாம் இப்போது சிந்திப்போமானால் இது வரை நாம் செய்த செயல்கள் எந்த அளவுக்கு புறம்பானவை என்று அறியும் போது நமக்கே ஆச்சரியமாகவும் வெட்கமாகவும் தோன்றும். ஆம் கை வலிகளுக்கு இத்தனை காரணங்கள் இருக்க இவை எதனையுமே கருத்தில் கொள்ளாமல் வலி நிவாரண மாத்திரைகளை சாப்பிட்டு நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டது ஆச்சரியமானது ஒன்று மட்டுமல்ல மிக மிக அலட்சியமான ஒன்று.
இப்படி மாத்திரை சாப்பிடுவதன் மூலம் சாப்பிடுபவர்களுக்கு ஒரு தற்காலிக நிவாரணம் கிடைக்குமே ஒழிய நோய் (வலி) மீண்டும் மீண்டும் வந்துக் கொண்டேயிருக்கும்.மாத்திரை சாப்பிட்டால் மீண்டும் தற்காலிக சுகம் கிடைக்கும், அதே நேரத்தில் உள் பக்கமாக நோய் வளர்ந்துக் கொண்டே இருக்கும். நோய்க்கான காரணம் கண்டறியப் பட்டு அது சரி செய்யப்படாத வரை நோயிலிருந்து பூரன சுகம் என்பது கற்பனையே.
நடப்பதென்ன
வலி ஏற்படும் போது நீங்கள் மதிப்பு மரியாதையுடன் பணம் கொடுத்து வாங்கி சாப்பிடும் மாத்திரைகள் வலியை நீக்குவதில்லை. அதற்கு பதிலாக வலிக்கின்றது என்ற செய்தி செல்கள் மூலமாக மூளைக்கு எட்டுவதை தடுத்துவிடுகின்றது (மேலும் விவரத்திற்கு மூளைக்கு சுய அறிவில்லை என்ற முந்தைய தொடரை படியுங்கள்), அதனால் நமக்கு வலி தெரிவதில்லை.
உதாரணம்:
நம் உடலில் ஓர் ஆபரேஷன் செய்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம், மயக்க ஊசி போடாமல் செய்ய முடியுமா? முடியாது காரணம் வலியை தாங்க முடியாது, அதே நேரத்தில் ஆப்பரேஷன் செய்யும் பகுதியில் மயக்க ஊசி போட்டுவிட்டு செய்யும் போது ஆபரேசனை அவன் கண்கள் பார்க்கின்றன. ஆனால் வலி தெரிவதில்லை. எப்படி?
மயக்க ஊசி போட்டதால் அந்த பகுதி செல்கள் தற்காலிகமாக செயல் இழக்க செய்யப்படுகின்றன. அவைகளால் பாதிப்பின் செய்திகளை மூளைக்கு தெரிவிக்க முடிவதில்லை. அதனால் வலியை உணர முடிவதில்லை. வலி நிவாரண மாத்திரைகள் இதே அடிப்படையில் செய்யப்படுபவைகளே.
எந்த உறுப்புக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றது என்பதை இந்த கட்டுரை மூலம் நாம் தெரிந்துக் கொள்ள முடியும்.

நன்றி : தமிழ் இஸ்லாம்.காம்  Post  



0 கருத்துகள்
 
YASS இணைய வலயமைப்பு © 2012 | Designed by Canvas Art, in collaboration with Business Listings , Radio stations and Corporate Office Headquarters