YASS மிஹ்ரஜான்



அஸ்ஸலாமு அலைக்கும்.
..
சமூக சேவைகளுக்கான இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் 


YASS மிஹ்ரஜான்


நிகழ்வு நாளை காத்தான்குடி கடற்கரையில் அன்வர் பள்ளிவாயல் 


முன்பாக 


இடம்பெற உள்ளது. அனைத்து சகோதரர்களையும் குடும்பத்தினருடன் 


கலந்து 




கொண்டு போட்டிகளில் பரிசுகளை அள்ளிச் செல்லுமாறு அன்புடன் 






அழைக்கிறோம்.









0 கருத்துகள்

YASS 2nd Ladies Bayan (27.05.2012)

YASS அமைப்பின் ஏற்பாட்டில் பெண்களுக்கான உளவியல் விழிப்புணர்வு சொற்பொழிவு
நிகழ்வு இன்று 27.05.2012 ஞாயிற்றுக் கிழமை மெத்தைப்பள்ளி வீதி யில்
அமைந்துள்ள சமூக சேவைகளுக்கான இளைஞர் அமைப்பின் காரியாலயத்தில் அமைப்பின்
செயலாளர் AGM. மின்ஹாஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில்
'உளவியல் நோக்கில் பெண்களும் குழந்தை வளர்ப்பும்' எனும் தலைப்பில் ALM. றிஸ்வி
BA Dip. in Counseling அவர்கள் சொற்பொழிவாற்றினார்கள். இரண்டாவது வாரமாக
இடம்பெற்ற பெண்களுக்கான பயான் நிகழ்வில் பெருந்தொகையான சகோதரிகள் கலந்து
கொண்டனர். இந்த பயான் நிகழ்வு பிரதி வாரமும் புதன் கிழமைகளில் இடம்பெறுகின்றமை
குறிப்பிடத்தக்கது. 



























0 கருத்துகள்


அஸ்ஸலாமு அலைக்கும். எமது YASS அமைப்பின் இணைய வானொலிக்கு உங்கள் அனைவரயும் அன்புடன் அழைக்கின்றோம்...
நீங்களும் எமது YASS FM  ஐ செவிமடுக்க இந்த இணைய முகவரிக்கு வாருங்கள்...

      www.yassfm.listen2myradio.com


0 கருத்துகள்

YASS அமைப்பின் முதலாவது பெண்கள் பயான் நிகழ்ச்சி



YASS அமைப்பின் ஏற்பாட்டில் எமது சகோதரிகளிடத்தில் மார்க்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் எமது பிரச்சாரப் பிரிவினால் வராந்த பயான் நிகழ்வு ஒன்று காத்தான்குடி-03, மெத்தைப்பள்ளி வீதியில் அமைந்துள்ள YASS அலுவலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

எமது சமூக சேவைகளுக்கான இளைஞர் அமைப்பின் (YASS) தலைவர் MJM. மாஜித் அவர்களின் தலைமையில் இன்று (16.05.2012) அஸர் தொழுகையை தொடர்ந்து ஆரம்பமான இந்நிகழ்வில் மெத்தைப்பள்ளிவாயல் பேஷ்-இமாம் மௌலவி அல்ஹாஜ் AGM. அமீன் (பலாஹி) அவர்களால் 'இன்றைய உலகில் பெண்களின் பங்களிப்பு' எனும் தலைப்பில் சிறப்பு பயான் நிகழ்த்தப்பட்டது.

இந்நிகழ்வில் பெருந்தொகையான சகோதரிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு வாராந்தம் தொடர்ந்து நடைபெற இருப்பதுடன் அல்குர்ஆன் விளக்க வகுப்புகளையும், கேள்வி பதில், போட்டி நிகழ்ச்சிகளையும் நடாத்துவதற்கு எமது அமைப்பு ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளது.











1 கருத்துகள்
 
YASS இணைய வலயமைப்பு © 2012 | Designed by Canvas Art, in collaboration with Business Listings , Radio stations and Corporate Office Headquarters