YASS மிஹ்ரஜான்

அஸ்ஸலாமு அலைக்கும்.
..
சமூக சேவைகளுக்கான இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் 

YASS மிஹ்ரஜான்

நிகழ்வு நாளை காத்தான்குடி கடற்கரையில் அன்வர் பள்ளிவாயல் 

முன்பாக 

இடம்பெற உள்ளது. அனைத்து சகோதரர்களையும் குடும்பத்தினருடன் 

கலந்து 

கொண்டு போட்டிகளில் பரிசுகளை அள்ளிச் செல்லுமாறு அன்புடன் 

அழைக்கிறோம்.

0 கருத்துகள்

YASS 2nd Ladies Bayan (27.05.2012)

YASS அமைப்பின் ஏற்பாட்டில் பெண்களுக்கான உளவியல் விழிப்புணர்வு சொற்பொழிவு
நிகழ்வு இன்று 27.05.2012 ஞாயிற்றுக் கிழமை மெத்தைப்பள்ளி வீதி யில்
அமைந்துள்ள சமூக சேவைகளுக்கான இளைஞர் அமைப்பின் காரியாலயத்தில் அமைப்பின்
செயலாளர் AGM. மின்ஹாஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில்
'உளவியல் நோக்கில் பெண்களும் குழந்தை வளர்ப்பும்' எனும் தலைப்பில் ALM. றிஸ்வி
BA Dip. in Counseling அவர்கள் சொற்பொழிவாற்றினார்கள். இரண்டாவது வாரமாக
இடம்பெற்ற பெண்களுக்கான பயான் நிகழ்வில் பெருந்தொகையான சகோதரிகள் கலந்து
கொண்டனர். இந்த பயான் நிகழ்வு பிரதி வாரமும் புதன் கிழமைகளில் இடம்பெறுகின்றமை
குறிப்பிடத்தக்கது. 

0 கருத்துகள்

அஸ்ஸலாமு அலைக்கும். எமது YASS அமைப்பின் இணைய வானொலிக்கு உங்கள் அனைவரயும் அன்புடன் அழைக்கின்றோம்...
நீங்களும் எமது YASS FM  ஐ செவிமடுக்க இந்த இணைய முகவரிக்கு வாருங்கள்...

      www.yassfm.listen2myradio.com

0 கருத்துகள்

YASS அமைப்பின் முதலாவது பெண்கள் பயான் நிகழ்ச்சி

YASS அமைப்பின் ஏற்பாட்டில் எமது சகோதரிகளிடத்தில் மார்க்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் எமது பிரச்சாரப் பிரிவினால் வராந்த பயான் நிகழ்வு ஒன்று காத்தான்குடி-03, மெத்தைப்பள்ளி வீதியில் அமைந்துள்ள YASS அலுவலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

எமது சமூக சேவைகளுக்கான இளைஞர் அமைப்பின் (YASS) தலைவர் MJM. மாஜித் அவர்களின் தலைமையில் இன்று (16.05.2012) அஸர் தொழுகையை தொடர்ந்து ஆரம்பமான இந்நிகழ்வில் மெத்தைப்பள்ளிவாயல் பேஷ்-இமாம் மௌலவி அல்ஹாஜ் AGM. அமீன் (பலாஹி) அவர்களால் 'இன்றைய உலகில் பெண்களின் பங்களிப்பு' எனும் தலைப்பில் சிறப்பு பயான் நிகழ்த்தப்பட்டது.

இந்நிகழ்வில் பெருந்தொகையான சகோதரிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு வாராந்தம் தொடர்ந்து நடைபெற இருப்பதுடன் அல்குர்ஆன் விளக்க வகுப்புகளையும், கேள்வி பதில், போட்டி நிகழ்ச்சிகளையும் நடாத்துவதற்கு எமது அமைப்பு ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளது.

1 கருத்துகள்

வாழ்க்கை ஒரு சோதனையா? சாதனை புரிவோம்!

இன்றைக்கு நம்மில் பலருக்கு பல பிரச்னைகள். வீடில்லா சுமை, திருமணமாகாத பிரச்னை, நோய், தொழிலில் முன்னேற்றமின்னை, வேலை இல்லை, மனைவி சரியில்லை, கணவன் சரியில்லை, பிள்ளைகள் சரியில்லை என்பது போன்ற பல பிரச்னைகள். இவையெல்லாம் வாழ்க்கையின் பெரும் பிரச்னைகளல்ல. எப்படி?..! என்ற உங்கள் கேள்வி எனக்குக் கேட்கிறது. பொறுங்கள்.
இந்தப் பிரச்னைக்கு மட்டுமல்ல, வாழ்வின் எந்தப் பிரச்னைக்கும் முகம் கொடுப்பது நாம் எமது வாழ்வை எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதில் தங்கியுள்ளது. அதனை ஒரு சோதனையாக நாம் கருதினால் எல்லாமே சோதனையாகத் தான் தெரியும். அன்றி சாதனை செய்வதற்கு அல்லாஹுத்தஆலா தந்த ஒரு சந்தர்ப்பம் என்று கருதினால் அதுவும் அப்படியே ஆகும். ஏனெனில் அல்லாஹ் அல்குர்ஆனில் எமக்கு வாக்களித்திருக்கின்றான்.
மனிதனுக்கு (இவ்வாழ்வில்) முயற்சித்தவையேயன்றி வேறில்லை (53:39).
சோதனைகளைச் சாதனையாக்குவது எப்படி? அடிப்படையில் நாம் சில விஷயங்களை கவனத்திலெடுக்க வேண்டும்.
முதலாவதாக,
அல்லாஹ் நம்மால் தாங்க முடியாத கஷ்டங்களைத் தருவதில்லை. இது அல்குர்ஆனில் அல்லாஹ் எமக்களித்திருக்கும் வாக்குறுதி. அவன் வாக்குறுதி மீறுபவனல்ல.
அல்லாஹ் ஒரு நப்ஸுக்கு அதன் சக்திக்கு மீறி நிர்ப்பந்திப்பதில்லை. (அல் பகறா : 286).
எனில், இதை இன்னொரு விதமாகக் கூறப் போனால் எந்தக் கஷ்டத்தையும் அல்லாஹ் தரும் போது அதைத் தாங்கக் கூடிய சமாளிக்கக் கூடிய சக்தியையும் எமக்குத் தந்தே இருப்பான். அந்தத் திறனை நாம் உணர்ந்து கொண்டு, தெரிந்து கொண்டு செயல்படுவதில் தான் எமது திறமை சோதிக்கப்படுகிறது. இது முதலாவது காரணம்.
இரண்டாவதாக,
எந்தக் கஷ்டமுமே, அல்லாஹ் அறியாமல், அவன் அனுமதியின்றி எமக்கு நேர்வதில்லை. எமக்கு நிகழும் நன்மைகள் யாவும் அவனிடமிருந்தே வருபவை. தீமைகள் யாவும் எமது கைகள் சம்பாதித்தவை. எனில் எமது சக்தியை மீறி நடக்கக் கூடியவை யாவும் அவனிடமிருந்தே வருகின்றன. அதாவது, அவற்றில் எதுவுமே தீயதாக இருக்க முடியாது. எந்தப் பெரிய கஷ்டத்திலும் ஒரு லநவ மறைந்திருக்கும். எந்தச் சோதனையிலும் அல்லாஹ்வின் ரஹ்மத் ஒளிந்திருக்கும். அதைக் கண்டு கொண்டு அதன் பலாபலன்களைப் பெற்றுக் கொள்வது தான் இவ்வுலக ரகசியம். இன்னொரு விதமாகச் சொல்லப் போனால் எமக்கு வரும் கஷ்டங்கள் யாவும் அல்லாஹ் எனும் அளவற்ற அருளாளனான பரீட்சகர் எமக்களிக்கும் ஒரு பரீட்சை. அவை யாவற்றையும் எப்படியும் மேற்கொண்டு வெற்றி கொள்ளலாம். ஏனெனில் அல்லாஹ் எம்மை எப்போதும் கண்காணித்தவனாக, அக்கஷ்டங்கள் எங்களை மீறி விடாமல் எமது மனப்பாங்கிற்கேற்ற வழிவகைகளை அமைத்துக் கொடுப்பவனாக என்றும் எப்போதும் எம்முடனேயே இருக்கின்றான் என்ற அந்த மனப்பான்மையை நாம் உறுதிப்படுத்திக் கொள்ள முடியுமாயின் இவ்வாழ்வின் சோதனைகள் யாவுமே ஒரு தற்காலிகப் பரீட்சையாக வெற்றிக்கு வித்திடும் படிக்கற்களாக எமக்குத் தோற்றும்.
மூன்றவதாக,
முக்கியமாக, இந்த வாழ்வு மறுவுலக வாழ்வின் படிக்கல் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இவ்வுலக வாழ்வு மறுவுலக வாழ்வுடன் ஒப்பிடும் போது ஒரு ஈயின் ஒரு இறக்கைக்குக் கூட சமானமானதல்ல. எனவே பெரிதாகத் தெரியும் எதுவுமே உண்மையில் பெரிய விஷயங்களல்ல. எமது வாழ்வின் அதாவது ஈருலக வாழ்வின் முழப் பரிமாணத்தையும் கணக்கிடும்போது இவையெல்லாம் பெரிய விஷயங்கள் அல்ல என்பது எமக்கு நினைவிலிருக்க வேண்டும். இளம் வயதில் பெரிதாகத் தெரிபவை பின்னால் தூசாய்ப் போகும். இன்று கவலைக்குரியவை நாளைக்கு சிரிப்பாய் மாறும். இதற்கெல்லாம் உறுதுணையாய், அல்லாஹ் எமக்கு மறதி, தூக்கம், மனமுதிர்ச்சி இப்படியான நிஃமத்துக்களை தந்துள்ளான். இவை யாவற்றினதும் பாதிப்புகள் பலாபலன்களையெல்லாம் அன்றே சிந்தித்து, உணர்ந்து கொண்டால் இவ்வாழ்க்கையின் எந்தப் பிரச்னைகளையும் எதிர் கொண்டு வெற்றி கொள்வது கஷ்டமாகத் தெரியாது.
இவையெல்லாம் சாதாரண மனிதனுக்கெட்டாத பெரும் தத்துவங்களாகத் தெரியலாம். இவற்றை யதார்த்தத்திற்குக் கொண்டு வருவது எப்படி? மிக இலகு!
அடிப்படையில் இந்த மாற்றத்தை உங்கள் உள்மனம் வேண்ட வேண்டும். அதற்கான துஆக்கள் பலவற்றை எம்பெருமானார் (ஸல்) அவர்கள் சொல்லித் தந்திருக்கின்றார்கள். மிகச் சுலபமான ஓரிரு துஆக்களைக் குறிப்பிடுகிறேன்.
சூரா பாத்திஹாவில் வரும்,
இய்யாக்க நஃபுது வ இய்யாக்க நஸ்தஈன்
நேர்வழியில் சீராக நடத்தி வைப்பாயாக, என்ற வசனங்களை ஓதும் ஒவ்வொரு முறையும் மானசீகமாக அல்லாஹ்விடம் இறைஞ்சுங்கள்.
சூரா அத்தலாக்கின் 2-3 வசனங்களை
வமய் யத்தகில்லாஹ யஞ்அல்லஹு மக்ரஜா
அதன் கருத்தை மனதில் கொண்டு அல்லாஹ்வின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு ஓதி வாருங்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் அல்லாஹும்ம இன்தக அஹ்தஸபு முஸிப்னீ ஃபஅஜ்ஸனீ ஃபீஹா வப்தல்னீ ஃபீஹா ஐஹரா
நாம் அல்லாஹ்விடம் இருந்தே வந்திருக்கிறோம். அவனிடமே மீளவிருக்கிறோம். யா அல்லாஹ்! இந்தப் பிரச்னையை நாம் உன்னிடம் சாட்டுகிறேன். இதற்குக் கூலியும் தந்து இதையே நல்லதாக மாற்றியும் வைப்பாயாக!
இவற்றை ஓதும் அதே வேளையில் குர்ஆனை உங்கள் உற்ற துணையாக்கிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் குர்ஆனின் ஒரு பக்கமாவது கட்டாயம்ஓதுவது என்று பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். அதே சமயம் குர்ஆன் மொழிபெயர்ப்பையும் வாசிப்பதைத் தவறாது அன்றாடப் பழக்கத்தில் கொண்டு வாருங்கள். குர்ஆன் விளக்கம் கொண்ட புத்தகங்களை வாங்கியோ தெரிந்தவர்களிடம் இரவலாகப் பெற்றுக் கொண்டோ வாசித்து வாருங்கள்.
அல்லாஹ்வுக்குமிகவும் விருப்பமான இந்த விசயங்களைச் செய்து கொண்டு வர ஷைத்தான் உங்களை விட்டு வைக்க மாட்டான். தனிhயகச் செய்ய முயன்றால் மனசு ஊசலாட்டம் காட்டும். எனில் இயன்றவரை இன்னும் சிலரைச் சேர்த்துக் கொள்ளுங்கள். வீட்டாரையோ தோழிகளையோ அல்லது அண்டை அயலாரையோ சேர்த்துக் கொள்ளுங்கள். ஒருவருமே இல்லாவிட்டால் பேனா நண்பர்களையாவது சேர்த்துக் கொண்டு ஒருவருக்கொருவர் ஊக்கமும் எச்சரிக்கையும் செய்து கொள்ளுங்கள்.
மிக முக்கியமாக தொலைக்காட்சி பார்ப்பதைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். செய்தி, படிப்பினை போன்ற விஷயங்களுக்கல்லாமல் வெறுமனே சினிமா, பாடல்கள் இவையெல்லாம் தொகை;காட்சியில் ஒளிபரப்புகிறார்கள். எமக்கும் வேலையில்லைதானே என்று இந்தக் குட்டிச் சாத்தானின் முன் அமர்வதை நிறுத்திக் கொள்ளவும். இப்லீஸ் முதன் முதலாக அல்லாஹ்வுக்கு மாறு செய்து, அவனுக்கு முன்விட்ட சவால் என்ன? ஆதமின் மக்களுக்கு அழகானதை அசிங்கமாகவும் தோன்றச் செய்வேன் என்பது தானே! அந்தச் சங்கல்பத்தை அவன் செயல்படுத்தும் மிக இலகுவான சாதனம் இந்த தொலைக்காட்சி.
குடும்பம், வெட்கம், மானம், இறைபக்தி இவற்றையெல்லாம் அவசியமற்றவையாக்கி கண்டவனோடு ஓடிப்போவதையும், குடும்பத்தை எதிர்த்து மாற்றானோடு காதல் கொண்டு வெற்றி கொள்வதையும் நியாயப்படத்தி, இது தான் வாழ்க்கை என்ற மாயத் தோற்றத்தை உருவாக்கும் பயங்கர சாதனம் இந்த தொலைக்காட்சி. சங்கீதமும், ஆண்-பெண் கவர்ச்சியும், கீழ்த்தர பாலின உணர்வுகளும் அன்றாட வாழ்வின் சர்வசாதரண நிகழ்வுகள். எனவே நாமும் அவற்றில் ஈடுபட்டாக வேண்டும் எனும் போதையை ஊட்டும் ஒரு சாத்தானின் கைங்கரியம்.
என் வாழ்வில் நான் வெற்றி பெற வேண்டுமானால் என் மனதை நான் முதலில் வெற்றி கொள்ள வேண்டும் என உணர்ந்த ஒவ்வொருவரும் முதன் முதலில் செய்ய வேண்டியது, நம் வீட்டுக்குள் சுகமாக வீற்றிருக்கும் இந்தச் சாத்தானுக்கு அடிபணிவதில்லை என்ற கங்கணத்தை மனதில் கொண்டு அதை அமுல்படுத்துவதுதான், வீட்டில் வேலையற்றிருக்கும் பெண்களின் மனதை வழிகெடுக்கும் பெரிய தஜ்ஜால் இந்த தொலைக்காட்சி. யார் வாழ்வில் வெற்றி பெற விரும்புகிறீர்களோ, முதலில் இப்படியான விஷயங்களில் மனதைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி பெறுவது அவசியம்.
வீட்டில் மற்ற எல்லோரும் பார்க்கிறார்களே நான் எப்படிப் பார்க்காமல் இருப்பது? என மனது ஊசலாடும். இத்தகைய ஊசலாட்டங்களை எடுத்துக் கொண்டு வெற்றி பெறுவதில் தான் வாழ்க்கையின் ரகசியமே இருக்கிறது. இதில் நீங்கள் முயன்று முன்னேறினால் தானாகவே ஒரு தன்னம்பிக்கையும் உள்மனச் சந்தோசமும் உண்டாகும். முயற்சித்துப் பாருங்கள். எதிர்பாராத ஒரு திருப்தியும் வெற்றி மனப்பாங்கும் கிடைக்கும்.
அடுத்ததாக இவ்வளவு நாளும் வீணாக தொலைக்காட்சிக்கு முன் கழித்த அந்த நேரத்தை எப்படி நல்ல முறையில் பயன்படுத்தலாம் என எண்ணிப் பாருங்கள். இதோ சில யோசனைகள்.
எப்போதும் புதிய கலைகளைக் கற்றுக் கொள்ள முயலுங்கள். ஒரு மனிதன் விசேடமாக பெண் என்றுமே புதிய விசயங்களைக் கற்றுக் கொள்வதை நிறுத்தக் கூடாது. சில சமயங்களில் இதைக் கற்றுக் கொண்டு என்ன பயன்? என நினைக்கத் தோன்றும். ஆனால் எந்தக் கல்வியும் வீண் போவதில்லை. என்றோ எங்கோ ஏதோ ஒரு விதத்தில் அவை கை கொடுக்கும்.
உங்களுக்குத் தஜ்வீத் முறைப்படி குர்ஆன் ஓதத் தெரியுமா? தெரியா விட்டால் யாரிடமாவது ஓதக் கற்றுக் கொள்ளுங்கள். இது இலகுவில் ஒதே நாளில் கூட கற்றுக் கொள்ளக் கூடியது. ஆயினும் ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய வாஜிபான சுன்னத்தாகும்.
அரபு மொழி - ஊரில், வசதியில்லா விட்டால் தபால் மூலம் கற்றுக் கொடுக்கும் சில நிறுவனங்கள் உள்ளன. செலவும் மிகக் குறைவு. அல்லாஹ்வின் கலாமான குர்ஆனை விளங்கிக் கொள்ள வேண்டும் என்ற நிய்யத்தை வைத்துக் கொண்டு தொடங்குங்கள். நீங்கள் எதிர்பாராத விதத்தில், அதிசயமான முறையில் உதவிகளும் வசதிகளும் உங்களுக்குக் கிடைக்கும்.
மற்றும் பெண்களுக்குத் தேவையான தையல், சமையல், பின்னல் இவற்றை நண்பிகள் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொடுத்தோ முதியவர்களிடமிருந்தோ கற்றுக் கொள்ளலாம். இவையெல்லாம் தொழிற்பயிற்சிப் பள்ளிக்குப் போய்த்தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்றில்லை. அப்படி ஒரு வசதி இருந்தால் போகலாம். அப்படியான பயிற்சிப் பள்ளிகள் இல்லைஎனில், அல்லது வசதி இல்லா விட்டால் அண்டை அயலார், தாய் மற்றும் பெற்றோரிடம் கேட்டுப் பாருங்கள். அங்கெல்லாம் எப்படிப்பட்ட திறமைகள் ஒளிந்திருக்கின்றன என்ற உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும்.
பத்தரிக்கைகள், சஞ்சிகைகளுக்கு இப்படியான கருத்துக்கள் அல்லது கவிதைகள் எழுதிப் பாருங்கள். போட்டிகளில் கலந்து கொள்ளுங்ள் (கலந்து கொள்ளும் போட்டிகள் ஹலாலானதா? என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்) வெற்றியைப் பற்றி கவலைப்பாடாதீர்கள். பங்கு  கொண்டோம் என்பதில் சந்தோஷப்படுங்கள். உங்கள் திறமை உங்களையே ஆச்சரியத்தில் வீழ்த்தக் கூடும்.
நீங்கள் ஆங்கிலம், சிங்களம் தெரியாதவராக இருப்பின் அவற்றைக் கற்றுக் கொள்ள முயலுங்கள். ஒரு வழமையான வகுப்பாக இல்லா விட்டாலும் இம் மொழிகளைப் பேசத் தெரிந்த யாராவது இருப்பின் அவர்களுடம் பேசியாவது பழகிக் கொண்டு வாருங்கள்.
அன்றாடப் பத்திரிக்கைகளை வாங்கிப் படியுங்கள். சினிமா, பாட்டு, நாடகம் இவற்றை விட்டு ஊர், உலக நடப்புகளைத் தெரிந்து கொள்ளுங்கள். உங்களால் உதவி செய்ய முடியா விட்டாலும் மற்ற முஸ்லிம்களுக்காகவாவது செய்யலாம்.
இவையெல்லாம் கூட்டாகச் செய்ய முடியுமானால் ஒருவருக்கொருவர் ஊக்கமும் அறிவுரையும் கொடுத்துக் கொள்ளலாம். மனக் கவலைகளுக்கு நேரமும் இராது. கடைசியாக சில சமூக சேவைகளில் ஈடுபடலாம்.

உங்கள் கணினியை தொலைவில் உள்ள நண்பரிடம் பகிர்வது எப்படி?

நாம் கோப்புகளை இது வரை பகிர்ந்து வந்தோம். இதற்கு நமக்கு இந்த இணையதளங்கள் உதவின.

4shared.com
rapidshare.com
megaupload.com
mediafire.com

(இது போன்று மேலும் பல உள்ளன).

ஆனால் TeamViewer

* Remote Support
* Presentation
File transfer
* Vpn

இவை எல்லாவற்றையும் நமக்கு மிக எளிதாக அளிக்கிறது.

மேலும் இதை

இதை நமக்கு தேவையான பயன்பாடுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.

High Security வழங்கிறது.நம் கணினி மற்றும் இனைய இணைப்பை பொருத்து வேகம் இருக்கும்.

www.teamviewer.com இங்கு சென்று இதன் இலவச பதிப்பை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் கணினியை மற்ற கணினி உடன் இணைக்கும் பொழுது. உங்கள்teamviewer Id மற்றும் Password-ய் தெரியப்படுத்தி இணைத்து கொள்ளலாம்.

Teamviewer Install செய்த பின்பு Open செய்து 1நிமிடம் காத்திருந்தால் பண்ணினால் Id மற்றும் Password கிடைக்கும்.

(Id மற்றும் Password உதாரணத்திற்கு படத்தினை பார்க்கவும் )

0 கருத்துகள்

இணைய இணைப்பு இல்லாமல் ஜிமெயிலை பயன்படுத்துவதற்கு...

கூகுளின் ஜிமெயிலை அனைவரும் உபயோகிக்கிறோம் நாளுக்கு நாள் புது புது வசதிகளை அறிமுகபடுத்துவதால் அனைவரும் ஜிமெயிலை பயன்படுத்துகிறோம்.

அதில் ஏதாவது ஒரு நேரத்தில் நமக்கு ஏதேனும் முக்கியமான மின்னஞ்சல் வந்துள்ளதா என சோதிக்க வேண்டும் அல்லது யாருக்கேனும் முக்கிமாக ஒரு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் சரியாக அந்த நேரம் பார்த்து நம்முடைய கணணியில் இணைய இணைப்பு துண்டிக்கபட்டிருக்கும் அல்லது நாம் வேறு எங்காவது வெளியில் இருப்போம் மடிக்கணணியில் இணைய இணைப்பு இருக்காது. அது போன்ற சமயங்களில் நமக்கு உதவி செய்யவே கூகுள் ஒரு அருமையான வசதியை வெளியிட்டுள்ளது.

ஓப்லைனில் நம்முடைய ஜிமெயிலுக்கு வந்துள்ள மின்னஞ்சலை பார்க்கலாம் மற்றும் நாம் மற்றவர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பலாம் மற்றும் ஓன்லைனில் செய்யும் அனைத்து வேலைகளையும் நாம் இன்டர்நெட் கனெக்சன் இல்லாமலே செய்யலாம்.

இதற்கு நீங்கள் கூகுள் குரோம் உலவியை பயன்படுத்த வேண்டும். அடுத்து இந்த லிங்கில் Offline Google Mail சென்று நீட்சியை உங்கள் உலவியில் இன்ஸ்டால் செய்யுங்கள்.

இந்த நீட்சியை உங்கள் உலவியில் இணைத்தவுடன் ஒரு புதிய டேப்(tab) உருவாகும் அல்லது நீங்களே ஒரு New tab உருவாக்குங்கள்.

இப்பொழுது புதிய டேபில் நீங்கள் தற்பொழுது இணைத்த Offline Google Mail ஐகானும் இருக்கும் அதில் கிளிக் செய்யுங்கள்.

உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் Allow Offline Mail என்பதை தேர்வு செய்யவும்.

இந்த விண்டோவில் கீழே பகுதியில் உங்களின் மின்னஞ்சல் ஐடி காட்டும் அதில் எந்த ஐடிக்கு நீங்கள் ஓப்லைனில் பார்க்க வேண்டுமோ அதை தேர்வு செய்து கொண்டு Continue பட்டனை அழுத்துங்கள்.

அவ்வளவு தான் Continue அழுத்தியவுடன் உங்களின் மின்னஞ்சல் திறக்கும் அந்த ஐடிக்கு வந்த அனைத்து  மின்னஞ்சல்களும் காட்டும்.

இதில் உங்கள் இன்பாக்ஸில் உள்ள அனைத்து மின்னஞ்சல்களும் காட்டும். அந்த மின்னஞ்சலுக்கு நீங்கள் Reply போடலாம், அல்லது அந்த மின்னஞ்சலை அப்படியே Forward செய்யலாம் அல்லது புதியதாக நீங்களே ஒரு மின்னஞ்சலை Compose பட்டனை அழுத்தி அனுப்பலாம் மற்றும் ஏதாவது ஒரு பைலை attachment செய்து அனுப்பும் வசதியும் உள்ளது அனைத்தும் இணைய இணைப்பு இல்லாமலே.

மேலும் ஓன்லைனில் உள்ள Move, Label, Mute, Report Spam,Print, Mark as Read போன்ற இதர முக்கியமான வசதிகளும் நீங்கள் ஓப்லைனில் பயன்படுத்தி கொள்ளுங்கள். மேலும் Menu பட்டனை அழுத்தினால் இன்னும் பல வசதிகள் உள்ளது. இதன் மூலம் Chat History கூட பார்த்து கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு. இவ்வாறு ஒட்டுமொத்த வசதிகளையும் நாம் இணைய இணைப்பு இல்லாமேலே பயன்படுத்தி கொள்ளலாம்.

 நன்றி :தகவல் தொழில்நுட்ப செய்திகள்  Post

0 கருத்துகள்
 
YASS இணைய வலயமைப்பு © 2012 | Designed by Canvas Art, in collaboration with Business Listings , Radio stations and Corporate Office Headquarters